சிறப்பு நேயர் “பாலசந்தர்”


றேடியோஸ்பதியில் இதுநாள் வரை இருந்த வார்ப்புரு மாற்றம் கண்டிருக்கின்றது. இந்த வார்ப்புருவை வாரி வழங்கிய பெருமை நண்பர் பாலசந்தரைச் சேரும். வலையுலகில் திடீரெனப் பூத்த பாலசந்தரின் நட்போடு அவரின் வலைப்பதிவான Design world ஐப் பார்த்துப் பிரமித்துப் போனேன். மிகவும் சிறப்பான வகையில் பல்வேறுவகைப்பட்ட வலைப்பதிவு வார்ப்புருக்களைத் தானே ஆக்கி வழங்கிக் கொண்டிருக்கின்றார் இவர். றேடியோஸ்பதிக்காக சிறப்பானதொரு வார்ப்புருவை பதிய எண்ணியிருந்த எனக்கு பாலசந்தரின் உதவியால கை கூடியிருக்கின்றது. என் எண்ணத்தில் தோன்றியதை அவர் மெய்ப்பித்த அவருக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு அவரின் பிரியமுள்ள ஐந்து பாடல்களை நீண்ட இடைவெளிக்குப் பின் சிறப்பு நேயர் பகுதியில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.

பாலசந்தரின் முதலாவது தெரிவு, இருபத்தெட்டு வருஷங்களுக்கு முன் வந்து ஆட்கொண்ட கல்லுக்குள் ஈரம் திரைப்பாடலான ‘சிறுபொன்மணி அசையும்”, பாடலை இசைத்துப் பாடுகின்றார் இசைஞானி இளையராஜா, ஜோடிக்குரலாக எஸ்.ஜானகி

இவரின் அடுத்த தெரிவு சற்று வித்தியாசமாக அதிகம் கேட்கப்படாத ஆனால் இனிமையான பாடல்களில் ஒன்றான “ஆத்தி வாடையிலே” என்ற பாடல் “சிந்துநதி பூ” படத்திற்காக செளந்தர்யன் இசையில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்

“கம்பன் ஏமாந்தான்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “நிழல் நிஜமாகிறது” பாடலை யாருக்குத் தான் பிடிக்காது. மெல்லிசை மன்னர் இசையில் மலர்கின்றது

அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்திக் பாடும் “அவ என்னைத் தேடி வந்த அஞ்சல” பாடல் புத்தம் புது மெட்டாக “வாரணம் ஆயிரம்” திரையில் இருந்து பாலசந்தர் ரசனையில் மலர்கின்றது.

நிறைவாக ரங் தே பாசந்தி” என்ற இசைப்புயலின் கைவண்ணத்தில் “Luka Chuppi” என்ற பாடல் லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹ்மான் குரல்களில் இனிதாய் ஒலிக்கின்றது.

சிறப்பு நேயர் "ஆ.கோகுலன்"

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் வாரம் கடந்த 19 வாரங்களாக வலம் வந்து கொண்டிருந்து இந்த இருபதாவது வாரத்துடன் ஒரு நிறைவை நாடவிருக்கிறது என்று தான் முதலில் போட்டிருந்தேன். ஆனால் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால் 😉 தொடந்து இந்தத் தொடர் இன்னும் சில காலம் நீடிக்கப்படுகின்றது. முதலில் ஜீவ்ஸ் அவர்களை எதேச்சையாக தொடரின் முதல் நேயராக இணைத்துக் கொண்டு தொடர்ந்த நேயர்களின் ஒத்துழைப்பினால் இந்த இருபது வாரங்களைத் தொட்டிருக்கின்றது. இதுவரை தமது படைப்புக்களை அனுப்பாதோர் முத்தான ஐந்து பாடல்களைத் தெரிவு செய்து அவற்றின் விளக்கங்களோடு kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். பாடல்களின் audio file களை அனுப்ப்பவேண்டிய அவசியம் இல்லை.

இந்த இருபதாவது வாரத்தின் சிறப்பு நேயராக வரும் சிறப்பு நேயராக ஆ.கோகுலன் அமைகின்றார். தற்போது வேலை நிமித்தம் கொரியாவில் வாழ்ந்துவரும் கோகுலன், ஈழத்தைச் சேர்ந்தவர். ஈழத்தில் இருந்த காலத்து நினைவுகள், இசை, உலகம் என்று தன் பதிவுகளை விசாலமாக்கிக் கொண்டவர். புதுசு புதுசாக வித்தியாசமான பாடல்களைக் கேட்கவேண்டும், அவற்றைப் பகிரவேண்டும் என்ற ஆவல் கொண்டவர் இவர். அதற்கு உதாரணம் இவரது தனித்தளமான சும்மா கொஞ்ச நேரம்……

ஆ.கோகுலனின் ரசனைச் சிறப்பிற்கு உதாரணமாக அமைகின்றன இந்த வாரம் அவர் அளித்திருக்கும் முத்தான ஐந்து பாடல்களும் அவை குறித்த விளக்கங்களும்.

அன்புள்ள கானா பிரபா, தங்கள் றேடியோஸ்பதியின் வாராந்திரநேயர் பகுதி பார்வையிட்டேன். சிறப்பான முயற்சி. பங்குபற்றுபவர்களும் சிறப்பாக சோபிக்கின்றார்கள்.

நன்றி.

அன்புடன்,

ஆ.கோகுலன்.

01. பூங்கதவே தாழ் திறவாய்

கவிஞர் வைரமுத்துவை அறிமுகப்படுத்தி பெயர்பெற்றது ‘நிழல்கள்’ எனும் படம். இப்படத்தில் இடம்பெற்ற இன்னுமொரு அருமையான பாடல் இது.

“பூங்கதவே தாழ்திறவாய்..” என்பதை ஆரம்பமாகத்தருவது பொருத்தமானது என்று

நினைக்கிறேன். ஒரு சில பாடல்கள் பாடினாலும் காலத்தால் அழியாப்புகழ் பெற்றவர்களுள் தீபன்சக்கரவர்த்தியும் ஒருவர். இளையராஜாவின் இசையைப்பற்றிச் சொல்வது அதிகப்பிரசங்கித்தனமானது. ஏனெனில் அது உணரப்படவேண்டியது. இதோ..

படம் : நிழல்கள்

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் உமாரமணன்

இசை : இளையராஜா

வரிகள் : கங்கை அமரன்

02. ஓ சாத்தி ரே

இசைக்கு மொழியில்லை என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணம். மிகமிக மென்மையான இசை.

இடையில் ஓரிடத்தில் மென்டலின் அருமையாக இழைகிறது.இசையமைப்பாளர் மிகவும் அனுபவித்து இசையமைத்திருக்கிறார்.

படத்தில் பாடல் காட்சி கூட பாடலிற்கு ஏற்ற Slow motion இல் அருமையாக வந்துள்ளது. பாடலில் ஒரு காட்சியில் மேல்மாடியிலிருந்து இருவரும் கீழே ஓடிவந்து வெளிவாசலினூடாக செல்லும் காட்சி ஒரே Crane Shot இல் படமாக்கியுள்ளது அபாரம். துப்பாக்கி முனையில் காதல்..!. இசையமைப்பாளர், பாடகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரசாயனம் கொண்ட அருமையான ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு Team work. பாடல் வரிகளும் அபாரமானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹிந்தி தெரிந்தவர்கள் மொழிபெயர்க்கலாம். ஷ்ரேயா கோஷலின் இன்னுமொரு இனிமையான அனுபவம்.

படம் : ஓம்காரா

பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல், மற்றும் விஷால் பரத்வாஜ்

இசை : விஷால் பரத்வாஜ்

03. நிலாவிலே…நிலாவிலே

தமிழ் உச்சரிப்பு விமர்சிக்கப்பட்டாலும் தனது பாடல்கள் மூலம் தமிழ்மக்களை வசீகரித்துக்கொண்டவர் உதித்நாராயணன். எம்மவர்கள் சிலர் கூட தமிழை கொஞ்சம் செயற்கையாக உச்சரிப்பது ஸ்ரைல் என்று நினைத்து இன்பம் காண்பவர்கள். இந்தப்பாடலில் உதித்தின் செல்லமான தமிழ் இன்னும் மெருகு சேர்க்கிறது. ஆரம்பத்தில் பாடல் அவிழ்வதே அலாதியானது. சுஸாதா பட்டாச்சார்யாவின் அபாரமான ஹம்மிங்குடன் ஒரு விமானத்தின் மேலெழுகை போல (Take off) சட்சட்டென்று கியர்களை மாற்றி ரொப் கியருக்கு வந்து பின்

நிதானமான வேகம். பாடல் வரிகள் என்னவோ வழமையான பொய்கள் தான். ஆனால் மிக

வசீகரமான பொய்கள். இசையும் உதித் இடையிடையே தளர்ந்து போய் சொல்லும்

ஹோய்..யும் சுஜாதா பட்டாச்சார்யாவின் க.னா..விலே.. என்பதில் வரும்

சங்கதியும் ஆகா எத்தனை அழகு!!. சுனாமிக்கு முன்பு திருகோணமலை கடற்கரையில் அடிக்கடி இப்பாடல் ஒலிபரப்பாகும்.

படம் : ஆகா எத்தனை அழகு

பாடியவர்கள் : உதித் நாராயணன் மற்றும் சுஜாதா பட்டாச்சாரியார்

இசை : வித்தியாசாகர்

வரிகள் :

04. “தீண்டாய் மெய் தீண்டாய்”

துக்கம், மகிழ்ச்சி, கோபம் போல காமமும் ஒரு உணர்வே. இதை இன்னும் நாகரிகமாக ‘சிருங்காரம்’ என்று சொல்வார்கள். இதுவும் அருமையான ஒரு சிருங்காரரசம் நிறைந்த பாடல். துணைக்கு சங்ககால இலக்கியங்கள் வேறு வருகின்றன. இன்னோரன்ன வாத்தியங்கள் பயன்பட்டாலும் சின்னச் சின்னதாக வரும் வயலின் மோகிக்க வைக்கிறது. ரஹ்மானின் இன்னொரு உத்தியான முரணான Beat உடன் Slow ஆன இசை. பாடலை உச்சஸ்தாயிக்கு கவனமாகக்கொண்டு போவதில் பாடகரை அவசியம் பாராட்டவேண்டும். ‘தீண்டாய்’ ன்பதற்கு ‘தீண்டு'(தீண்டாயோ) மற்றும் ‘தீண்டாதே’ என எதிர்எதிர் கருத்து கொள்ளமுடியும் என்பதும் சிறப்பு. பாடல் முடிவில் ஆண்குரல் பாடிக்கொண்டிருக்கும் போதேசிலவிநாடி இடைவெளியில் பெண்குரலும் இழைவது பாடலின் தேவை கருதிய.!! அருமையான உத்தி..!

படம் : என் சுவாசக் காற்றே

பாடியவர்கள் : எஸ்.பி.பி. சித்ரா

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

வரிகள் : வைரமுத்து

05. கேட்டேனா

பின்னணி வாத்தியங்களை பெரிதாக நம்பாமல் பாடல்வரிகளை மட்டுமே பிரதானமாகக்கொண்ட பாட்டு. ஆனாலும் சின்னச்சின்னதான பின்னணி பிரமாதம்.

இசை ஏற்கனவே பாபா படத்தில் கேட்ட இசை தான். ஆனாலும் இதில் வரிகளால் இன்னும் மெருகேறுகிறது. பிரமாதமான கற்பனை. பொதுவாக சணடை பிடித்துக்கொண்டு தான் காதல் ஆரம்பிக்கிறது. இதற்கு இருபாலாரினதும் எச்சரிக்கையுணர்வும் மற்றவரின் எண்ணங்களை உளவறிய நினைப்பதுமே காரணம். இது ஆதாம் ஏவாளிலிருந்தான தொடரும் இயற்கை. இப்பாடலிலும் இது விதிவிலக்கல்ல.

”நான் கற்ற அறிவியலில்

உன்னைப்போல் அதிசயமில்லை

திக்கற்று நிற்குது கண்ணே

விஞ்ஞானம் தான்..”

– என்று கன்னாபின்னாவென்று அநியாயத்திற்கு வியந்து..

”உன்பேரை சொல்லி சொல்லி

உமிழ்நீரும் தமிழ் நீர் ஆச்சு..”

– என்று சொல்வதும்.. அதற்கு..

”பிறகென்ன என்னைப்பற்றி

கவிதை பாடு…”

– என்று ஆப்பு வைப்பதும்..

”கவிதைக்குள் சிக்காதம்மா..

கண்ணே உன் செளந்தரியம்தான்..”

என்று சமரசம் செய்வதும்.. சந்தேகமேயில்லை.. இது காதல் தாங்க..!

புத்திசாலிகள் இருவர் காதலிப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். பாடல் ஆசிரியர் வாலி கூட மில்லிமீற்றர் மில்லிமீற்றராய் லவ்பண்ணித்தான் எழுதியிருப்பார் போல.. அவ்வளவு சிலாகிப்பான வரிகள் பாடலில். நெசமாலுமே ஒக்காந்து யோசிக்காம இப்டி எல்லாம் எளுத முடியாதுங்க..!!! 🙂

படம் : தேசம்

பாடியவர்கள் : அஸ்லாம் மற்றும் சாதனா சர்க்கம்

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

வரிகள் : வாலி

மீண்டும்

நன்றிகளுடன்

ஆ.கோகுலன்.


சிறப்பு நேயர்கள் ஆஷிஷ் & அம்ருதா

கடந்த வாரம் ஷைலஜாவின் சிறப்பு வாரம் வந்து போனது. இந்த வாரம் வலம் வர இருப்பது குழந்தைகள் சிறப்பு பதிவு. இவர்களின் பெற்றோரும் கூட முந்திய சிறப்பு நேயர்களாக வந்து சிறப்பித்தவர்களே. புதுகைத் தென்றல் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர்களின் அம்மா மற்றும் தந்தை ஸ்ரீராம் ஆகியோரே அவர்களாவர். வலைப்பதிவில் பல குட்டிப் பதிவுகள் வலம் வரத்தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த வார சிறப்பு நேயர்களாக வரும் ஆஷிஷ் அம்ருதாவும் கூட ஆஷிஷ் – அம்ருதா பக்கங்கள் என்ற பெயரில் சொந்த வலைப்பதிவு வைத்திருக்கின்றார்கள். ஆனால் பாருங்க பொதுவா குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் ஹோம் வேர்க் செய்ய சொன்னா அவங்க அப்பா/அம்மாவே செய்து கொடுத்து அனுப்புவது போல இந்தப் பதிவுகளின் பின்னணியில் இருக்கும் அந்த உதவிக்கரம் அம்மாவா, அப்பாவா? ஆஷிஷ் அம்ருதாவுக்கே வெளிச்சம் 😉

ஆனாலும் என்ன குழந்தைகளுக்கான நல்ல வாசிப்புத் தீனி கொடுக்கும் பதிவுகள் பல இங்கே களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சரி, இனி ஆஷிஷ் அம்ருதா சொல்வதைக் கேட்போமா.வணக்கம் மாமா,

நலமா?

எங்களுக்கு பிடித்தமான பாடல்களை இங்கே கொடுத்திருக்கோம்.

அதை சிறப்பு நேயர் விருப்பத்தில் கொடுக்க முடியுமா மாமா?

1. ராஜா சின்ன ரோஜா படம்

ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் போனானாம் – பாடல்

இந்தப் பாட்டு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பாடலில் வரும் கதை,

தரும் மெசெஜ் அருமை.

“நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது.

தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது”

கார்ட்டுன் வடிவங்களுடன் ரஜினி அங்கிள்

நடித்திருப்பாங்க நல்லா இருக்கும்.எங்களுக்கு மிகவும்

பிடிக்கும்.

வீடியோவில் பார்க்க

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் ஷைலஜாகடந்த வாரம் சர்வே மன்னரின் பதிவு வந்தாலும் வந்தது அதன் புண்ணியத்தில் சர்வேசர் ஒரு வாக்கெடுப்புப் பதிவும், ஜி.ரா ஒரு சுசிலா – ஜானகி கதம்பமாலைப் பதிவும் இட்டு விட்டார்கள். ஆக ஒன்று மூன்றாகியது 😉

சரி, இந்த வாரம் வலம் வரும் சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம். இந்த வார சிறப்பு நேயர் ஒரு வானொலிப் படைப்பாளியும் கூட. அதனாலோ என்னவோ சற்று வத்தியாசமாகத் தன் தேர்வுகளைப் பாடி, அப்பாடல்களைச் சிலாகித்து ஒலி வழி தந்திருக்கின்றார். அவர் தான் கர்நாடகாவில் இருந்து சைலஜா.எண்ணிய முடிதல் வேண்டும் என்பது இவரின் தனித்துவமான வலைத் தளமாகும். கூடவே கண்ணன் பாட்டு, தமிழ்ச் சங்கம் போன்ற கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதி வருகின்றார். வலைப்பதிவில் கவிதை, கட்டுரை என்று படைத்து வரும் இவர் தன் குரலில் திரையிசைப்பாடல்களையும் பாடி நேயர் விருப்பம் போன்ற பகுதிகளுக்கு அளித்து வருகின்றார்.தமிழின் சிறப்பைத் தன் பதிவுகளில் இட்டு வரும் இவரின் படைப்பு ஒரு எட்டு பார்த்து விட்டுத் தான் வாருங்களேன்.

தொடந்து சைலஜா படைக்கும் குரல் வழிச் சிலாகிப்பும் முத்தான பாட்டிசையும் கேட்போம்.“அத்திக்காய் பாடலுக்கு” (படம்: பலே பாண்டியா) இத்திக்காய் ஷைலஜாவிடமிருந்து சிறு விளக்கம்.கண்ணதாசனின்

கற்பனை வளம் தமிழின் அழகு ஆளுமை எல்லாம் இப்பாடலில் தெரியவருகிறது…

இரண்டு தம்பதிகள் நிலவை நோக்கிப்பாடுவதான பாடலிது

முதல் ஜோடி சொல்வது ஆண்…முதல் வரி நிலாவுக்கு

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணீலவே

அத்திக்காய் ஆலங்காய் போல தன் வெண்ணிலாமுகக்காதலி கோபத்தில் சிவந்திருக்கிறாள்

என்றும் அர்த்தம் கொள்ளலாம்

அந்த திசை நோக்கி ஒளிவீசு நிலவே (ஏனெனில்

இந்தப்பெண்ணுக்கு நீ என்னைப்பார்ப்பதாய் லேசாய் பொறாமை!)

ஆல் போல பலகாலமாய் வானில்வாழும் வெண்ணிலவே (இப்படியும் சொல்லலாம்)

2ஆம் வரி தன்னருகில் நிற்பவளுக்கு

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இந்த திசையில் கடிந்துகொள்ளாதே பெண்ணே என் உயிரே நீதானே?

பெண்—

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்

இந்தப்பெண் உனீது ஆசைகொண்ட காதல்கொண்ட பாவை இப்போது கோபமாக

இருக்கிறாள்(பாகற்காய் கசப்பினை கோபமாகக்கொள்ளலாம்)

அங்கே

காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்

அங்கே திட்டு அவரைத் திட்டு மங்கையான எந்தன் மன்னனை(கோ) திட்டு

ஆண்..

மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ

மாதுளம்பழம் வெளியே காய்போல முரடாக இருக்கும்(உள்ளே பழம் முத்துக்களாய்)

பெண்ணே(மாது) உன் உள்ளம் காய் ஆனாலும் என் உள்ளம் காய் ஆகுமோ?

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்

இரவு காய் ஆனது உறவு காய் ஆனது அதற்கு ஏங்கும் இந்த ஏழையை நீ திட்டு

இரவுக்காக உறவுக்காக ஏங்குகின்ற இந்த ஏழைக்காக

நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்

நீயும் திட்டு தினமும் திட்டு(எல்லாம்) நேர்ல நிற்கிற இவளால்

நீயும் ஒளிவீசு நிதமும் ஒளிவீசு நேரில் நிற்கும் இவள் மீது ஒளிவீசு

பெண்-

-உறவும் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ

கோபத்துல உறவு இப்போ காய் மாதிரி இருந்தாலும் என் பருவம் கனிந்ததல்லவா

அதுஇவரைக்கடிந்துகொள்ள அனுமதிக்குமா?

என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ?

என்னை நீ திட்டாதே நீயும் என்மாதிரி பெணல்லவா?

(நிலா சூரியனிடமிருந்து ஒளி பெறுவதுபோல் பெண் தன் கணவனின் மதிப்பினால்

ஒளிவீசுகிறாள் எனும் உள் அர்த்தம்!)

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

ஏல வாசனைப்போல எங்கள் மனசு வாழ நீ ஒளிவீசு

(இதில்

இன்னொரு பொருள் இருக்கலாம் யாராவது விளக்குங்க)

ஜாதிக்காய் கெட்டது போல் தனிமை இனபம்கனியக்காய்

ஜாதிகளை ஒழித்ததுபோல் எங்களிடையே உள்ள பிரசசினைதீர்த்து தனிமையின் இனபம் கனிய

ஒளிவீசு

(ஜாதிக்காய் கெட்டாலும் மணம்வீசும் அந்த மணம் போல தனிமையில் இன்பம்

மணக்கட்டும் என இருக்கலாம்)

இரண்டாவது ஜோடி

ஆண்

சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணீலா

இவ்ளொ நேரம் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா போய் அவகிட்ட தூது சொல்லிவிளக்கு

சொன்னதெல்லாம் விளாங்காய் மாதிரி மேல் ஓடு கடினமானாலும் உள்ளே

கனிவானதுதான் (தூதுவழங்காய் ஏதோ மருத்துவ செடி?)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ

உள்ளம் என்ன காரமான மிள்காயா அதான் ஒவ்வொருபேச்சும் உரைப்பா?(காரமா)

உள்ளம் எல்லாம் இளகாதா உன் ஒவ்வொரு பேச்சும் உரைநடைமாதீரி இருக்கிறதே(ஐஸ் ஐஸ்!)

வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரித்தாயே

பெண் சிரிப்பு பிளந்த வெள்ளரி நிலவும் அப்படியாம்(இது எனக்கு சரியாய் புரியல)

கோதையெனைக்காயாதே கொற்றவரங்காய் வெண்ணீலா

கோதை என்னைதிட்டாதே கொற்றவர் (என் மன்னர்)அங்கே அவரைத்திட்டு வெண்ணிலா

கோதை என்மேல ஒளிவீசாதே நீ மெலிந்து கொத்தவரங்காய் ஆன வெண்ணீலா(கிண்டல்)

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

எங்க இருவரையும் திட்டாதே போய் தனிமையில் போய் ஏங்கிக்கொள்

இருவர் மேலயும் ஒளிவீசவேண்டாம் தனிமையிலே போய் ஒளிவீசிக்கொள்

(அதாவது ஜோடிகள் சமாதானம் ஆகிவிட்டார்கள் நிலாவுக்கு டாட்டா

சொல்லிவிட்டார்கள்

சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

சிறப்பு நேயர் “Surveyசன்”கடந்த வார சிறப்பு நேயராக கயல்விழி முத்துலெட்சுமி வந்தாலும் வந்தாங்க, பதிவர்கள் தி.நகர் ஜவுளி நெரிசல் கணக்கா வந்து கு(ம்)மிஞ்சிட்டாங்க.

சரி இந்த வார சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம்.

ஒரு இரண்டு வருஷங்களுக்கு முன்னர் தமிழ்மணத்தை வழக்கம் போல் உலாவலாம் என்று பக்கத்தைத் திறந்தால் எடுத்த எடுப்பிலேயே புள்ளிவிபர இலாகாவிலிருந்து கேட்குமாற் போல யாரோ ஒருவர் பதிவிட்டிருந்தார். வழக்கமான பதிவுகளில் இருந்து விலகியிருக்கிறாரே என்று நினைக்கமுன்னரே சரசரவென்று ஒவ்வொரு நாளும் விதவிதமான கேள்விக் கொத்தோடு பதிவுகளைக் குவித்தார். பாராட்டு, விமர்சனம் என்று சம அளவில் இந்தப் புள்ளிவிபரப்பதிவுகளுக்குக் கிடைத்தது. ஆனாலும் விட்டாரா மனுஷன், நான் “ஆக்கியவன் அல்ல அளப்பவன்” என்று தொடர்ந்தும் தன் “பணியை” செய்து ராமராஜன் லெவலுக்கு திடீர் ஹீரோவாகிவிட்டார். அவர் தான் நம்ம சர்வேசன்.

ஆனால் இவருக்கு புள்ளி விபரம் தான் எடுக்கத் தெரியும் என்று கணக்கு போடுபவர்களின் நினைப்பை மாற்றி “நேயர் விருப்பம்” போன்ற கலக்கல் இசைத் தொடர்களையும் ஆரம்பித்தார். மனசு ரிலாக்ஸாக இருக்க சில பதிவர்களின் பதிவைத் தேடிப்படிப்பது வழக்கம். அதில் சர்வேசனும் ஒருவர். நச் சென்ற விமர்சனமும், குறும்புத்தனமும், கலந்த எழுத்தும் அளவான கஞ்சத்தனமான பதிவும் இவரின் தனித்துவம். தமிழில் புகைப்படக்கலை போன்ற கூட்டுவலைப்பதிவுகளில் கலக்கினாலும் Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன்

என்ற இவரின் பதிவு தனித்துவமானது. எம்.எஸ்.வி ஐ வாழும் காலத்தில் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் இவரின் முனைப்பு இன்னும் ஒரு படி இவர் மேல் மதிப்பை ஏற்படுத்துகின்றது.

தொடர்ந்து நண்பர் சர்வேசனின் முத்தான ஐந்து பாடல்கள் பற்றி என்ன சொல்கின்றார் என்று கேட்போம்.கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் புதுப்புது யுக்திகளை புகுத்தி வருகிறார்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிறப்பு நேயர்’ பதிவில், பதிவர்களின் டாப்-5 விருப்பப் பாடல்களை அருமையாக தொகுத்து வழங்குகிறார்.

தமிழ் திரைப்படங்களில் ஆயிரமாயிரம் பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும் ரகம். அதிலிருந்து வெறும் ஐந்து பாடல்களை மிகவும் பிடித்தது என்று எடுத்துத் தருவது ரொம்பக் கஷ்டமான வேலை.கூட்டிக் கழிச்சுப் பாத்தாகூட ஒரு ஐநூறு பாட்டாவது மிகப் பிடித்த தர வரிசையில் இடம்பெறும்.

அதனால, இந்த ஈ.மடலை தொகுக்கும் இந்த ஞாயிறு மதியம், மனதில் உதிக்கும் ஐந்து பாடல்களை தரலாம் என்று முடிவு. (எழுதி அனுப்பின தினம் பெப்ரவரி 25)

பலப் பல பாடல்கள் பிடித்தாலும், சில பாடல்களின் ஆரம்ப இசை கேட்டதும், மனதில் ஒரு சிலீர் தோன்றும். அப்படிப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஆயிரமாயிரம் பாடல்களில் ஐந்து உங்கள் பார்வைக்கு.

1) ஒரே நாள் உனை நான்..

இளமை ஊஞ்சலாடுகிறது (இளையராஜா)

இந்தப் பாட்டு பாத்த ஞாபகம் இல்லை.

சின்ன வயசுல, ரேடியோல அடிக்கடி போட்டிருப்பாங்கன்னு நெனைக்கறேன்.

அதனாலத்தான் என்னவோ, எப்ப இந்த பாட்ட எங்க கேட்டாலும், நான் மேலே சொன்ன ‘சிலீர்’ அனுபவம் கிட்டும்.

ஆரம்ப, கிட்டார் strumming ம், அதைத் தொடரும் வயலினும் போதும், இது எப்பேர்பட்ட பாட்டு என்பதைச் சொல்ல.

ஒவ்வொரு interludeல் வரும் கிட்டாரும் சுண்டி இழுக்கும்.

Vow! what a song!

அந்த கால SPB குரல், சொல்லணுமா? கட்டியணைக்கும் ரகம்.

வாணி ஜெயராமின் கணீர் குரலும் அமக்களமா இருக்கும்.

வீடியோவில் பார்க்க

கேட்க

சிறப்பு நேயர் “கயல்விழி முத்துலெட்சுமி”கடந்த வாரம் கண்ண(னின்) தாசன் கண்ணபிரான் ரவி சங்கர் கலவையாக ஐந்து பாட்டுக் கேட்டுவிட்டுப் போனார். அவர் பக்திமார்க்கமாகத் தான் பாடலுக்குப் போவார்னு நினைச்சவங்க வாயில் மண் மன்னிக்கவும் அவல் 😉 தொடர்ந்து உங்கள் விருப்பத் தேர்வுகள் ஐந்தைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றி உங்கள் பாணியில் எழுதி kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் உங்கள் விருப்பத் தேர்வுகளும் இடம்பெறக்காத்திருக்கின்றன. நீங்கள் பதிவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, பதிவுலக வாசகராகவும் இருக்கலாம்.இதோ இந்த வாரச்சுற்றுக்குப் போவோம். இந்த வார றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வலம் வருபவர் “கயல்விழி முத்துலட்சுமி“. கடந்த 2006 இல் தான் பதிவுலகிற்கு வந்தாலும் வகை வகையான பதிவு விருந்து கொடுத்து தொடர்ந்தும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றார்.

சிறு முயற்சி என்பது இவரின் தனித்துவமான வலைப்திவாகும். கூடவே தேன் கிண்ணம், சாப்பிட வாங்க போன்ற கூட்டு வலைப்பதிவுகளிலும் இடம்பிடித்தாலும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய இவரின் இன்னொரு பங்கு வலைச்சரத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி.

வலைச்சரம் என்னும் கூட்டு வலைப்பதிவில் ஒரு தேக்கம் களைந்து சமீப காலமாக தொடர்ந்து தேர்ந்தெடுத்த சகவலைப்பதிவர்களை ஒழுங்கமைத்து இப்பதிவில் எழுத வைப்பது இவரின் சிறப்பான பணிகளில் ஒன்று. இவரின் பதிவுகளிலேயே மிகவும் பிடித்தது “எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி” காரணம் தொழில்நுட்ப விஷயங்களை இலாகவமாக இவர் தந்திருந்த விதம்.

தொடர்ந்து கயல்விழி முத்துலட்சுமி தன் முத்தான ஐந்து தேர்வுகள் குறித்து என்ன சொல்கிறார், கேட்போமா?பாட்டு பாட்டு ன்னு படிப்பைக்கூட கவனிக்காம பாட்டு கேட்கும் பழக்கம் சின்னவயசில் இருந்தே இருக்கிறது.

ரேடியோவை அணைக்காம ராத்திரி பாட்டை கேட்டுகிட்டே தூங்கி அப்பா வந்து பாத்து அணைப்பது கூட உண்டு. டிவியில் கூட படங்களை விட பாட்டு நிகழ்ச்சி வரும் நிகழ்ச்சிகள் தான் பிடிக்கும்.. முன்பு etc ஒரு சேனல் வந்துது இந்தி பாட்டு மட்டும் பாடும் .. அதே ஓடும் சில நேரம். தமிழ்நாடு வந்தா டிவியில் எப்ஃஎம் போடறாங்களே அதுவோ இல்லாட்டி சன்ம்யூசிக்கோ தான் போட்டுப்பாப்பேன் அந்த அளவு பாட்டு தான் பிடிக்கும். இப்படி இருக்கும் போது அஞ்சு பாட்டுன்னா எதை சொல்றது எதை விடறது கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி செய்யறேன்..

“அன்புள்ள மான்விழியே”

” மெதுவான இசை , அழகான அந்த கண்களோடு ஜமுனா உதட்டை சுழித்து ” ஆசையில் ஒர் கடிதம் அதை கைகளில் எழுதவில்லை இரு கண்களில் எழுதி வந்தேன் ” பெரிய கண்ணை அங்கயும் இங்கயும் உருட்டி பாட்டை கண்களால் நாட்டியம் ஆடி பாடுவதும் என்று தனி அழகு..

நலம் நலம் தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே நினைவிருந்தால் ” ரசித்து கேட்கலாம் ரசித்து பார்க்கலாம்

சிறப்பு நேயர் “கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)”கண்ணபிரான் ரவிசங்கர், பெயரிலேயே கண்ணனின் திருநாமத்தை முகவரியாக்கிக் கொண்ட இவர் வலைப்பதிவுலகில் கண்ணன் பெருமையைச் சுவைபடக் கூறும் பதிவர். ஆனால் வெறும் ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே இவரின் அடையாளம் இல்லை என்று சொல்லுமளவுக்கு இசை, இலக்கியச் சுவை, நகைச்சுவை என்று தன் எழுத்தெல்லைகளை பரவலாக்கிக் கொண்டவர். ஏனோ தானோவென்று பதிவைப் போட்டால் போச்சு, பின்னூட்டம் வந்தால் பார்ப்போம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை.

முன்பு நண்பர் ஜீ.ராகவனைப் பற்றிச் சொல்லும் போது தோன்றிய எண்ணங்களே கே.ஆர்.எஸ் ஐப் பற்றி எழுத ஆரம்பித்த போதும் வந்து முளைத்தன.தான் எழுத எடுத்துக் கொண்ட எந்த விடயம் என்றாலும் விரிவான நடைகொடுத்து, நல்ல தமிழ் சொற்கோர்த்து இவர் எழுதும் பாணியே சிறப்பானது. எதையும் ஆராய்ந்து பொருத்தமான வேளையில் கொடுக்கும் இவர் பதிவுகள் பலரின் தேடல்களுக்கு விடைகள் ஆகின்றன.

ஒவ்வொரு பதிவுக்கும் கொடுக்கும் தலைப்பே KRS தான் இந்தப் பதிவின் சொந்தக்காரர் என்று காட்டிக்கொடுத்துவிடும் அளவிற்கு அதிலும் தனித்துவம் காட்டுவார். குறிப்பாக இன்னது தான் சிறப்பானது என்று பொறுக்கி எடுத்துச் சிலாகிக்க முடியவில்லை. காரணம் எழுத முன்னரேயே இவை தான் பதிவுலக வாசகரைப் போய்ச் சேரவேண்டும் என்று அவரே முடிவெடுத்துவிட்டது போலத் தனித்துவமான பதிவுகள் பலவற்றைக் கொடுத்திருக்கின்றார்.

மாதவிப்பந்தல் என்பது இவரின் தனித்துவமான வலைப்பதிவு, கூடவே ஒரு கூடை கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதிவருகின்றார் கே.ஆர்.எஸ். இதோ KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர் தான் தேர்ந்தெடுத்த முத்தான ஐந்து பாடல்கள் குறித்து என்ன சொல்கின்றார் என்று கேட்போம், பார்போம்.

நான் காபி அண்ணாச்சி என்று அழைக்கும் நம்ம கானா பிரபா அண்ணாச்சியைக் கண்மூடித்தனமா கண்டிச்சிட்டு இந்த றேடியோஸ்பதி கச்சேரியைத் துவங்குகிறேன்! பின்னே என்னவாம்?

ஒரு ரொமாண்டிக் பவுர்ணமி இரவில், வீட்டு மொட்டை மாடியில், காதலியுடன் அழகாய்க் கதைத்துக் கொண்டிருந்தேன்! அப்போ, கண் முன்னே தோன்றியது காதல் தேவதை! நீலவானில் கொட்டிக் கிடக்கும் தாரகைகளை எல்லாம் ஒரு பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்திருந்தது.

கூடையில் உள்ளதில், ஐந்து பூக்களை மட்டும் எடுத்துக் கொள்ள உனக்கு வரம் தருகிறேன் என்று தேவதை கூறியது! இப்படியெல்லாம் கொக்கி போட்டு வரம் கொடுத்தா கோபம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க!

அந்தக் கூடையில் மின்னி மினுக்கும் நட்சத்திரங்களை எல்லாம் அப்படியே அள்ளி அள்ளிக், காதலியின் மேல் பொழிய மனசு துடிக்குது! ஆனால் தேவதையோ “லிமிட் ஃபைவ்” என்கிறது!

அது போல இருக்கு காபி அண்ணாச்சி சொல்லும் றேடியோஸ்பதி “லிமிட் ஃபைவ்” கணக்கு! சரி, கொடுத்த வரத்தை இப்போதைக்கு வாங்கிக் கொள்வோம்! அமிழ்தினும் இனிய தமிழ்த் திரையிசையில் இதோ…எனக்குப் பிடித்த ஐந்து நட்சத்திரங்கள்!

——————————————————————————–

1. நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்!

படம்: டிஷ்யூம்

குரல்: ஜெயதேவ், ராஜலக்ஷ்மி

இசை: விஜய் ஆன்டனி

வரி: புவன சந்திரா

என்னை வழிக்கு கொண்டு வருவது எப்படி என்று என் நெருங்கிய நண்பர்களுக்கு நல்லாத் தெரியும்! இந்தப் பாட்டு தான்! 🙂

மனம் கனமாக இருக்கும் போது, சட்டென்று இந்தப் பாட்டு நினைவுக்கு வந்துருச்சின்னா போதும், உடனே லைட்டாகி விடுவேன்! ஏன் என்றால் இந்தப் பாட்டில் சோகமும் இருக்காது! சந்தோஷமும் பிச்சிக்கிட்டு கொட்டாது! “நிறைவு” என்று சொல்கிறோமே, அது!

“எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன் – இன்னும் பூமுகம் மறக்கவில்லை” என்று காதலன் பாடுவான்! எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!

பாட்டில் ஜீவாவும் சந்தியாவும் தோன்றும் காட்சிகள், அதிலும் அந்தப் படகுவீட்டில் முதலிரவு நடப்பதாய் வரும் கனவு, எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 🙂

விஜய் ஆன்டனி சில ஹிட்களே கொடுத்த இளம் இசையமைப்பாளர். அதுக்கு அப்புறம் இவரை ரொம்பக் காணவில்லையே! இதில் பாடுபவர்களும் புதுமுகங்கள் தான்! ஆனாலும் பாட்டு செம ஹிட். பாட்டின் மெட்டு கொஞ்சம் க்ளாசிக்கல் என்றாலும், மெலடி பாடல்களில் இது ஒரு மகுடம் தான்!

இந்தப் பாட்டோட ராகம் பிருந்தாவன சாரங்கா என்று பிற்பாடு ஒரு நண்பர் சொன்னார்! நமக்கு எங்க அதெல்லாம் தெரியப் போகுது? பிருந்தாவனம் கண்ணனுக்குப் பிடிச்சதாச்சே! அதான் என் கூடவே ஒட்டிக்கிச்சி போல! 🙂

பாட்டின் ஹை-லைட் வரிகளே…நட்சத்திரத்தை எல்லாம் கூப்பிட்டுக் காதலைச் சொல்ல முடியுது, ஆனா அவளிடம் மட்டும் சொல்ல முடியலையே என்ற ஏக்கம்!

பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு

பட்டினியா கிடப்பாளே அது போலே…

பாடலைப் பார்க்க

படிக்க

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பாட்டே

நெஞ்சாங்கூட்டில் முதலில் நிற்கிறாய்!!

சிறப்பு நேயர் “நித்யா பாலாஜி”கடந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பித்திருந்தவர், தனது திருமணத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடிய நண்பர் “அய்யனார்”. றேடியோஸ்பதியின் இசைப்பதிவுகள் பதிவர்களை மட்டுமன்றி பதிவுலக வாசகர்களையும் ஈர்த்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வாரம் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு நேயர் “நித்யா பாலாஜி” பதிவுலகிற்குப் புதியவர். அத்தோடு வலைப்பதிவை இன்னும் ஆரம்பிக்காதவரும் கூட. சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய சிறப்பு நேயர் தொடரால் கவரப்பட்டுத் தனது ஆக்கத்தை முத்தான ஐந்து பாடல்களுடன் அழகாகத் தொகுத்து அனுப்பியிருக்கிறார் இவர். தொடர்ந்து நித்யா பாலாஜி பேசுவதைக் கேளுங்கள்.

நான்

வலைப்பதிவுகளுக்கு புதியவள்.

றேடியோஸ்பதியின் “சிறப்பு நேயர் தொடர்” ரொம்பவும் சுவாரஸ்யம்.

எனக்கு பிடித்த ஐந்து பாடல்களை கொடுத்திருக்கிறேன்.

இந்த பாடல்களை வழங்கினால் மகிழ்வேன்.

அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பாடல்

: சங்கீத மேகம்

படம்: உதய கீதம்

இசை: இளையராஜா

பாடியவர்: எஸ்.பி.பி

இளையராஜா

, எஸ்.பி.பி கூட்டணியில் உருவான பாடல்களில் மிக அற்புதமான பாடல் இது.

எந்த மனோநிலையில் இருந்தாலும் கேட்ககூடிய பாடல்.

“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்”

சிறப்பு நேயர் “அய்யனார்”“தனிமையின் சிறகுகளை

விடுவித்துக் கொண்டது

காலம்

பாலை மணலுதறி

பசுஞ்சமவெளியில் தடம் பதிக்கிறேன்

நெடுகிலும் நின்று கொண்டிருக்கும்

துளிர்க்காத மரங்களிலெல்லாம்

நேரடியாய்ப் பூக்களைப் பிரசவிக்கின்றன

நானொரு பெண்ணின் விரல்களை

இறுகப் பற்றிக்கொள்கிறேன்…….”

மேற்கண்ட கவிதையையே தன் திருமணச் செய்தியில் கொடுத்திருந்த நம்ம நண்பர் அய்யனார் விஸ்வநாதன் இன்று கல்பனாவை தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கின்றார்.

இவர்கள் இருவரும் மணமேடையில் இருக்கும் இந்த நேரம் சரியாக இந்தப் பதிவும் போடப்படுகின்றது.

முதலில் அய்யனார் – கல்பனா தம்பதிகள் நீடூழி காலம் நிலைக்கும் இன்பம் பொங்கும் இல்லற வாழ்வில் இனிதாய்க் கழிக்க வாழ்த்துகின்றோம். இவர்களுக்காக நாம் தரும் சிறப்புப் பாடல்

“நூறு வருஷம் இந்த

மாப்பிளையும் பொண்ணுந்தான்

பேரு விளங்க இங்கு வாழணும்”

சிறப்பு நேயர் “துளசி கோபால்”

ஸ்ரீராமின் விருப்பத்தைத் தாங்கி முத்தான ஐந்து பாடல்களோடு கடந்த வார சிறப்பு நேயர் விருப்பம் அமைந்திருந்தது. அவர் கேட்ட பாடல்கள் வரும்போது அவர் இலங்கையை விட்டு குடும்பமாக ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார். புது இடம் அவர்களுக்கு செளகரிகமான வாழ்வைக் கொடுக்கட்டும்.

சரி, இனி இந்த வார நேயர் பகுதிக்குச் செல்வோம்.

இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கவிருப்பவர் கடந்த நான்காண்டுகளாக வலையுலகில் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே கலக்கலான பதிவுகளை அளித்துவரும் டீச்சரம்மா “துளசி கோபால்”.

நகைச்சுவை இழையோடும் சொற்கட்டுக்களோடு வித விதமான அனுபவ, ரசனைப்பதிவுகளைக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே தான். தொடர்ந்து பதிவுகளை அள்ளிவிட்டாலும் ஒன்றுமே விலத்தி வைக்கமுடியாத அளவிற்கு சுவாரஸ்யமான எழுத்து நடையை அளிப்பவர். அதனால் தான் ஒவ்வொரு நாளும் மட்டம் போடாத கணிசமான மாணவர் கூட்டம் இவர் பதிவுக்கு எப்போதுமே உண்டு.

துளசி தளம் என்பது இவரின் தனித்துவமான வலைத்தளமாகும்.சாப்பிட வாங்க, விக்கி பசங்க,சற்று முன் ஆகிய கூட்டுத் தளங்களில் இவரின் பங்களிப்பு உண்டு. தொடர்ந்து துளசிம்மாவின் முத்தான ஐந்து தெரிவுகளைப் பார்ப்போம்.

நேயர் விருப்பமாக சில பாட்டுகளைக் கேட்டுருக்கேன். விருப்பமான பாட்டுக்கள்னு பார்த்தால் நூத்துக்கணக்கில் வருது. அதில் சமீபத்தியக் காலப் பாட்டுக்களை நண்பர்கள் ஏற்கெனவே விரும்பிக்கேட்டு, அதையெல்லாம் அனுபவிச்சாச்சு.

தமிழ்ப்பாட்டுக்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலைன்னா தமிழ்த்துரோகியா நினைச்சுக்குவாங்களோ என்ற ஒரு பயத்தில்(???) ரெண்டு தமிழ்ப்பாட்டுக்கள், ஒரு மலையாளம், ஒரு ஹிந்தி & ஒரு கஸல்னு என் தெரிவு இருக்கு இப்போ:-))))

இரைச்சலான இசைக்கருவிகள் ஓசையும், என்னென்றே புரிபடாத சொற்களும் நிறைஞ்சிருக்கும் பாட்டுக்களை எப்போதுமே விரும்பியதில்லை.

அழகா…மெல்லிய இசையில் மனசுக்குப் பக்கத்துலே வந்து பாடும் பாட்டுக்களைத்தான் மனம் விரும்புது.

1.விஜய் ஆண்ட்டனி இசையில் ‘டிஷ்யூம்’ என்ற படத்தில் எங்களுக்கு(!!) பிடிச்சது இது. பாடியவர்: ஜெயதேவ் & ராஜலக்ஷ்மி

பாடல்: “நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்”