நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்

இன்று அக்டோபர் 1 ஆம் திகதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினமாகும். எனவே ஒரு சிறப்புத் தொகுப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் தொகுப்பை YouTube தொகுப்பாக இங்கே பகிர்கின்றேன்.

தொகுப்பில் இடம்பெறும் படங்கள்
நான் வாழ வைப்பேன்
தீபம்
பட்டாக்கத்தி பைரவன்
தியாகம்
கவரிமான்
நல்லதொரு குடும்பம்
ரிஷிமூலம்
வெள்ளை ரோஜா
எழுதாத சட்டங்கள்
ரிஷிமூலம்
வாழ்க்கை
படிக்காதவன்
சாதனை
தாய்க்கு ஒரு தாலாட்டு
ஜல்லிக்கட்டு
முதல் மரியாதை
நாங்கள்
தேவர் மகன்
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்)

பி.கு கிருஷ்ணன் வந்தான், படிக்காத பண்ணையார் போன்ற படங்களிலும் இளையராஜா இசை இடம்பெற்றாலும் பொருத்தமான பாடல்களைப் பகிர இயலவில்லை.

இந்தப் பகிர்வின் முகப்புப் புகைப்படம் நன்றி www.chakpak.com
இந்தப் பகிர்விற்குப் பாடல் தோடியபோது கைக்கெட்ட உதவிய YouTube இல் பகிர்ந்திட்டவர்களுக்கும் நன்றி

7 thoughts on “நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்

 • நண்பர் கானா பிரபா சார்
  எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த இளையராஜ் இசையில் 'வெற்றிக்கு ஒருவன்' திரைபடத்தில் நல்ல பாடல்கள் உள்ளன.
  'தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி ' -டிஎம்எஸ் ,ஜானகி
  'ஆடல் பாடலில் உலகமே ' – டி எம் எஸ்
  'முத்தமிழ் சரமே ' -டி எம் எஸ் ,சைலஜா
  இதையும் சேர்த்து கொள்ளுங்கள்

 • மிக்க நன்றி நண்பரே
  வெற்றிக்கு ஒருவன் படத்தில் இருந்து தோரணம் ஆடிடும் பாடலைச் சேர்த்திருக்கிறேன் இப்போது.

 • நண்பர் கானாபிரபா அவர்களுக்கு

  உயிரே உனக்காக 1984 என்று ஒரு படத்தில் 3 பாடல்கள் பார்த்தேன் ஒரு வலைப்பூவில் பிரபு சுலக்ஷ்னா நடித்து பூஜையுடன் நின்ற படம் என்று கேள்விபட்டேன். இது பற்றி தகவல்கள் கொடுக்கமுடியுமா சார் இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்வியாக இருந்தாலும் இளையராஜ் இசை அமைத்த படம் என்பதால்

 • வணக்கம் நண்பரே அந்தப் படம் குறித்து மேலதிக தகவல்கள் எனக்கும் தெரியவில்லை, கிட்டும் போது கண்டிப்பாகப் பகிர்கின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *