« கீதாஞ்சலி => இதயத்தை திருடாதே இசைத்தொகுப்பு | Main | சிட்னியில் ஒளிர்ந்த “வைர(த்தில்) முத்து(க்கள்) »
இளையராஜா இசையமைப்பதைக் கேளுங்கள்
By admin | July 2, 2010
இளையராஜாவின் பாடல்கள் நண்பர் ரவிசங்கர் ஆனந்த் போன்ற இனிய நட்புக்களைத் தந்திருக்கின்றது. அந்தவகையில் அவர் தந்த ஒரு அரிய பொக்கிஷத்தை இங்கே தருகின்றேன்.
ஒரே முத்தம் திரைப்படம் ஜெய்கணேஷ், சுமித்திரா நடிக்க இசைஞானி இளையராஜா இசையில் 1980 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “பாவையர்கள் மான் போலே” என்ற பாடலை இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்கும் போது ஒலிப்பதிவுக்கூடத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவையே பகிர்கின்றேன். இன்றைக்கு எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்து வெட்டி ஒட்டி நகாசு வேலை எல்லாம் பண்ணிப் பார்த்து உருவாக்கும் நிலமை இருக்கின்றது. ஆனால் 30 வருஷங்களுக்கு முன் பாடகர்கள், இசை ஆவர்த்தனம் எல்லாம் ஒருசேரக் குழுமினால் தான் ஒரு பாடல் பிரசவிக்கும் என்ற நிலை. அந்தப் பழைய நினைவுகளை இந்த ஒலிப்பதிவு சாட்சியம் பகிர்கின்றது.
இந்த ஒலிப்பதிவை ரவிசங்கர் ஆனந்த் இன் நண்பர் சிங்கப்பூர் அலெக்ஸ் அவர்கள் வைத்திருந்த ஒலிக்களஞ்சியத்தில் இருந்து பெற்றராம். இருவருக்கும் நன்றிகளை இதேவேளை தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து அந்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ அழைக்கின்றேன்.
“பாவையர்கள் மான் போலே” என்ற அந்தப் பாடல் உருவான போது செய்த இசை ஒத்திகை
“பாவையர்கள் மான் போலே” பாடல் முழுமையாகப் பிரசவித்த போது
முன் சொன்ன பாடலைப் பலருக்குத் தெரியவிட்டாலும் இதே படத்தில் வந்த, ஜெயச்சந்திரன் பாடும் “ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா” நிறையப்பேருக்குப் பரிச்சயம். அந்தப் பாடலைக் கேட்க
Topics: Uncategorized |

July 2nd, 2010 at 11:56 am
பிரேசில் தோற்ற நேரத்திலா பதிவை வெளியிடுவீங்க ?
July 2nd, 2010 at 11:58 am
தல
பிரேசிலுக்கும் மொட்ட பாஸுக்கும் முடிச்சுப் போடாதீங்க
July 2nd, 2010 at 12:12 pm
nice thanks for sharing
see this video in Youtube= Vaali, Raja compositong of song KAATRIL VARUM GEETHAME EN KANNANAI…
http://www.youtube.com/watch?v=QKu1SbSxrZU
July 2nd, 2010 at 12:48 pm
மறந்தே போயிருந்த பாடல். நெடு நாள் கழித்து உங்கள் புண்ணியத்தில் கேட்டு மகிழ்ந்தேன்.
July 2nd, 2010 at 12:53 pm
நம்ம தலைவரின் அந்த கால “மேஸ்திரி” குரல் சூப்பர்.பாலு வரலேன்னா அவரே பாடி ரிகார்ட் ஆகி இருக்கும்.லொள்ளு ஜாஸ்தி.
“காற்றில் எந்தன் கீதம்” பாட்டு ரிக்கார்ட் செய்யும் போது “ஒலிப்பதிவுகள்” காற்றில் எங்கவாது இருக்கும். ஸ்கேன்
பண்ணிப் புடிங்க தலைவா!
கேட்டா மெய் சிலிர்க்கும்.
July 2nd, 2010 at 12:54 pm
TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: com.google.layouts.framework.widgetview.GoogleMarkupException: No dictionary named: 'post' in: ['blog'] //
இதை கொஞ்சம் பார்க்கிறது…
July 2nd, 2010 at 1:04 pm
தல என்கிட்டயும் அலெக்ஸ் கிட்டயும் இருக்கும் வரை தான் அது பொக்கிஷம். றேடியோஸ்பதில போட்டாச்சுன்னா அது உலக பொதுமறை
July 2nd, 2010 at 1:44 pm
என்ன அற்புதம்! உங்களுக்கும், நண்பர் ரவிக்கும் என் நன்றிகள். கேட்கும் போது சர்வ சாதாரனமாய் தெரியும் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் இந்த மகா கலைஞனின் கடின உழைப்பும் அவருக்கு தோள் கொடுத்த இசை கலைஞர்களும் பாடு படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒலிப்பதிவு சாட்சி. எப்படி முப்பது வருடங்களுக்கு மேலாக ஒரே வேலையை (இசை அமைப்பது) வேறெந்த கவனச் சிதறலும் இல்லாமல் கட்சிதமாக இவரால் செய்ய முடிகிறது? இதனால் தான் இவரை இசை மேதை என்று கூருகிறமோ?
July 2nd, 2010 at 2:43 pm
சூப்பரு ;))
தல & தல ரொம்ப நன்றி ;))
July 2nd, 2010 at 2:43 pm
@ இளா அண்ணே இதொல்லாம் ஓவரு ஆமா ;)))))
July 3rd, 2010 at 2:20 am
Thanks
July 3rd, 2010 at 3:18 am
நல்ல ஒலிப்பதிவு. மிக அருமை. ஒரு பாடல் உருவாகும் ஒத்திகை கேட்பதற்கு மிகப் புதுமையான பழமையாக இருந்தது.
நீங்கள் சொன்ன ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா நல்ல பரிச்சயம்.
இந்தப் பாடலைக் கேட்கையில் இளையராஜா இசையில் டி.எம்.எஸ் பாடி வந்த "சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி" பாடல் நினைவிற்கு வருகிறது.
கவியரசரின் இறுதிக்காலத்தில் அமெரிக்காவிற்கு வைத்தியம் பார்க்கச் சென்றிருந்தார். அப்பொழுது இதே போல இசை ஒத்திகையைப் பதிவு செய்து எம்.எஸ்.வி அமெரிக்காவிற்கு அனுப்பினாராம். ஆனால் அது சென்று சேர்வதற்குள் கவியரசர் இறைவனடி சென்று சேர்ந்து விட்டாராம். அந்த ஒலிக்கோப்பு கிடைத்தாலும் பதிவிடுங்கள்.
July 3rd, 2010 at 9:42 am
//பாலு வரலேன்னா அவரே பாடி ரிகார்ட் ஆகி இருக்கும்.லொள்ளு ஜாஸ்தி.// - ஒரு வேளை ஜானகி அம்மா வரலேன்னா? :)))
//"சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி"// - தேடிபாப்போம்…
அனைவருக்கும் நன்றிகள்
~ரவிசங்கரனாந்து
July 3rd, 2010 at 9:49 am
ஒரு விஷியம் கவனிச்சீங்களா ? ராஜா சார் சொல்லிகுடுத்த மாதிரி துளி கூட மாறாம பாலு சார் பாடியருக்கார்..
July 3rd, 2010 at 10:59 pm
ராம்ஜீ
இந்த வீடியோவைத் தேடிக்கொண்டிருந்தேன் மிக்க நன்றி நண்பா
வருகைக்கு நன்றி தமிழ் உதயம்
வாங்க ரவிஷங்கர்
ஜானி ஒலிப்பதிவு அனுபவம் நிச்சயம் வெகு சிறப்பானதாக இருக்கும் ஆனால் அது கிட்டுமோ தெரியவில்லை
இளா
பார்க்கிறேன்
July 4th, 2010 at 10:51 pm
மீனாட்சி சுந்தரம்
நீங்கள் சொல்லும் கருத்துக்கள் தான் எனக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள்.
தல கோபி
நன்றி
வருகைக்கு நன்றி புனிதா
வாங்க ராகவன்
கவியரசரின் அந்தப் பாடல் தேடுவந்து பெரும் சிரமமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அறிந்திராத தகவல்களுக்கு நன்றி
July 5th, 2010 at 12:04 am
தல,செம சூபர் பகிர்வு,ராஜாசார் ஆரம்ப கால குரல் கணீர்,என்னிடம் காற்றில் வரும் கீதமே-கண்ணனே அறிவாயோ? ,வித் வாலி டிவெலெபிங் சாங் இருக்கு,வேணும்னா சொல்லுங்க!!!
July 5th, 2010 at 8:19 am
கீதப்ப்ரியன்|Geethappriyan| said…
தல,செம சூபர் பகிர்வு,ராஜாசார் ஆரம்ப கால குரல் கணீர்,என்னிடம் காற்றில் வரும் கீதமே-கண்ணனே அறிவாயோ? ,வித் வாலி டிவெலெபிங் சாங் இருக்கு,வேணும்னா சொல்லுங்க!!!//
வாங்க தல, வச்சுக்கிட்டு வஞ்சனை பண்ணலாமா, உடனே அனுப்புங்க
July 7th, 2010 at 10:07 am
//காற்றில் எந்தன் கீதம்” பாட்டு ரிக்கார்ட் செய்யும் போது “ஒலிப்பதிவுகள்” //
கிடைத்தால் இங்கே போடுங்கள், pl.