நீங்கள் கேட்டவை 25

மீண்டும் ஒரு நீங்கள் கேட்டவை தெரிவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பாடல் தெரிவுகளும் இயன்றவரை அரிதான ஆனால் இனிமையான பாடல்களாகத் தருகின்றேன். கடந்த பாடல் தெரிவில் விருப்பத்தைக் கேட்ட நேயர்களில் சிறீகாந்த் இன் பாடல் தெரிவுகள் மட்டும் இன்னும் கைவசம் வந்து சேரவில்லை. ஏனையோரில் ஐந்து பேரின் விருப்பப் பாடல்களோடு என் விருப்பமும் இணைந்து வருகின்றது.

முதலில் என் விருப்பமாக “அறுவடை நாள்” திரைக்காக இசைஞானியின் இசைமைத்துப் பின்னணி ஹோரஸ் கொடுக்க சித்ரா பாடும் “தேவனின் கோயில் மூடிய நேரம்” என்றதோர் இனிய பாடல். இந்தப் பாடலை எத்தனை முறையும் அலுக்காது கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் மேடைகளில் பாடப்படுவது வெகு அரிது.

அடுத்து ஒரு மலையாளப் பாடல். றேடியோஸ்பதியின் பெருமைக்குரிய கொ.ப.செ கோபியின் விருப்பமாக மல்லுவூட்டின் All time favourite ஆன “தும்பி வா, தும்பக் குளத்தே” என்று எஸ்.ஜானகி பாட இளையராஜா இசையமைப்பில் “ஓளங்கள்” திரைக்காக இடம்பெறுகின்றது.

காமிரா கவிஞர் சிவிஆர் விரும்பிக் கேட்ட “பாஞ்சாலங்குறிச்சி” திரைப்பாடல் சுவர்ணலதா குரலில் தேவா இசையமைப்பில் வருகின்றது. தன் விருப்பமாக மட்டுமன்றி இசைப்பிரியர்களுக்கும் இந்தப் பாடல் சென்றடைய வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் இந்த indoor & outdoor ஸ்பெஷலிஸ்ட் 😉

தங்கமலை ரகசியம் திரையில் இருந்து ஒரு தங்கபுதையலைக் கேட்டிருக்கின்றார் வசந்தன்.
பி.சுசீலா பாடும் “அமுதைப் பொழியும் நிலவே” என்ற அந்தப் பாடலை ரி.ஜி.லிங்கப்பா இசையமைத்திருக்கின்றார்.

இன்று தொடந்து ஒரே தனிப் பெண் குரல் பாடல்களாக ஒலிக்கிறதே என்று சலிப்பவர்களை ஆறுதல்படுத்த நிறைவாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் ஜோடிப்பாடல் ரிஷான் ஷெரிப் விருப்பமாக “அண்ணா நகர் முதல் தெரு” திரையில் இருந்து சந்திரபோஸ் இசையில் “மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டாக” ஒலிக்கின்றது.

பாடல்களைக் கேட்பதோடு உங்கள் விருப்பப்பாடல்களையும் அறியத் தாருங்கள். இலகுவில் கிடைக்காத அரிய பாடல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேடித் தருகின்றேன். அவற்றுக்குக் கொஞ்சம் கால தாமதம் ஏற்படுவதையும் பொறுத்தருள வேண்டுகின்றேன்.

நீங்கள் கேட்டவை 24


நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்ட பாடல்களோடு மலரும் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் நான் சந்திக்கின்றேன். இனி மாதம் ஒரு பதிவாதல் உங்கள் விருப்பப் பாடல்களோடு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். இயன்றவரை இணையத்தில் அதிகம் புழங்காத பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் விருப்பப் பாடல்களை நீங்கள் அறியத்தந்தால் அவை முன்னுரிமை கொடுத்து இடம்பெறும் என்று சொல்லிக் கொண்டு இன்றைய பதிவில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் புதுகைத் தென்றல் என்ற தமிழ்மணத்தின் புதுவரவுப் பதிவர் விரும்பிக் கேட்டிருக்கும் “செவ்வந்தி பூக்களில் செயத வீடு” பாடல் மெல்லப் பேசுங்கள் திரைப்படத்திற்காக தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் குரலில் ஒலிக்கின்றது. இசை: கங்கை அமரனின் சகோதரர், யுவனின் அப்பா

வலையுலக இசை ரசிகர் ஜி.ராகவனின் விருப்பமாக வரும் அடுத்த தேர்வு இளையராஜா சகோதரர் கங்கை அமரன் இசையில் மலர்களே மலருங்கள் திரைக்காக “இசைக்கவோ நான் கல்யாண ராகம்” என்ற இனிய பாடல் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கின்றது.

புது வரவு இலங்கைப் பதிவர் ரிஷான் ஷெரிப் கேட்டிருக்கும் பாடல் கெளரி மனோகரி திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் “பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளமானது” என்னும் பாடல். இசையை அமைத்தவர் இனியவன் என்னும் அறிமுக இசையமைப்பாளர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த இப்படத்தை வி.சி.டியில் எடுப்பதே கடினம். நடிகர்கள் உட்பட பெரும்பாலான தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு அறிமுகம் இப்படம். இலங்கை எப்.எம் வானொலிகளில் அப்போது அடிக்கடி வந்த பாட்டு இது.

அடுத்து நம்ம பெருமைக்குரிய கொ.ப.செ கோபி விருப்பமாக மலையாள காலாபாணி, தமிழில் சிறைச்சாலை ஆன திரையில் இருந்து ராஜா சார் இசையில் எம்.ஜி.சிறீகுமார், சித்ரா பாடும் “சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி” என்னும் இனிய கீதம்.

உங்களுக்கெல்லாம் போட்டாச்சு. என் விருப்பத்தையும் சொல்லி விட வேண்டாமா?
ஒரு கைதியின் டைரி திரையில் இருந்து விஜய் என்ற பெயரில் பாடிய இப்போதைய உன்னிமேனனும், உமாரமணனும் கூவும் ” பொன் மானே கோபம் ஏனோ” பாட்டைக் கேட்டுக் கிறங்கி நீங்களும் பாட்டுக் கேட்க வாருங்கள் 😉

Powered by eSnips.com

நீங்கள் கேட்டவை 23 – எம்.எஸ்.வி ஸ்பெஷல்

தமிழ்த் திரையிசை வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். இந்த மிகப் பெரிய மீடியாவில் தன் காலூன்றுவதற்காக எத்தனையோ சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்த அவர், தொடர்ந்தும் நின்று நிலைக்க வேண்டி சாதித்துக் காட்டியவை எம்.எஸ்.வி அவர்கள் திரையிசையில் போட்ட பல்லாயிரம் மெட்டுக்கள் தான்.

காதல், வீரம், சோகம், நகைச்சுவை, கோபம், விரகதாபம், சிந்தனை, பொறாமை, வஞ்சனை, வெட்கம் என்று மனிதரது எத்தனையோ குணாதிசயங்களை எத்தனையோ வகை வகையான மெட்டுக்களால் வகைப்படுத்திக் காட்டியவர் இவர்.

பாரம்பரிய இசையை உள்வாங்கித் தரும் இசைப் பாட்டு, மேற்கத்தேயப் பாணியை உள்வாங்கித் தரும் இசைப்பாட்டு, கீழத்தேயத்தின் தாக்கத்தில் ஒரு பாட்டு என்று எத்தனையோ புதுமைகளைச் செய்தவர் எம்.எஸ்.வி.

இந்தச் சாதனைத் திலகத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால் பல சுவையான சங்கதிகள் தொக்கி நிற்கும். ஓவ்வொரு இயக்குனரின் சிந்தனையோடும் , ஒளிப்பதிவாளரின் காட்சிப் பகிர்வோடும் முரண்படாது கைகோர்த்துப் பயணிக்கும் எம்.எஸ்.வியின் இசைப் பயணம்.

ஒவ்வொரு பாடகரிடம் இருந்தும் எதைப் பெறவேண்டும் என்பதையும், அதே நேரத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில் புதுக்குரலை அறிமுகப் படுத்தவேண்டும் என்பதையும் நன்கே தெரிந்தவர் இவர்.

“உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா” என்று விட்டுவிடமுடியாது. இந்த எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் தான் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்பட வேண்டும். இந்த முனைப்பில் முதலில் சர்வேசன் தன் சிந்தனையை முதலில் தட்டிவிட்டார். தொடர்ந்து நெல்லை சிவாவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.

இந்திய மத்திய அரசின் அங்கீகாரம் இதுவரை கிடைக்காத எம்.எஸ்.வி இற்கு பெட்டிஷன் மூலம் குரல் கொடுப்போம் வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குங்கள். இதுவரை 312 வாக்குகள் கிடைத்திருக்கின்றது. இது பல்லாயிரம் ஓட்டுக்களாகக் குவியவேண்டும் என்பதே எம் அவா.

http://www.petitiononline.com/msv2008/petition.html

இந்த வார நீங்கள் கேட்டவை பாடல்கள் அனைத்துமே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் மலரும் பாடல்களாக, சர்வேசன் மற்றும் நெல்லை சிவாவின் பதிவுகளில் மேற்கோள் காட்டிய பாடல்கள் சர்வேசனின் வேண்டுகோளுக்கிணங்க மலர்கின்றன.

முதலில் வருவது “கிருஷ்ண கானம்” என்னும் இசைத் தொகுப்பில் இருந்து “ஆயர் பாடி மாளிகையில்” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேட்கலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

தொடர்ந்து எனக்கு எப்போதும் பிடித்த All time favourite MSV பாட்டு “முத்தான முத்தல்லவோ” திரையில் இருந்து எம்.எஸ்.வியும் , எஸ்.பி,பாலுவும் பாடும் “எனக்கொரு காதலி இருக்கின்றாள்”. இந்தப் பாடலில் ஸ்வர ஆலாபனை செய்வாரே எம்.எஸ்.வி அந்தப் பாகம் இவரின் சாகித்யத்துக்கு ஒர் சான்று.

Get this widget | Track details | eSnips Social DNA

அடுத்த பாடல் “பூக்காரி” திரையில் இருந்து எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸாக வந்த மு.க.முத்துவுக்காகக் குரல் கொடுக்கும் T.M.செளந்தரராஜன், எஸ்.ஜானகி “காதலின் பொன் வீதியில்” என்று பாடுகின்றார்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

M.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன “நினைத்தாலே இனிக்கும்” திரையில் இருந்து அதே வரிகளை மட்டுமே நிறைத்துப் பாடல் பண்ணியிருக்கும் அற்புதக் கலவையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் குரல் ஜாலம் காட்டியிருக்கின்றார்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

அடுத்ததாக “சிம்லா ஸ்பெஷல்” திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “உனக்கென்ன மேலே நின்றாய்” என்ற பாடல் வருகின்றது.

Get this widget | Track details | eSnips Social DNA

நிறைவாக ஒரு போனஸ் பாட்டு,பாடல் இடம் பெற்ற திரைப்படம் “கீழ் வானம் சிவக்கும்” , T.M செளந்தரராஜன் பாடும் “கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான், வாழ்க்கை உண்டானதே”
இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே http://www.petitiononline.com/msv2008/petition.html”>ONLINE PETITION னில் கீ நாட்டு வையுங்க.

வட்டா ;-)))

Get this widget | Track details | eSnips Social DNA

நீங்கள் கேட்டவை 22


வழக்கம் போல் உங்கள் தெரிவுப் பாடல்களோடு இன்னொரு இசைவிருந்தாக மலர்கின்றது நீங்கள் கேட்டவை 22.

இன்றைய பாடற் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் வி.எஸ்.கே விரும்பிக் கேட்டிருக்கும் பாடலை பி.சுசீலா மற்றும் உமா ரமணன் பாட, இளையராஜா இசையில் “அமுதே தமிழே எனதுயிரே” என்ற பாடல் “கோயில் புறா” திரைக்காக ஒலிக்கின்றது.

அடுத்ததாக சந்தன முல்லை, “பயணங்கள் முடிவதில்லை” திரையில் இருந்து “சாலையோரம் சோலை” என்ற பாடலை இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடக் கேட்கின்றார்.

தொடர்ந்து சார்ஜாவில் இருந்து Backi கேட்டிருக்கும் பாடல் “கிழக்குக் கரை” திரையில் இருந்து சித்ரா பாடும் “சிலு சிலுவெனக் காத்து” தேவாவின் இசையில் மலர்கின்றது.

நிறைவாக ஐயப்பன் கிருஷ்ணன் கேட்டிருக்கும் பாடல் “மணிச்சித்ர தாளு” என்ற மலையாளத் திரையில் இருந்து “ஒருமுறை வந்து பார்ப்பாயா” என்ற பாடலை சுஜாதா பாட எம்.ஜி ராதாகிருஷ்ணன் இசையமைத்திருக்கின்றார்.
இப்பாடலின் வீடியோ வடிவைக் காண உடனே நாடுங்கள் வீடியோஸ்பதி ;))

Powered by eSnips.com

நீங்கள் கேட்டவை 21

வழக்கம் போல் வகை வகையான பாடல்களை வலைப்பதிவர்கள் கேட்டிருக்கும் நீங்கள் கேட்டவை 21 இல் சந்திக்கின்றோம்.

இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியின் முதல் பாடல் அண்மையில் மறைந்த நடிகர் விஜயனுக்கு அர்ப்பணமாக ஒலிக்கின்றது. ஏற்கனவே வீடியோஸ்பதியில் விஜயன் நினைவாக “நிறம் மாறாத பூக்கள்” திரைப்படத்தில் இருந்து “ஆயிரம் மலர்களே மலருங்கள்” பாடலைத் தந்திருக்கின்றேன். றேடியோஸ்பதியில் ஒலி வடிவில் நடிகர் விஜயன் நடித்த “ஒரு விடுகதை ஒரு தொடர்கதை” திரைப்படத்தில் இருந்து ” விடுகதை ஒன்று….தொடர்கதை ஒன்று” என்ற பாடலை கங்கை அமரன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடக் கேட்கலாம். காலம் மறக்கடிக்காத பாடல் உங்கள் காதுகளையும் வருடட்டும்.

சரி இனி நீங்கள் கேட்ட பாடல்களுக்குச் செல்வோம்.

முதலில் பாடலை விரும்பிக் கேட்டிருக்கும் சுதர்சன் கோபால், ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் இருந்து “ஏடு தந்தானடி தில்லையிலே” என்ற இனிய பாடலை வரலஷ்மி பாடக் கேட்கின்றார். இசை: குன்னக்குடி வைத்திய நாதன்

அடுத்ததாக ஜீ 3 இன் விருப்பமாக மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்து அதே வரிகளோடு கே.ஜே. ஜேசுதாஸ் பாடும் பாடல் இளையராஜா இசையில் மலர்கின்றது.

அவள் அப்படித்தான் திரைப்படத்தில் இருந்து நக்கீரன் விரும்பிக் கேட்கும் பாடல் ஒலிக்கின்றது. “வாழ்க்கை ஓடம் செல்ல” என்ற அந்தப் பாடல் எஸ்.ஜானகி குரலில் இளையராஜா இசையில் ஒலிக்கின்றது.

நிறைவாக சந்தன முல்லை, “வான் போலே வண்ணம் கொண்டு: என்ற பாடலை சலங்கை ஒலி திரையில் இருந்து இளையராஜா இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடக் கேட்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.

முகப்புப் பட உதவி : சீர்காழி இணையத் தளம்

Powered by eSnips.com

நீங்கள் கேட்டவை 20


நீங்கள் கேட்டவை 20 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த வாரமும் நிறையப் பதிவர்கள் தங்களுடைய விருப்பப் பாடலுக்காகக் காத்திருக்கின்றார்கள். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இதோ உங்களுக்காக

முதலாவதாக நம்ம வலைப்பதிவின் கொ.ப.செ கோபி விரும்பிக் கேட்ட பாடல் “தளபதி” திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” இசை: நம்ம இளையராஜா

தொடர்ந்து பதிவர் முத்துலெட்சுமி விரும்பிக் கேட்டிருக்கும் “என் ஜீவன் பாடுது” திரைப்படப் பாடலான “ஒரே முறை உன் தரிசனம் பாடலை இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடுகின்றார்.

வடுவூர் குமார், ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா பாடும் “தவிக்குது தயங்குது ஒரு மனது” பாடலை “நதியைத் தேடி வந்த கடல்” படத்திலிருந்து கேட்டிருக்கின்றார். இசையமைப்பாளர் யாரென்று சொல்ல மாட்டேன் ;))

நீண்ட நாட்களாக இந்தப் பாடல் வருமா? என்று ஓட்டுப் போட்ட பொதுஜனம் போலக் காத்திருக்கும் ஜி.ராகவனுக்காக “சந்திப்பு” திரையில் இருந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடும் “ராத்திரி நிலாவில்” என்ற பாடல் தமிழ் வலை உலகில் முதலாவதாக (;-))) இடம்பெறுகின்றது.

நிறைவாக ஒரு நிறைவான ஈழத்துப்பாடலை ஈழத்துச் சகோதரன் ஒருவர் கேட்டிருக்கின்றார். “நெய்தல்” என்ற ஒலிப்பேழையில் இருந்து ஜி.சாந்தன் பாடும் “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்” என்ற பாடல் காற்றில் மிதக்கின்றது.

பிற்குறிப்பு:
இந்த நீங்கள் கேட்டவை பதிவை வலையேற்றிய பின் நம்ம கொ.ப.செ.கோபியிடமிருந்து ஒரு கண்டன மடல் தனிப்பட வந்தது. அதில் அவர் கேட்ட பாடல் தளபதியில் வரும் “அடி ராக்கம்மா கையத் தட்டு” பாடலே என்றும், “சுந்தரி கண்ணால்” ஒரு சேதி பாடலைக் கேட்கும் மனநிலையில் தான் இல்லையெனவும், காரணம் தனக்கு இன்னும் ஜோடி கிடைக்கவில்லையென்றும் வருத்தத்தோடு தெரிவித்தார் 😉
கொ.ப.செயின் கோபத்துக்கு ஆளாகாமல் இதோ அவர் கேட்ட “ராக்கம்மா கையத் தட்டு” பாடல். அத்துடன் அவரின் வேண்டுதல் நிறைவேறவும் பிரார்த்திப்போம் ;-)))

பாடல்களைக் கேட்டவண்ணம் நீங்களும் உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள்.

Powered by eSnips.com

நீங்கள் கேட்டவை 19

வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் வெல்கம் to நீங்கள் கேட்டவை 19.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஏற்கனவே பாடல்களைக் கேட்ட பதிவர்கள் வலை மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்காங்க. இதோ நீங்கள் கேட்ட பாடல்கள்.

பதிவர் முத்துலெட்சுமி, தன் சக பதிவர் மங்கைக்காகக் கேட்ட பாடல் “முத்துக் குளிக்க வாரீகளா”, அனுபவி ராஜா அனுபவி திரைக்காக, டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது.

அடுத்ததாக வெயிலானின் விருப்பமாக, இது நம்ம பூமி திரையில் இருந்து இளையராஜா இசையில் “வான மழை போல ” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.

சுந்தரி விரும்பிக் கேட்டிருக்கும் ” அஞ்சு விரல் கெஞ்சுதடி” பாடலை ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி பாட, மனோஜ்-கியான் இரட்டையர்கள் உரிமை கீதம் திரைக்காக இசையமைத்திருக்கின்றார்கள்.

நிறைவாக நம்ம ஓமப்பொடியார் சுதர்சன் கோபால், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி திரைப்படத்தில் இருந்து மனோ பாடியிருக்கும் “வந்தாள் வந்தாள் ராஜகுமாரி” பாடலை இளையராஜா இசையில் கேட்டிருக்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்ட வண்ணம் உங்கள் தெரிவுப் பாடல்களையும் அறியத் தாருங்கள். வட்டா…;)

Powered by eSnips.com

நீங்கள் கேட்டவை 18

இன்றைய நீங்கள் கேட்டவை 18 பதிவில் நான்கு முத்தான பாடல்கள் இடம்பெறுகின்றன.

முதலில் சர்வேசனின் விருப்பமாக மலரும் “காதோடு தான் நான் பாடுவேன்” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, வி.குமாரின் இசையில் “வெள்ளி விழா” திரைக்காக ஒலிக்கின்றது.

தொடர்ந்து ஒலிக்கும் பாடல் கீர்த்திகாவின் விருப்பமாக டி.எம்.செளந்தரராஜன் பாடும் “நதியினில் வெள்ளம்” என்ற பாடல் “தேனும் பாலும்” திரைக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெறுகின்றது.

அடுத்து வரும் இரண்டு பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர் இசைஞானி இளையராஜா
அவற்றில் முதலில் வரும் “ஆனந்த ராகம்” என்ற பாடலை உமாரமணன் பாட சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம் பெற்ற திரைப்படம் “பன்னீர் புஷ்பங்கள்”.

நிறைவாக நெல்லைக் கிறுக்கன் தேர்வில் “இளமைக் காலங்கள்” திரைக்காக “பாட வந்ததோர் கானம்” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா ஆகியோர் பாடக் கேட்கலாம்.

Powered by eSnips.com

நீங்கள் கேட்டவை 17

இன்றைய நீங்கள் கேட்டவை பதிவும் பல்வேறு காலகட்டத்துப் பாடல்களோடு மலர்கின்றது. சரி, உடனேயே இன்றைய பாடல் பகுதிக்குப் போகலாம்.

முதலில் வெயிலான் விரும்பிக் கேட்ட “பெண்ணல்ல நீ ஒரு பொம்மை” என்ற பாடல் வி.குமாரின் இசையில் “சொந்தமடி நீ எனக்கு” திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், சுசீலா பாடும் பாடலாக மலர்கின்றது.

அடுத்ததாக மாயாவின் விருப்பமாக “நெஞ்சில் ஓர் ஆலயம்” திரையில் இருந்து P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்” என்ற பாடல் வருகின்றது.
பாடல் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள்

கோபிநாத் விருப்பமாக “புதிய பறவை” திரையில் இருந்து “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடுகின்றார்.

நட்பு திரையில் இருந்து நக்கீரன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் இளையராஜா இசையில் வரும் “அதிகாலை சுபவேளை” பாடலைக் கேட்கலாம்.

நிறைவாக சர்வேசனின் விருப்பமாக “ராஜா சின்ன ராஜா” என்ற இனிய பாடலை பூந்தளிர் படத்திற்காக பி.சுசீலா, இளையராஜா இசையில் பாடுகின்றார்.

Powered by eSnips.com

நீங்கள் கேட்டவை 16

நீங்கள் கேட்டவை 16 பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களோடு இந்த நிகழ்ச்சி வாரா வாரம் இடம்பெறுகின்றது. எனவே தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள், அவை பிந்திய பதிவுகளில் வரக் காத்திருக்கின்றன.

சரி,இனி இந்த வாரப் பாடல் தெரிவுகளுக்குச் செல்வோம்.

முதலாவதாக அய்யனாரின் விருப்பமாக “நண்டு” திரைப்படத்தில் இருந்து “மஞ்சள் வெய்யில்” என்ற பாடலை உமா ரமணன் பாடுகின்றார். இசைய வைத்தவர் இசைஞானியே தான்.

அடுத்த தெரிவாக “ரசிகன் ஒரு ரசிகை” திரையில் இருந்து நெல்லைக் கிறுக்கன் தேர்வு செய்திருக்கும் “பாடியழைத்தேன்” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் தன் அருமை நண்பர் ரவீந்திரன் இசையில் பாடுகின்றார்.

வடுவூர் குமாரின் விருப்பமான ” மஞ்சள் நிலாவுக்கு” என்ற பாடலை, இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன், பி.சுசீலா, ஆகியோர் முதல் இரவு திரைக்காகப் பாடுகின்றார்கள்.

லட்சுமி திரைப்படத்தில் இருந்து “மேளம் கொட்ட நேரம் வரும்” என்ற பாடல் பி.எஸ்.சசிரேகாவின் குரலில் ஜி.ராகவனின் விருப்பமாக மலர்கின்றது.

மதி கந்தசாமி விரும்பியிருக்கும் “ஆஹா” படப் பாடலான முதன் முதலில் பார்த்தேன்” என்ற பாடலை ஹரிஹரன், தேவா இசையில் பாடக் கேட்கலாம்.

வெயிலான் உட்பட பல நேயர்களின் பாடல்கள் இன்னும் வர இருக்கின்றன. அடுத்த வாரம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Powered by eSnips.com