தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் – iTunes இல் அரங்கேறும் றேடியோஸ்பதி

சோழப்பேரரசு தன் உச்சத்தில் இருந்த காலத்தின் கல்வெட்டாய் கம்பீரமாய் இன்றும் திகழ்வது தஞ்சைப் பெருங்கோயில் என்று சிறப்பிக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம். ராஜராஜசோழ மன்னன் தன் காலத்தில் சமயத்தையும், கலையையும் எவ்வளவு உச்சமாக மதித்தான் என்பதற்குச் சான்றாக இன்றும் மிடுக்கோடு நிற்கின்றது இந்த இராஜராஜேஸ்வரம்.

இவ்வாலயம் எழுப்பி இந்த ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் கடக்கின்றது என்பது பெருமையோடு நினைவுகூர வைக்க வேண்டிய விடயம். இதுவரை என் இந்தியப்பயணங்களில் தஞ்சைப் பெருங்கோயிலைக் காண வாய்ப்புக் கிட்டவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் படைக்கும் “அறிவுக்களஞ்சியம்” நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அறிவிப்பாள சகோதரி திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவை அழைத்து ஒரு சிறப்புப் படையலைப் படைத்திருந்தேன். இவர் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் சென்ற அந்த அனுபவங்களை மிகவும் சுவையாகப் பகிர்ந்த போது இடையிடையே “ராஜ ராஜ சோழன்” படத்தில் வரும் இவ்வாலயத்தின் சிறப்பைக் கூறும் பாடல்களையும் கொடுத்து ஒரு சிறப்புப் பெட்டக நிகழ்ச்சியாக அமைத்தோம்.

இப்போதெல்லாம் Apple நிறுவன உற்பத்திகளை ஆளாளுக்கு iPhone, iPod, iPad ஆகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கையில் றேடியோஸ்பதியின் அடுத்த பரிமாணமாக முதல் Podcast ஆக இந்த “தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம்” என்ற ஒலிப்பெட்டகத்தைத் தருவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். தொடர்ந்து இவ்வகையான சிறப்புப் பெட்டக நிகழ்ச்சிகள், கலைஞர்கள் பேட்டிகளும் வர இருக்கின்றன. தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி, Apple நிறுவனத்துக்கு ஒரு “ஓ”.

இந்த ஒலிப்பகிர்வை itunes வழியாக நேரடியாகத் தரவிறக்கி உங்கள் ஒலிப்பெட்டியில் இணைக்க

http://itunes.apple.com/podcast/thanjai/id383047672

நேரடியாகக் கேட்க

தஞ்சைப் பெருங்கோயில் புகைப்படம் நன்றி: travel.webshots.com

யாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல்

இன்று ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதன் நேர்முக வர்ணனையை யாழ்மண்ணில் இருந்து தொலைபேசி வாயிலாக யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு.ஜெசிமன் சிங்கராயர் வழங்க நிகழ்ச்சியைச் சிறப்பானதொரு ஒலிப்படையலாகக் கொடுத்திருந்தார்கள் எமது 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திரு பிறின்ஸ் இமானுவேல் மற்றும் அவர் துணைவி திருமதி சோனா பிறின்ஸ் ஆகியோர்.

ஒலிஅஞ்சலைத் தொடர்ந்து கேட்க

பாகம் 1

தரவிறக்க (to download)

பாகம் 2

தரவிறக்க (to download)

பாகம் 3

தரவிறக்க (to download)

பாகம் 4

தரவிறக்க (to download)

பாகம் 5

தரவிறக்க (to download)

நவராத்திரி கானங்கள்

இன்றைய நவராத்திரி நிறைவு நன்னாளிலே சிறப்பாக தேவியரைத் துதிக்கும் தனிப்பாடல்கள் மற்றும் திரையிசைப்பாடல்களைத் தாங்கிய ஒன்பது தெய்வீக இசைத் துளிகளை உங்கள் முன் படையலாக்குகின்றேன். அவல், சுண்டல், வடை, முறுக்கு போன்ற நைவேத்யங்களோடு இந்த இசை நிவேதனமும் கலக்கட்டும்.

பாடல் ஒன்று

“தாய்மூகாம்பிகை திரையில் இருந்து இளையராஜா பாடும் “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ”

பாடல் இரண்டு

“தாய்மூகாம்பிகை” திரையில் இருந்து பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.வி, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், ஜானகி பாடும் ” தாயே மூகாம்பிகையே” (பாடல் உதவி; கோ.ராகவன்)

பாடல் மூன்று

“வியட்னாம் காலனி” திரையில் இருந்து பாம்பே ஜெயசிறீ பாடும் “கை வீணையை ஏந்தும் கலைவாணியே”

பாடல் நான்கு

“சரஸ்வதி சபதம்” திரைப்படத்தில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன் பாடும் “அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி”

பாடல் ஐந்து

மஹாகவி காளிதாஸ் திரையில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன், பி சுசீலா பாடும் “கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்”

பாடல் ஆறு

தண்டபாணி தேசிகர் பாடும் “ஜகஜனனி”

பாடல் ஏழு

“மேல்நாட்டு மருமகள்” திரையில் இருந்து வாணி ஜெயராம் பாடும் “கலைமகள் கையில்”

பாடல் எட்டு

ஆத்மா திரையில் இருந்து ரி.என்.சேஷகோபாலன் பாடும் “இன்னருள் தரும் அன்னபூரணி”

பாடல் ஒன்பது

நிறைவாக ஜெயச்சந்திரன், பி.சுசீலா பாடும் வெள்ளிரதம் திரைப்படத்தில்
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடும் “அலைமகள் கலைமகள்”

நிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008

கடந்த இருபத்து நான்கு நாட்கள் நிகழ்ந்த ஈழத்திரு நாட்டின் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மகோற்சவ நிகழ்வுகளில் இன்று தீர்த்தத் திருவிழா. கடந்த ஆண்டு மடத்து வாசல் பிள்ளையாரடியில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, அடியார்களின் மகிமைகளைக் கொடுத்திருந்தேன். அந்த முழுத்தொகுப்பினையும் பார்க்க “நிறைவான நல்லூர்ப்பயணம்”.

இந்த ஆண்டு நண்பர் ஆயில்யனின் ஆலோசனைப்படி இருபத்தைந்து நாட்கள் ஒலியிலும், இசையிலும் இவ்வாலயத்தின் மகோற்சவ காலத்தை நினைவில் நிறுத்த வாய்ப்பாக அமைந்தது.

இந்தவேளை நண்பர் விசாகனின் “நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா” என்னும் பதிவு நேற்று வெளியாகி எம் பழைய அந்த நினைவுகளை மீட்கவும் அமைந்த நற்பதிவாக இருக்கின்றது. அப்பதிவிற்குச் சென்று பார்த்து உங்கள் அபிப்பிராயத்தையும் அவருக்குச் சொல்லுங்கள்.

நம் தாயகத்தில் இருந்து வரும் “நல்லூர் கந்தசுவாமி கோயில்” என்னும் புகைப்படப் பதிவும் தொடர்ச்சியாக இந்த மகோற்சவத்தின் ஒவ்வொரு நாட் புகைப்படப் பதிவுப் பெட்டகமாக இருக்கின்றது.


நேற்று எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் திரு டோனி.செபரட்ணம் அவர்கள் ஒருங்கிணைப்பில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளில்

“சிவனருட் செல்வர்” திரு ஆறு. திருமுருகன் அவர்கள் ஆலயத்தில் இருந்து அதிகாலை வழங்கிய சிறப்புரை

தேர்த்திருவிழாவின் நேரடி வர்ணனையை வானொலி மாமா மகேசன் அவர்களோடு திரு.ஆறு திருமுருகன் அவர்கள் பகிரும் ஒலிப்பகுதி

நல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று

ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்த ஆண்டு கொடியேறி கடந்த இருபத்து மூன்று நாட்கள் தொடர்ந்த மகோற்சவ நிகழ்வில் இன்று எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவனின் பெருங்கருணை நம் எல்லோர் மீதும் பரவட்டும். அநீதிகள் ஒழிந்து, இன்னல்கள் அகன்று, சுபீட்சமானதொரு யுகத்தை நம் உறவுகள் பெறட்டும்.

கடந்த ஆண்டு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வழங்கிய ரதோற்சவ நாள் ஒலிப்படையல்கள் இதோ:

காலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு

Get this widget Share Track details


ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது

Get this widget Share Track details

தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய “தேர்த் திருவிழாவின் சிறப்பு” என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு

அல்லது இங்கே சொடுக்கவும்

சப்பரத் திருவிழா – முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (ஒலிவடிவில்)


நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் இன்று சப்பரத்திருவிழாவில் எம்பெருமான எழுந்தருள இருக்கும் இவ்வேளை, கடந்த ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நல்லைக் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நாளன்று அதிகாலையில் படைத்த சிறப்பு வானொலிப்படைப்பைப் பேணிப் பாதுகாத்து இங்கே தருகின்றேன் உங்களுக்கு.

இருபத்திரண்டாந் திருவிழா – ஞானதேசகனே சரணம்!


இன்றைய நல்லூர் கந்தன் மகோற்சவ காலச் சிறப்புப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடலான “ஞானதேசிகனே சரணம்” என்ற பாடலை ஈழத்துச் சங்கீத மேதை பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.

இருபத்தோராந் திருவிழா – வள்ளி மணவாளனையே பாடுங்கள்


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

இருபதாந் திருவிழா – குருநாதனைப் பாடியே கும்மியடி…!


நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலச் சிறப்புப் பதிவுகளில் இன்று கும்மியடி பெண்ணே கும்மியடி குருநாதனைப் பாடியே கும்மியடி என்னும் நற்சிந்தனைப் பாடல் இடம்பெறுகின்றது.

பத்தொன்பதாந் திருவிழா – புள்ளி மயில் ஆடுது பார்!


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்