றேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் “என்ன தமிழ்ப்பாட்டு”


வணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று வித்தியாசமாக, தெலுங்கில் இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களைக் கொடுக்கிறேன். இந்தப்பாடல்களின் மெட்டுக்களில் இளையராஜா இசைமைத்த தமிழ் வடிவப்பாடல்களை நீங்கள் குறிப்பிடவேண்டும், இந்தத் தமிழ்ப்பாடல்கள் எல்லாமே தெலுங்கிலிருந்து நேரடியாக வெளிவந்த படங்களின் டப்பிங் படங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்தப் பாடல்கள், கேட்டு, பார்த்து, யோசித்துப் பதிலோடு வாருங்கள்.

போட்டி இத்தோடு முடிந்தது இதோ அந்தத் தமிழ்ப்பாடல்கல

1. Vennello Godaari Andam – Sitara

இந்தப் பாடலின் தமிழ் வடிவம், நிழல்கள் படத்திற்காக எஸ்.ஜானகி பாடிய “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” படத்தில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

2. Ilalo Kalise – Anveshana

இந்தப் பாடல் அன்பின் முகவரி படத்திற்காக “உயிரே உறவே” எனத் தமிழில் வந்திருக்கிறது, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்கள்.

தெலுங்கிலிருந்து மொழிமாற்றப்பட்ட காதல் கீதம் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட “வாழ்வா சாவா” எனவும் வந்திருக்கிறது

3. Ee Chaitra Veena -Preminchu Pelladu

இந்தப்பாடல் “ஆனந்தக் கும்மி” படத்திற்காக “ஓ வெண்ணிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குரல்களில்

4. Maata Raani – Maharshi

செண்பகமே செண்பகமே படத்தில் வரும் “மஞ்சப்பொடி தேய்க்கையிலே” எஸ்.பி.பாலசுப்ரமணியம்

5. Chukkalu Themanna – Vidudala

காற்றினிலே வரும் கீதம் படத்திற்காக ஜெயச்சந்திரன் குரலில் “சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்”

38 thoughts on “றேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் “என்ன தமிழ்ப்பாட்டு”

 • 1) தூரத்தில் நான் கண்ட

  2) நிழலோ நிஜமோ என்று போராட்டமோ

  3) ஓ வெண்ணிலாவே வா ஓடி வா

  4) மஞ்ச தேச்சு குளிக்கயிலே

  5) எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா (இதுவே சித்திரை செவ்வானத்தின் ரீமிக்ஸ்)

 • Chukkalu Themanna – சித்திரச் செவ்வானம், சிரிக்கக் கண்டேன்

  மத்ததுல்லாம் தமிழ்ல கிடையாது. டுபாக்கூர் 🙂

 • முதல் பாடல் : தூரத்தில் நான் கண்ட என் முகம், படம் : நிழல்கள்
  இரண்டாவது பாடல் : நிழலோ நிஜமோ, படம் : பாடும் பறவைகள்
  மூன்றாவது பாடல் : ஓ வெண்ணிலவே, படம் : ஆனந்த கும்மி
  நான்காவது பாடல் : மஞ்ச பொடி தேய்க்கையிலே, படம் : சென்பகமே சென்பகமே
  ஐந்தாவது பாடல் : சித்திர செவ்வானம் சிவக்க கண்டேன், படம் : காற்றினிலே வரும் கீதம்

 • முதல் பாடல் : தூரத்தில் நான் கண்ட என் முகம், படம் : நிழல்கள்
  இரண்டாவது பாடல் : நிழலோ நிஜமோ, படம் : பாடும் பறவைகள்
  மூன்றாவது பாடல் : ஓ வெண்ணிலவே, படம் : ஆனந்த கும்மி
  நான்காவது பாடல் : மஞ்ச பொடி தேய்க்கையிலே, படம் : சென்பகமே சென்பகமே
  ஐந்தாவது பாடல் : சித்திர செவ்வானம் சிவக்க கண்டேன், படம் : காற்றினிலே வரும் கீதம்

 • கிங்

  நீங்கள் சொன்னவை எல்லாம் சரியானவை, ஆனால் இரண்டாவது பாடல் நேரடித் தமிழ் டப்பிங் ஆச்சே, இன்னொரு பாடல் இதே மெட்டில் இன்னொரு தெலுங்குத் தழுவலாக இருக்கிறது கண்டுபிடியுங்கள்

 • 2. Anbin Mugavari – Uyrie urave ondru naan sollava…

  3. Anandakummi – Oh vennilave vaa odi vaa…

  4. Shenbagame Shenbagame – Manja podi theikkaiyile..

  5. Katril varum geetham – Chithrai sevvanam sirikka kanden…

 • 1. Dhoorathil naan kanda un mugam – Nizhalgal
  2. Nizhalo Nijamo – Padum Paravaigal
  3. Oh vennilave vaa odiva – Anantha kummi
  4. Manja Podi theikkaiyile – Senbagame Senbagame
  5. Chitrai Sevvanam Sirikkakanden – Katrinile varum geetham

 • 1. Dhoorathil naan kanda un mugam – Nizhalgal
  2. Uyire Urave – Anbin Mugavari
  3. Oh Vennilave vaa oodi vaa – aanandha kummi
  4. Manja podi theikaiyile – senbagame senbagame
  5. Chitra sevvanam – kaatrinile varum geetham

 • VSKumar

  சொன்னவை அனைத்தும் சரி, முதலாவது பாடலையும் கண்டுபிடியுங்களேன்

 • 1. தூரத்தில் நான் கண்ட உன் முகம் – நிழல்கள்
  2. உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா – அன்பின் முகவரி
  3. ஓ வெண்ணிலாவே வா ஓடி வா – ஆனந்தக்கும்மி
  4. மஞ்சப்பொடி தேய்க்கயிலே – செண்பகமே செண்பகமே
  5. சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் – காற்றினிலே வரும் கீதம்

 • தல கரெக்டான்னு சொல்லுங்க
  1. தூரத்தில் நான் கண்ட : நிழல்கள்
  2. நிழலோ நிஜமோ : பாடும் பறவைகள்
  3. ஓ வெண்ணிலவே : ஆனந்த கும்மி
  4. மஞ்ச பொடி : சென்பகமே சென்பகமே
  5. சித்திர செவ்வானம் : காற்றினிலே வரும் கீதம்

 • பட்டாசு பாலு

  இரண்டாவது ஒரே மெட்டுத்தான் ஆனா நேரடி டப்பிங் ஆச்சே, இதே மெட்டில் இன்னும் இரண்டு தமிழ்ப்பாட்டு இருக்கு ஏதாவது ஒன்றைச் சொல்லவும்

 • சார்

  நாலாவது பாட்டு சரியா ஞாபகம் வரல..

  1) Vennello Godaari Andam -==> தூரத்தில் நான் கண்ட
  2) Ilalo Kalise ==>அ)நிழலோ நிஜமோ ஆ)உயிரே உறவே
  3) Ee Chaitra Veena ==>ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
  4) Maata Raani ==>
  5) Chukkalu Themanna ==>சித்திரைச் செவ்வானம்

 • தல நீங்க இருக்கீங்களே…செம ஆளு தல…இப்போதைக்கு முதல் பாட்டு மட்டும் தான்

  தூரத்தில் நான் கண்ட உன் முகம்

 • தூரத்தில் நான் கண்ட உன் முகம், நிழலோ நிஜமோ, மஞ்சப்பொடி தேய்க்கையிலே.

 • மூணு பாட்டு தெரியுது தல.. மிச்ச ரெண்டு பாட்ட நீங்க சொல்லும் போது கேட்டுக்குறேன்

  # இசை மேடையில் இன்ப வேளையில்;
  # ஓ வெண்ணிலாவே வா ஓடி வா;
  # சித்திரை செவ்வானம்;

 • 1.தூரத்தில் நான் கண்ட உன் முகம்
  2.உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா
  3.ஓ வெண்ணிலாவே வா ஓடிவா
  4.மஞ்சப்பொடி தேய்க்கையிலே
  5.சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்

  – @npodiyan

 • எல்லாம் சூப்பர் பாட்டுக்கள் பாஸ். யுகாதி ஷ்பெஷலுக்கு நன்றி (நேற்று நல்லா கொண்டாடினோம்)

  பாட்டுக்களுக்கு தெரிஞ்சவரைக்கும் விடை சொல்றேன்.

 • ஜானகி- பாலு பாட்டு ஆரம்ப வரி ஞாபம் வரலை. பாடல் வரி நாளை இந்த வேளை நீ காணவா… ஆனந்தம் கொண்டு நீங்கள்…… இப்படி போகும்

  ராஜேந்திர பிரசாத் பாட்டு – சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

  மத்த பாட்டுக தொண்டையில நிக்குது 🙁

 • போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 😉

 • // Chukkalu Themanna – April 1 lo Vidudala //

  இதன் மிகச்சரியான தமிழ் வடிவம் – "சத்யவான் – எப்பவும் நான்தான்டா" பாடல்தான். [மாபியா என்பவர்தான் மட்டும்தான் சரியான பதிலை கூறியுள்ளார்]

  பல்லவி மட்டும் கற்றினிலே வரும் கீதத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும். சரணத்தின் ட்யூனை மாற்றியிருப்பார். ஆர்கெஸ்ட்ரா உட்பட;

  முரளி கெளதமி நடிக்க இந்த தெலுங்கு படத்தையே ரிமேக் செய்தார்கள். தெலுங்கில் இருந்த ஒரு பாடல் தமிழில் கிடையாது.

  இன்னும் கொஞ்சம் கடினமாகவே கேட்டிருக்கலாம்.

 • காத்தவராயன்

  நான் பதிவில் குறிப்பிட்டது போல மெட்டை மட்டுமே பொதுவானதாகக் கேட்டேன், எனவேதான் சித்திரைச் செவ்வானத்தையும் ஏற்றேன்.
  இந்தப் புதிர் கேள்விகள் பலருக்கு கஷ்டமாகவும் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *