முதல் வணக்கம்

என் மனங்கவர்ந்த பாடல்கள், நான் கண்ட ஒலிப்பேட்டிகள், வானொலிப் படையல்களின் அணிவகுப்புக்கான இல்லம் இது.

நேசம் கலந்த நட்புடன்
-கானா.பிரபா-

21 thoughts on “முதல் வணக்கம்

 • பிரபா!

  நேசமுடன் வரவேற்கின்றேன்.
  வாழ்த்துகின்றேன்.

  அப்பாடா! மடத்துவாசல் பிள்ளையார் கருணைகூட்டிற்றார்.:))

 • மதி, மலைநாடான், ஷ்ரேயா, செல்லி, சினேகிதி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

  தனியே இது வானொலிப்படைப்பாக இல்லாது நான் ரசித்தபாடல்கள் அவற்றின் பின்னணியில் உள்ள கதை போன்றவற்றோடு வரும்.

 • நல்ல முயற்சி பிரபா. வாழ்த்துக்கள். அப்ப உங்கள் முற்றத்து மல்லிகையை இனி இங்கே கேட்கலாமா?

 • உற்சாகப்படுத்தலுக்கு நன்றி அண்ணா, பொதுவான ஒலிப்பக்கமாக எல்லாம் வரும் 😉

 • சரி.. விரைவில் நாங்களும் புளொக்கில ஒரு ரிவி தொடங்கிட வேண்டியது தான்.
  ரிவிஸ்பதி.. பெயர் நல்லாயிருக்கோ..

 • கொழுவி,

  நல்லாயிருக்கும் தொடங்குங்கோ 😉

  றேடியோஸ்பதி என்ற பெயரை நான் வைக்கக் காரணம், யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஒலிப்பதிவுகூடத்துக்கு இதே பெயர் தான் இருந்தது.

 • //மங்கை said…
  வாழ்த்துக்கள் பிரபா..

  ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்//

  மிக்க நன்றிகள் மங்கை

 • யோகன் அண்ணா

  முடிந்த வரை தங்களின் ஆசையைப் பூர்த்திசெய்கின்றேன்

 • அந்த பஸ் கண்டக்டர் பதிவுக்குப்பிறகு ஒலிப்பதிவுக்கு தனியே
  ஏன் வலைப்பதிவு ஆரம்பிக்கக் கூடாது என்று யோசனை சொல்லலாம் என்று இருந்தேன்.

  பணிச்சுமைக்கு இடையே பதிவுகளில் செலவிடும் நேரமும் உழைப்பும்
  பாரட்டத்தக்கது

 • மிக்க நன்றி கார்திக், நேர அவகாசம் பொறுத்து இப்பதிவும் அடிக்கடி வரும் 😉

 • என்ன றேடியோஸ்பதி என்று பெயர் வைத்திருக்கிறீர்களே என்று பார்த்தேன், இப் பெயரை உங்கள் பதிவிற்கு வைத்ததன் காரணத்தினை நீங்கள் கொடுத்த விளக்கத்தின் மூலம் அறிந்து கொண்டேன், நன்றிகள். றேடியோஸ்பதி என்பதன் அர்த்தம் என்ன? காரணப் பெயரா அல்லது வேறு ஏதாவது, சாத்திரத்தின் நிமித்தம்… ற வரியில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அந்த நிறுவனத்திற்கு வைத்துக் கொண்ட பெயரா?

 • வாழ்த்துகள் அண்ணே !!!
  //தனியே இது வானொலிப்படைப்பாக இல்லாது நான் ரசித்தபாடல்கள் அவற்றின் பின்னணியில் உள்ள கதை போன்றவற்றோடு வரும்.//

  இனி அடிக்கடி இசையும் கதையும்
  கேக்கலாம்

 • //Haran said…
  ற வரியில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அந்த நிறுவனத்திற்கு வைத்துக் கொண்ட பெயரா?

  ஹரன்

  அவை ஏன் றேடியோஸ்பதி எண்டு வச்சவை எனத்தெரியாது, புதுமையாக இருக்கும். பதி என்றால் இல்லம் எண்டும் அர்த்தம் தானே.

  //Thillakan said…

  இனி அடிக்கடி இசையும் கதையும்
  கேக்கலாம்//

  தம்பி திலகன், பிரபா அண்ணையோட ஒரு சேட்டை உங்களுக்கு 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *