இந்தப் படத்தில் இன்னொரு மெட்டு சின்னக்குயில் சித்ரா குரலில் “ஒரு ராஜா வந்தானாம்” ஏக பிரபலம்.
https://soundcloud.com/kanapraba/ms10
இந்தப் படத்தை இத்தகு இசை நுட்பத்தோடு அனுபவித்துக் கேட்க இன்னொரு முறை திரையிடப்படாதா என்ற ஆசையும் ஊறுகிறது.
☘️? இசைஞானி இளையராஜாவின் 300 வது படம் ?☘️
? உதய கீதம் ? பின்னணி இசைத் தொகுப்பு ?
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு முழு நீளத் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
றேடியோஸ்பதி http://www.radiospathy.com/ என்ற என்னுடைய இசை ரசனைப் பதிவுத் தளத்தின் பத்தாண்டு கடந்த பயணத்தில் இதுவரை 526 இடுகைகளைப் பகிர்ந்துள்ளேன். இவற்றில் பின்னணி இசைத் தொகுப்பு, பாடல் ரசனை, சிறப்பு நேயர், கலைஞர்களின் ஒலிப் பேட்டிகள், பல்வேறு இசையமைப்பாளர்களின் சிறப்புத் தொகுப்புகள் அமைந்துள்ளன.
இந்தப் பத்தாண்டுப் பயணத்தின் சிறப்புப் பகிர்வாக இசைஞானி இளையராஜாவின் 300 வது படமாக அமைந்த, வெளிவந்து 32 ஆண்டுகளைத் தொட்டிருக்கும்
“உதய கீதம்”திரைப்படத்தின் முழு நீளப் பின்னணி இசையைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இசைஞானி இளையராஜாவின் தேனிசை தடவிய முத்தான பாடல்கள், எண்பதுகளின் வசூல் தயாரிப்பாளர் கோவைத் தம்பி, நடிகர் மோகன் இவர்களோடு ராஜாவின் இசையில் ஜனரஞ்சக வெற்றிகளைக் குவித்த கே.ரங்கராஜ் இயக்கம் சேர்ந்த வெற்றிக் கூட்டணி இது.
இதோ தொடர்ந்து உதய கீதம் படத்தின் பின்னணி இசையை அனுபவியுங்கள்.
YouTube வழி
https://youtu.be/dIIsYARF65E
Mixcloud வழி
அக்னி நட்சத்திரம் திரைப்படம் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைந்து விட்டன ஆனால் இன்றும் ஏதாவது பண்பலை வரிசை வானொலியில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்கும் போது நவீனத்துவம் கெடாத இசையை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கின்றது. இசைஞானி இளையராஜா – மணிரத்னம் கூட்டணியில், நாயகன் படத்துக்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்போடு வந்த படம், நாயகன் அளவுக்கு உச்சத்தை எட்டவிட்டாலும் கூட அந்தக் காலகட்டத்தில் இந்தப் படத்தின் வித்தியாசமான உருவாக்கத்துக்காகப் பேசப்பட்டது. அப்போது நான் இடைநிலைப்பள்ளி மாணவன், எங்களூரில் அரிதாகத் தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களில் ஒன்றாக, இந்தத் திரைப்படம் மனோகரா தியேட்டரில் திரையிட்டபோது, சக நண்பர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து மதில் பாய்ந்து களவாகப் போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து, அப்போது அறிமுக நாயகியாக வந்த நிரோஷா குறித்துப் பகிர்ந்த சிலாகிப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல 🙂
அக்னி நட்சத்திரம், பிரபு கார்த்திக் கூட்டணியில் வந்த படம், நாயகன் பிரபுவின் பெயர் கெளதம் பின்னாளில் கார்த்திக் மகனுக்கே பெயராக அமைந்ததும், இந்தப் படத்தின் வாகனச் சாரதியாக இயங்கிய லட்சுமிபதி என்ற பெயரே வி.கே.ராமசாமியின் சாரதியாக நடித்த ஜனகராஜ் இற்கும் அமைந்தது எதேச்சையான விடையமோ தெரியவில்லை. பிரபு, கார்த்திக் கூட்டணி பின்னாளில் ஆர்.வி.உதயகுமாரின் முதல் படம் உரிமை கீதம், இரும்புப்பூக்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ராவணன் வரை இருந்தாலும், இந்தப் படம் அளவுக்கு எந்தப் படமும் பேர் வாங்கவில்லை. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் கூட்டணியும் வருஷம் 16 படம் போல இந்தப் படத்திலும் சேர்ந்திருந்தார்கள் “பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்ற பிரபல வசனம் இந்தப் படம் மூலம் பரவலாகப் பேசப்பட்டது. ஜனகராஜ் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இதே போல் இன்னொன்று படிக்காதவன் படத்தில் வரும் “என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா”. நடிகர் விஜய்குமாருக்கு மீள் வரவாக அமைந்தது இந்தப் படம், அப்போது தந்தை பாத்திரம் ஏற்று நடிக்கக் கொஞ்சம் தயங்கினார் என்றும் சொல்லப்பட்டது, ஆனால் இந்தப் படம் தான் சமீப ஆண்டுகள் வரை விஜய்குமாரைத் தொடர்ந்து திரையுலகில் அடுத்த சுற்றில் நிலைத்து நிற்க வழிகோலியது. ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி.உமாபதி வில்லனாக நடித்திருந்தார்.
அமலா என்ற அழகுப்பதுமை, ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று சொல்லிக்கொண்டே அஞ்சலி என்று தன் பேரைச் சொல்லும் குறும்புக்காரி, அமலாவுக்கும் இந்தப் படம் மிகவும் பேர் சொன்ன படமாக அமைந்து விட்டது. நிரோஷா வந்த காட்சிகள் சொற்பம், அவரின் வசன உச்சரிப்பும் கொழ கொழ என்றாலும் அந்த சில்க் ரக கவர்ச்சிமுகம் மறக்க முடியுமா?
நாயகன் படத்துக்கு முன்பே அக்னி நட்சத்திரம் எடுக்கப்படவிருந்ததாகவும் பி.சி.ஶ்ரீராம் தான் மணிரத்னத்தைத் தாமதிக்குமாறு சொன்னதாகவும் பி.சி.ஶ்ரீராமே அண்மையில் சொல்லியிருந்தார்.இந்தப் படத்தைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் முந்திய படங்கள் அளவுக்கு இல்லாத ஒருவரிக்கதை, ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் அமைத்த காட்சிகளின் வடிவமைப்பும், இசைஞானி இளையராஜா கொடுத்த ஆறுபாடல்களும் தான் மிக முக்கிய பலம். குறிப்பாக இந்த ஆறுபாடல்களில் “ராஜா ராஜாதிராஜனெங்கள் ராஜா” பாடல் அந்தக் காலத்தில் பெற்ற உச்சமே தனி. அதே பாணியில் ஒரு பாடலை மெட்டமைத்துத் தருமாறு என்னப் பெத்த ராசா படத்தில் காட்சி அமைக்கும் அளவுக்குப் பிரபலம். பின்னர் ராஜாதி ராஜா படத்தில் “மாமா உன் பொண்ணைக் கொடு” பாடலில் வாத்திய இசையாகவும் இப்பாடல் ஒலிக்கும்.
சங்கர் கணேஷ் இரட்டையர்கள் கூட “வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா” என்று நியாய தராசு படத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள். அதை முன்னர் இங்கே பகிர்ந்திருக்கிறேன். http://www.radiospathy.com/2007/11/blog-post.html
இளையராஜாவின் அந்த ஒரு பாடல் தவிர மீதிப்பாடல்களை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்களை எழுதும் பணியை வாலி கையாண்டார். என்னுடைய முதல் பத்து விருப்பத்தேர்வுகளில் “வா வா அன்பே அன்பே” என்றும் இருக்கும். எப்போது கேட்டாலும் மீண்டும் ஒருமுறை என்று மனசு கட்டளை இடும் வரை அலுக்காமல் கேட்பேன். நின்னுக்கோரி வர்ணம் பாடல் அந்தக் காலத்து கோயில் திருவிழா மெல்லிசை மேடைகளில் உள்ளூர்ப்பாடகர்கள் பாடியபோதே பிரமித்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
ஏனோ தெரியவில்லை இதே படத்தைத் தெலுங்கில் கர்சனா என்று மொழிமாற்றும் போது எஸ்.ஜானகிக்குப் பதில் வாணிஜெயராம் ஐப் பாடவைத்தது சுத்தமாக எடுபடவில்லை. கே.ஜே.ஜேசுதாஸ், இளையராஜா குரல்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியமே பயன்பட்டார், சித்ரா தன்னுடைய அதே பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இதோ தொடர்ந்து அக்னி நட்சத்திரத்தின் 34 இசைக்குளிகைகைக் கேட்டு இன்புறுங்கள்.
முதலில், கார்த்திக் – நிரோஷா தோன்றும் காதல்காட்சிகள் மூன்றை ஒன்றாக இணைத்துத் தரும் கோப்பு
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
பிரபு, கார்த்திக் இருவரும் சேர்ந்து விஜய்குமாரை வேறு இடத்துக்கு மாற்றும் நீண்ட காட்சியில் வரும் நீண்ட பின்னணி இசை
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா தன் மகன் கார்த்திக்கை தன்னுடைய தந்தையின் மூத்த சம்சாரம் வீட்டுக்குப் போகச் சொல்லும் காட்சியில் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தையைத் தேடி அவரின் மூத்த சம்சாரம் வீட்டுக்கு வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தை விஜ்யகுமாருடன் உரையாடல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 குடிபோதையில் இருக்கும் தந்தையை கார்த்திக் அவரின் வீட்டுக்கு அழைத்துச் சொல்லும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 அமலா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு கார்த்திக் சந்திப்பு (பிரபலமாகப் பேசப்பட்ட இடிக்கும் ஓசை) 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாரைக் கண்டு அவர் மகள் தாரா போக முனையும் போது, முத்த மனைவி சுமித்ரா காணும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, அமலா காதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா – கார்த்திக் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு போலீஸ் பணியில் பதவியேற்றதை அறியும் கார்த்திக் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு,கார்த்திக் மோதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், பிரபு வீடு வந்து தாக்கும் போது பிரபுவின் தாய் சுமித்ரா காயமடையும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக் ஐக் கைது செய்யும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க, கார்த்திக் இன் தாய் ஜெயச்சித்ராவுடன் போலீஸ் நிலையம் வரும் சுமித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 தன் தங்கையின் நிச்சயதார்த்தத்துக்குத் தந்தை விஜய்குமார் வரவில்லை என்ற கோபத்தில் கார்த்திக், கவலையில் ஜெயச்சித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜ்யகுமார் தாய் இறக்கும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக்கைக் கண்டு கோபமடைதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் இன் தங்கை தாராவை ரயில் நிலையத்தில் மிரட்டும் வில்லன் கோஷ்டி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் ஐச் சந்தித்து நிரோஷா தன் காதலைப் பகிரும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், வில்லன் வீடு தேடிப்போகும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 மருத்துவமனையில் தந்தை விஜய்குமாரைத் தேடிப்போகும் தாரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் மருத்துவமனை வந்து விஜய்குமாரைச் சந்திக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் குணமடைந்த சேதி வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாருக்கான போலீஸ் பாதுகாப்பு விலகுவதாக பிரபு அறியும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திகை சேர்த்து வைக்கும் விஜய்குமார் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் பணிக்குத் திரும்பி வில்லனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிறைவுக்காட்சி இசை, ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா பாடலோடு
இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணியின் நகர்ப்புறம் சார்ந்த கதைக்களனில் வந்து, அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்று ஒரு கைதியின் டைரி. 1985 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை உண்டு பண்ண இன்னொரு காரணம், இயக்குனர் கே.பாக்யராஜ், தன் குருநாதர் பாரதிராஜாவுக்காக “சிகப்பு ரோஜாக்கள்” படத்தின் கதை, வசனம் பொறுப்பை ஏற்று கமல்ஹாசனுக்கான இன்னொரு பெரு வெற்றிப் படம் ஆக்கிய பின்னர் இணைந்த படமாக இந்த நால்வர் கூட்டணியில் “ஒரு கைதியின் டைரி” அமைந்தது. பின்னர் இதே படத்தை கே.பாக்யராஜ் ஹிந்தியில் “ஆக்ரி ராஸ்தா” என்ற பெயரில் மீளவும் அமிதாப் பச்சானை நாயகனாக்கி இயக்கி, அமிதாப்பின் திரையுலக வாழ்வில் இன்னொரு பெரும் வெற்றிப்படத்தைக் கொடுக்கக் காரணமாகியது இந்த டைரி.
ஒரு கைதியின் டைரி படத்தில் கமல்ஹாசனுடன், ராதா, ரேவதி, ஜனகராஜும் முக்கிய வில்லன் பாத்திரத்தில் பாடகர் மலேசியா வாசுதேவனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்று சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் அளவுக்கு இந்தப் படம் என் கவன எல்லைக்கு அப்பால் இருந்திருந்தது. ஆனால் ட்விட்டர் வழியாக நண்பர் சரவணன் தான் இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கொடுக்குமாறு ஒரு நேயர் விருப்பத்தை அளித்திருந்தார்.
கிட்டத்தட்ட இரண்டு நாள் பணியாக, படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓடவிட்டு பின்னணி இசையின் வாத்திய ஜாலங்கள் எனும் உறுமீன் வருமளவுக்குக் காத்திருக்கும் கொக்காகக் கவனித்து எடுத்த இசைக்குளிகைகளை மிகவும் திருப்தியோடு இங்கே பகிர்கின்றேன். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசையை வெட்டி ஒட்டிக் கல்லா கட்டும் இன்றைய யுகத்தில, இங்கே நான் கொடுத்திருக்கும் இசைக்குளிகைகளின் வாயிலாக இசைஞானி இளையராஜா அவர்கள், படத்தின் மூல ஓட்டத்தை உணர்ந்து பின்னணி இசை என்ற ரத்தம் பாய்ச்சியிருப்பதை உணர்வீர்கள். இந்த இசைத்துளிகள் அவர் ஒரு படத்தின் பாடல்கள் மட்டுமன்றி மைய இசையாக அமையும் பின்னணி இசையில் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு பயணித்திருக்கிறார் என்பது புரியும்.
இப்படி எண்ணற்ற படங்கள் மலையாகக் குவிந்திருக்கின்றன, நம் வாழும் காலத்தில் இயன்றவரை கைப்பிடி நெல்மணிகள் ஆதல் சேர்த்து உங்களிடம் அதைச் சிந்தாமல் சிதறாமல் கொடுத்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற ஒரு கடைக்கோடி ரசிகன் என் ஆதங்கத்தின் இன்னொரு வெளிப்பாடே இந்த “ஒரு கைதியின் டைரி” பின்னணி இசைத்தொகுப்பு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தயாரிப்பு நிறுவனத்தின் பூஜைப்பாடலைப் பாடும் இளையராஜா
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எழுத்தோட்ட இசை
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சிறையில் இருந்து வெளிவரும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தேவாலயம் தேடிப்போய் தன் பழைய நினைவுகளில் மூழ்கும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பழைய நண்பர் ஜனகராஜை சந்திக்கும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கமலை அடையாளம் காணும் ஜனகராஜ்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கமல் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடையும் ஜனகராஜ்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கமல் மனைவி ராதா மலேசியா வாசுதேவனால் பலாத்காரம் செய்யப்படும்போது
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஜனகராஜிடமிருந்து துப்பாக்கியைக் கைப்பற்றும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ் கமல் அறிமுகக் காட்சி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஜனகராஜிடம் ஆத்திரம் கொள்ளும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மகன் கமலை முதன்முதலில் காணும் தந்தை கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கமல்,ரேவதி சந்திப்பு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தேவாலயத்தில் நினைவுகளின் இளைப்பாறலில் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கொலை செய்யப்போகும் மர்ம நபர் (தந்தை கமல்)ஐத் தேட வலைவிரிக்கும் போலீஸ் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ் அதிகாரி வினுச்சக்கரவத்தியைப் பழிவாங்கும் காட்சி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வினுச்சக்கரவர்த்தியைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடும் நேரம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ் கமல், கொலையாளி கமலைத் துரத்தும் வேளை
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தன் தந்தை குறித்த உண்மையை அறிந்துகொள்ளும் போலீஸ் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
படத்தின் இறுதிக்காட்சி,முக்கிய வில்லனை வீரசிவாஜி சிலையாக வேஷம் தரித்த கமல் வேட்டையாடுதல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில் கதை, இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் வசனங்களை வழக்கம் போல பாசிலின் தமிழ்ப்படங்களைக் கவனித்துக் கொள்ளும் கோகுல் கிருஷ்ணா வழங்கியிருந்தார். அமலா, ஶ்ரீவித்யா, ராஜா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், எண்டே சூர்ய புத்ரிக்கு என்ற பெயரில் மலையாளத்த்திலும் வெளிவந்திருந்தது. மலையாளத்தில் நாயகன் ராஜாவுக்குப் பதில் சுரேஷ் கோபி. வழக்கமாக பாசிலின் மலையாளப்படங்கள் அவரால் தமிழுக்கு மீள இயக்கப்படும் போது மூலப்படத்தின் இசை வேறு ஒரு இசையமைப்பாளராக இருக்கும். விதிவிலக்கான ஒரு சில படங்கள் வரிசையில் கற்பூர முல்லையும் சேர்த்தி. இரண்டு படங்களின் இசையும் இசைஞானி இளையராஜாவே.
கற்பூரமுல்லை படத்தின் பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்று நான் எண்ணியிருந்தாலும் அதை உடனடியாக அமல்படுத்தவேண்டிய அவாவை உண்டு பண்ணியது, சமீபத்தில் கைரளி மலையாளத் தொலைக்க்காட்சியில் வரும் கந்தர்வ சங்கீதம் என்ற இசை நிகழ்ச்சியில் இந்தப் படம் குறித்து, பாடகி பின்னி கிருஷ்ணகுமார் வழங்கிய பகிர்வு. இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது “மாயா விநோதினி” என்ற ராகம். இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிரிக்க வைத்தது இதைக் கேட்டபோது. ஒவ்வொரு படத்திலும் இயக்குனருக்குச் சரிசமமாக, அல்லது அதற்கும்மேலாக காட்சிகளுக்கு உயிர்கொடுத்ததில் ராஜாவின் பங்கு அளப்பரியது.
இயக்குனர் பால்கி சொன்னது போல, அந்தப் பின்னணி இசையே ஏராளம் பாடல்களைப் பிரசவிக்கும் வல்லமை கொண்டன. அதுதான் ராஜா.
பாடகி பின்னி கிருஷ்ணகுமார் சொன்ன “எண்டே சூர்ய புத்ரிக்கு” (கற்பூரமுல்லை) பின்னணி இசை குறித்த பகிர்வு வீடியோ இது.
கற்பூர முல்லை” திரைப்படத்தின் பின்னணி இசையைத் தொகுத்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சியோடு இழைந்த பின்னணி இசையில் அப்படியே கிறங்கிப் போய்விட்டேன்.
ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் எவ்வளவு தூரம் ஜீவ நாடியாக அமைகின்றார் என்பதற்கு, இங்கே நான் தரும் ஒரு சிறு பின்னணி இசைக்குளிகை ஒரு சான்று.
முறை தவறிப் பிறந்த தன் மகளை ஏற்றுக் கொள்ள முடியாது மூடி மறைக்கும் சமூகத்தில் பிரபலமான தாயும், அதுவரை அவள் தான் தாய் என அறியாத மகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன்னை ஏற்கமறுக்கும் தாயைக் கண்டு மருகும் மகளின் மனக்குமுறலாக இங்கே இசை பிரவாகிக்கிறது, அதுவே மகள் பேச ஆரம்பிக்கும் போது தாயின் பக்கம் தாவி மிரட்சியோடு அலைபாய்கின்றது.
https://soundcloud.com/kanapraba/katpoora-mullai-bgm
இசைஞானி இளையராஜாவின் இத்தகு செல்வங்கள் எவ்வளவோ எண்ணற்ற படங்களில் பின்னணி இசையாக இறைந்து கிடக்கின்றன.
தொடர்ந்து கற்பூர முல்லை திரைப்படத்தின் முழுமையான பின்னணி இசையைக் கேட்டு மகிழுங்கள்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
கற்பூர முல்லை திரைப்படத்தின் முகப்பு இசை
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
மாயா விநோதினி (அமலா) தன் பெற்றோர் யாரென்று தெரியாத விரக்தியில், கல்லூரில் மேல் மாடியிலிருந்து தற்கொலை முயற்சி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
மாயா விநோதினி (அமலா)வைக் காப்பாற்ற வைத்தியசாலையில் டாக்டர் ராஜா முயற்சி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
மாயா விநோதினி (அமலா)வை முதன்முதலில் சந்திக்கும் தாய் ஶ்ரீவித்யா
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
மாயா விநோதினி (அமலா) தொலைபேசியில் தாய் ஶ்ரீவித்யாவை அழைத்துத் தன்னை அறிமுகப்படுத்தும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தன் தாய் தன்னை ஏற்க மறுத்த கவலையில் மாயா விநோதினி (அமலா)
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஶ்ரீவித்யா, மாயா விநோதினியிடம் தன்னைத் தாயாக ஏற்க வேண்டாம் என்று மறுக்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஶ்ரீவித்யா சதிகாரர்களால் கொல்லப்படுதல்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தன் தாய் ஶ்ரீவித்யாவைக் கொன்றவர்களை மாயா விநோதினி (அமலா) பழிவாங்கும் காட்சி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
மாயா விநோதினி (அமலா) இறுதிக்காட்சியில்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
கற்பூரமுல்லை திரைப்படத்தின் பாடல்கள்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
கற்பூர முல்லை ஒன்று
நாடோடி தென்றல் திரைப்படம் வெளிவந்து இந்த ஆண்டோடு 21 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படம் அப்போது தொடங்கப்பட்டபோது கிளம்பிய பரபரப்புக்கள் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கின்றன. வழக்கமான பாரதிராஜாவின் படம் என்ற கணக்கில் இல்லாது இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகப்படப் பல அம்சங்கள் இருந்தன. அதில் தலையாயது, இசைஞானி இளையராஜாவே படத்தின் கதையை எழுதியிருந்ததோடு, ஆங்கிலப்பாடலை மட்டும் விஜி எழுத மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதி வழங்கியிருந்தார். கூடவே எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் ராஜாக்களின் கூட்டணியோடு கைகோர்த்து வசனம் எழுதியிருந்தார். இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம், பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களே கலை இயக்குனராக.
இந்த முக்கியமான விஷயங்களோடு, அப்போது வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பின் தன் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்திருந்தார். கூடவே அவரின் இன்னொரு அறிமுகம் பாண்டியனுக்கு ஒரு குணச்சித்திர வேடம். பாரதிராஜாவின் ர வரிசை நாயகிகளில் “ரஞ்சிதா” இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். புது நெல்லு புது நாத்து மூலம் அறிமுகமாகி வில்லனாக, நாயகனாக மாறிய நெப்போலியன் தன் குருநாதருக்காக கெளரவ வேடத்தில் நடித்திருந்தார். ஜனகராஜும் வழக்கம் போல, இவர்களோடு கிருபா என்ற பிரான்ஸ் நாட்டு வெள்ளையினப் பெண்மணியும் அறிமுகமாக நடித்திருந்தார்.
இன்றும் பிரபல பாடலாசிரியராகத் தனித்துவத்தோடு இயங்கும் அறிவுமதி அவர்கள் உதவி இயக்குனர்களில் ஒருவராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நகைத் தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், அவ்வூருக்கு வாத்து மேய்க்க வரும் கூட்டத்தின் இளமங்கை ரஞ்சிதா மேல் காதல் கொள்வதும், அந்த ஊரை நிர்வகிக்கும் துரையின் தங்கை கிருபா கார்த்திக் மேல் காதல் கொள்வதும், ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன், வெள்ளைக்காரத் துரை ஆகியோர் கார்த்திக் இற்கு எதிராக எப்படி இயங்குகின்றார்கள் என்பதையும் வைத்து எழுதப்பட்ட கதை தான் இது.
இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணி சேர்ந்தாலே பாடல்கள் தனிச்சிறப்போடு விளங்கும், அந்த வகையில் இசைஞானி இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி, மனோ,சித்ரா,சுபா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். “ஒரு கணம் ஒரு யுகமாக” என்ற பாடலை இந்தப் படத்துக்காக இசையமைத்துப் பின்னர் படமாக்காமல் விட்டிருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் இசைப்பிரிப்பு வேலைகளில் நான் இறங்கியபோது, பாரதிராஜாவின் அறிமுகக்குரல் தவிர மொத்தம் 31 இசைத்துணுக்குகளைப் பிரித்தெடுத்திருக்கிறேன், இவை பாடல்கள் தவிர்ந்த பின்னணி இசை மட்டுமே. இதோ தொடர்ந்து கேட்டு, ரசித்து அனுபவியுங்கள்
இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுக உரை
முகப்போட்ட இசை
இரவில் கள்ளத்தனமாக கார்த்திக் வாத்து மேய்ப்போர் கூடாரம் சென்று ரஞ்சிதாவைச் சந்திக்கும் நேரம்
கார்த்திக், ரஞ்சிதா காதல் அரும்பிய வேளை
காதல் கவிதை பாடும் கார்த்திக்
குறும்பு செய்யும் கார்த்திக், வெள்ளைக்காரி கிருபாவை சந்திக்கும் போது
வெள்ளைக்காரரின் கோட்டையில் திருடிய எல்.பி இசைத்தட்டை ரஞ்சிதா தன் கைவிரலில் வைத்துச் சுழற்ற, மறைவாக இருந்து அந்த இசைத்தட்டிலிருந்து வருமாற்போல “மணியே மணிக்குயிலே” பாடலை கார்த்திக் தன் குரலில் பாடும்போது
ரஞ்சிதா கொண்டுவந்த சோற்றைப் பறித்துத் தின்னும் கார்த்திக், தொடரும் காதல் பரவசத்தில் இனிய இசை கலக்க
ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன் கோபம்
வாத்துக்கூட்டத்தை வெள்ளைக்காரி கிருபா குறிவைத்துச் சுடும்போது வாத்து ஒன்று கொல்லப்படும் காட்சியும் தொடர்ந்த இசையும், கார்த்திக் தகராறு பண்ணுவதும்
வெள்ளைக்காரியின் வீட்டுக்கு இரவில் களவாக வரும் கார்த்திக்
கார்த்திக் மேல் அபிமானம் கொள்ளும் வெள்ளைக்காரி
வெள்ளைக்காரி தனக்கு ஆபரணம் செய்ய கார்த்திக் ஐ நாடும் போது
கார்த்திக் தன் கண்களால் வெள்ளைக்காரியின் உடல்வாகைப் பார்த்து ஆபரணத்துக்கு அளவு எடுத்தல்
ரஞ்சிதாவின் காதல் அறிந்து தண்டனை கொடுக்கும் முறைமாமன் பாண்டியன்
கார்த்திக் வீட்டுக்கு வந்து நகை செய்ய வரும் வெள்ளைக்காரி
கார்த்திக் மேல் காதல் கொள்ளும் வெள்ளைக்காரி
காதல் சோகத்தில் ரஞ்சிதா
கார்த்திக் மேல் கொண்ட காதலால் வெள்ளைக்காரி முட்கள் கொண்ட மலையில் ஓடுதல்
காதலோடு பியானோ வாசிக்கும் வெள்ளைக்காரி
கோயில் திருவிழாவில் ரஞ்சிதாவைச் சந்திக்க வரும் கார்த்திக்கை வெள்ளைக்காரி காணும்போது, அதை மறைவாக இருந்து காணும் ரஞ்சிதா தவறாக எண்ணுதல்
வெள்ளைக்கார துரையுடன் மோதும் கார்த்திக்
காதல் சோகத்தில் ரஞ்சிதா, ஆறுதல் வார்த்தைகளோடு முறைமாமன் பாண்டியன், “யாரும் விளையாடும் தோட்டம்” பாடல் சித்ராவின் சோகக்குரலோடு
ரஞ்சிதாவின் சந்தேகத்தால் கவலை கொள்ளும் கார்த்திக் மலையிலிருந்து குதிக்கப் போதல்
கார்த்திக்குடன் மோதும் பாண்டியன், தொடர்ந்து வெள்ளைக்காரத்துரையால் கொல்லப்படுதல், கொலைப்பழி கார்த்திக் மேல் விழுதல்
பாண்டியன் மரணச் சடங்கு ஆற்றில் மிதக்கும் சடலம்
பியானோ இசை மீட்கும் வெள்ளைக்காரி
நீதிமன்றில் சாட்சி சொல்ல ரஞ்சிதா வரும்போது, காதல் இசை சோக வடிவில் மாறி மீட்கப்படுகின்றது
வாத்துமேய்ப்போர் ஊரைக் காலி செய்தல்
நீதிமன்றத்தில் வெள்ளைக்காரி, கார்த்திக்கைக் காப்பாற்ற முனையும்போது
சிறைச்சாலையில் இருந்து கார்த்திக் தப்பிக்கும்போது
மலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டு ரஞ்சிதா ஆற்றில் இறக்கிவிடப்படுதல், தப்பி வரும் கார்த்திக் காணல், காதல் ஜோடி சேருகின்றனர், மணியே மணிக்குயிலே பாடல் இசையோடு 3.53 நிமிட இறுதி இசை வார்ப்பு
இன்று நவம்பர் 7, 2012 கலைஞானி கமல்ஹாசன் 58ஆவது அகவையில் காலாடி வைத்திருக்கிறார். நாயகன் படத்தின் பின்னணி இசைத்தொகுப்பைக் கொடுக்கவேண்டும் என்ற பல நாட் கனவு இன்று மெய்ப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் பின்னணி இசையை இதே ஆண்டு இந்தப் படம் வெள்ளி விழாக் கொண்டாடிய நாளில் கொடுக்கவெண்ணியிருந்தாலும் வேலைப்பழுக்களால் இழுபட்டு இன்று ஒப்பேறியிருக்கிறது.
0000000000000000000000000000000000000000000000000000
மொத்தம் 29 இசைக்குளிகைகள் கிட்டியிருக்கிறது இந்த இசைக்குளிகைகளில் தென்பாண்டிச் சீமையிலே மட்டுமே பாடல், மற்றயவை எல்லாமே இசை ஆலாபனைகள். இதைவிட இன்னும் காட்சியோட்டத்தோடு இழத்து இழைத்துக் கொடுத்த நுணுக்கமான இசையைப் பிரிக்கமுடியாத அளவுக்கு நேர்த்தியான, சவாலான படைப்பாக அதை எதிர்கொண்டேன்.
இதோ தொடர்ந்து “நாயகன்”பின்னணி இசை பேசட்டும்
000000000000000000000000000000000000000000
இந்தப்படத்தின் ஹைலைட்டான இசைத்துணுக்குகள்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
பாலியல் விடுதியில் வேலு கல்லூரி மாணவியான அவள் மீது நேசம் கொள்ளும்போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் மனைவி துப்பாக்கிச் சூடுபட்டு இறக்கும் காட்சி, மேலே கொடுத்த அதே இசைத்துண்டம் சோகவடிவாக மாறும்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் மகன் இறந்த செய்தியைக் கேட்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலுநாயக்கர் புது அசிஸ்டெண்ட் கமிஷனர் வீடு தேடிப்போகும் காட்சி, ஆக்ரோஷத்தோடு போகும் அவர் தன் மகள் வீடு என்று அறியும் போது அடங்கியொடுங்கும் கணத்தை இசையால் காட்டும்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாயகன் படத்தின் முழு இசைப்பகிர்வு
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
சிறுவன் வேலு போலீசிடம் இருந்து தப்புவதற்காக காட்டில் மறைவாக இருக்கும் தன்னுடைய தந்தையைக் காணச் சொல்லும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
சிறுவன் வேலுவின் தந்தையைக் கொன்ற போலீஸ்காரை இடுகாட்டில் வைத்துக் கொன்றுவிட்டு வேலு ரயிலேறித் தப்புகிறான்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
சிறுவன் வேலு பம்பாய்க்குச் சென்று அடைக்கலம் தேடுதல்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாலு பேருக்கு உதவணும்னா எதுவும் தப்பில்லை – வேலுவிடம் வளர்ப்புத் தந்தை
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலுவை போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்யது, அடிபட்ட காயங்களுடன் அவனைத் தெருவில் இறக்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தன் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்களோடு தன் காயத்தை மறைத்துச் சந்தோஷம் கொண்டாடும் வேலு
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாலுபேருக்கு உதவணும்னா எதுவுமே பாவம் இல்லை தன் வளர்ப்புத்தந்தை சொன்னதையே மீளவும் வேலு சொல்லும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு முதன்முதலில் கள்ளக்கடத்தலில் இறங்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
பாலியல் விடுதியில் தன் வருங்காலத் துணையை வேலு முதன்முதலில் சந்திக்கும் காட்சி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலுவின் வளர்ப்புத்தந்தையைக் கொன்றபோலீஸ்காரரைத் தேடிப் பழிதீர்க்கும் போது, இதிலிருந்து வேலு நாயக்கர் தராவி குடியிருப்பு வாசிகளின் ஆபத்பாந்தவராக மாறுகிறார்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரின் மனைவியைக் கொன்றவர்களைத் தேடித் தேடிப் பழிதீர்த்தல்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரின் மகள் தன் தாய் இறந்த காரணத்தைக் கேட்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மனவளர்ச்சி குன்றிய மகனை அவர் சந்திக்கும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரின் மகள் இவரின் தவறுகளுக்கு எதிராக வாதம் செய்யும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கருக்கு எதிராக அப்ரூவர்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரின் மகன், அப்ரூவரை நீதிமன்றத்தில் வைத்துக் கொலை செய்யச் செல்லும் காட்சி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
போலீசிடமிருந்து தப்பி ஓடும் வேலு நாயக்கர் மகன்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கருக்கு எதிராக புதிய அசிஸ்டெண்ட் கமிஷனர்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நீண்ட நாட்களுக்குப் பிறகு மகளைச் சந்திக்கும் வேலு நாயக்கர்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கருக்கு அரெஸ்ட் வாரண்ட் அதைத் தொடர்ந்து அவரைத் தேடும் போலீஸ் குழு
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இன்ஸ்பெக்டரைக் கொன்றது வேலு நாயக்கர் என்று அவரின் மகன் அசிஸ்டெண்ட் கமிஷனர் மூலம் அறியும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் சரணடையும் போது
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் தன் பேரனுடன் உரையாடும் காட்சி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மகன் பழிதீர்க்கத்தயாராதல்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
வேலு நாயக்கர் கொல்லப்படும் அந்த நிமிடங்கள்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஏற்கனவே சினிமாவில் தன் பங்களிப்பை வழங்கியிருந்தாலும், இயக்குனர் என்ற வகையில் அவருக்கு முதல் படம் அப்போது பரபரப்பான பிரபலமாக மாறிய ஒரு நாயகனை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைத்திருந்தார். அந்த முதல் படம் ஒரு நாவலை மையமாக எடுக்க்கப்பட்டிருந்தது. பல சோதனைகளோடு அந்தப் படம் வெளிவந்து கவனிக்கப்படத்தக்க இயக்குனர் என்ற முத்திரையையும் பெற்றுக் கொண்டார்.
இரண்டாவதாக எடுத்த படமும் இன்னொரு நாவலாசிரியரின் கதையை மையப்படுத்தி எடுத்திருந்தார். ஆனால் ஒரு வித்தியாசம், தன்னை இயக்குனராக வெளிப்படுத்திய சமயம் பிரபல நாயகனைக் கொண்டு முதல் படம் எடுத்து அதில் பெரு வெற்றியும் பெற்றிருந்தாலும் அந்த வெற்றியை வைத்து பிரபலங்களின் பின்னால் ஓடாமல் இம்முறை அறிமுகங்களையும், அப்போது வளர்ந்து வந்த நடிகர்களையும் போட்டு எடுத்திருந்தார். படத்தின் பூஜை நாளன்றே “போயும் போயும் இந்தப் பெண்ணா நாயகி” என்று அவர் காதுபடவே பேசுமளவுக்கு நிலமை. ஆனாலும் பிடிவாதத்தோடு இயக்கினார். வெற்றி கண்டார். 32 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றும் தமிழ் சினிமாவின் தரம் பேசும் படங்களில் இந்தப் படத்தை விலத்திப் போகமுடியாது. அவ்வளவுக்குக் காலம் கடந்து நிற்கின்றது.
இந்தப் படத்தின் பின்னணி இசை என்பது மிகவும் கவனமாக, காட்சியையும், வசனங்களின் போக்கையும் சிதைத்து விடாது கண்ணாடி இழையாகப் பின்னப்பட்டிருக்கின்றது. படத்தின் குறிப்பாக இங்கு நான் தந்திருக்கும் இசைத்துண்டம் 1.32 நிமிடங்கள் இயங்கும் இசையில் பரபரப்பும், ஆர்ப்பரிப்பும் மேலெழுந்து மெல்ல மெல்ல அடங்கிப் போய்ப் புல்லாங்குழல் வழியே ஏதோவொரு இனம்புரியாத சோகத்தைக் கடத்தி விட்டு ஓயும். படத்தின் முகப்பில் ஆரம்பித் இசை, முடிவில் ஒரு சுற்றுப் பயணித்து மூலத்தில் வந்து நிற்கும் இந்த இசையைக் கேளுங்கள், இந்தப் படம் என்ன பதிலோடு வாருங்கள்.
ஒகே மக்கள்ஸ்
போட்டி முடிவடைந்து விட்டது,
சரியான பதில்கள்
மகேந்திரனின் முதற்படம் முள்ளும் மலரும்
இரண்டாவது படம் உதிரிப்பூக்கள்
போட்டியில் கலந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றி
ஶ்ரீராம ராஜ்யம் படம் கடந்த மாதம் வந்தபோது அந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமாகிப் பகிர்வு ஒன்றும் கொடுத்திருந்தேன் இங்கே
அதனைத் தொடர்ந்து நண்பர் KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை இந்தப் படத்தின் பின்னணி இசையைப் பிரித்துக் கொடுக்கின்றேன் தகுந்த உரையை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற போது மனுஷர் வாக்கு மீறாது அருமையானதொரு பகிர்வைத் தந்தளித்தார். உண்மையில் படத்தின் முழு ஒலிப்பதிவயும் வழங்கியபோது எந்தவித காட்சி ஓட்டமும் இல்லாது ஒலியை வைத்தே முன்னர் அவர் பார்த்த இந்தப் படத்தினை அசைபோட்டு எழுதிக் கொடுத்தது என்னளவில் ஒரு சாகித்யம் என்பேன். ஏற்கனவே மெளன ராகம் படத்துக்கும் இதே பாங்கில் தன் முத்திரையைக் காட்டியவர். மீண்டும் இவரோடு இணைந்து இன்னொரு இசைக்காவியத்தைக் கொடுப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன். இனித் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சங்கீத சாம்ராஜ்யத்திற்கு கண்ணபிரான் ரவிசங்கர் துணையோடு அழைத்துப் போகின்றேன். இசையென்னும் இன்ப வெள்ளத்தை அள்ளிப் பெருகுங்கள்.
ராமாயணம்-ராஜாயணம்
* கம்ப இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இராஜா இராமாயணம் = இசைக் காப்பியம்!
வால்மீகி எழுதிய ஒரு வரலாற்று-கற்பனையை…
தமிழ் மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = கம்பன்!
இசை மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் = இளையராஜா!!
ஒரே படத்துல 16 பாட்டை இந்தக் காலத்துல யாருப்பா கேட்பாங்க? என்னமோ BGM, BGMன்னு சொல்றாங்களே! என்ன பெருசா இருக்கு இந்த SRR – ஸ்ரீ ராம ராஜ்ஜியத்துல? பார்க்கலாமா??
இராமாயணத்தின் கதை எல்லாருக்கும் தெரிஞ்சது தான்! அது மட்டுமா? ஒவ்வொருத்தரும் அவங்க சொந்த இராமாயணத்தையும் இதுல கொண்டாந்து சேர்ப்பாங்க!:)
ஆத்திகனோ, நாத்திகனோ, இலக்கியவாதியோ, புரட்சிவாதியோ – எல்லாருக்கும் இராமாயணத்தில் ஏதோ ஒன்னு இருக்கு!
தெரிஞ்ச கதை தான்! ஆனால் தெரியாத உணர்ச்சிகள்! = அதை எப்படி ஒருத்தருக்குச் சொல்வது?
* சீதை துன்பப் பட்டாள், தெரியும்!
* இராகவன் லூசுத்தனமா நடந்துக்கிட்டான், தெரியும்!
ஆனா, நமக்கு-ன்னு நடக்காத வரை, அது வெத்துக் கதை தானே!
எத்தனை பேரு, காதலில் சண்டை போட்டுட்டு, அவள் தவிக்கும் போது, ஒளிஞ்சி இருந்து பாத்து இருக்கோம்??
அட அவளா? இந்நேரம் சிக்குனு சிக்கன் பிரியாணி தின்னுக்கிட்டு இருப்பா-ன்னு நாம் நினைக்கும் அந்த அவள்…
காதல் பரிசான கைக்கடிகாரத்தை…கண்ணின் மேல் வச்சிக்கிட்டு…
அந்த நொடித் துடிப்பின் சத்தத்திலே…
தரையில் படுத்துக் கிடப்பதை…ஒளிஞ்சி இருந்து பார்த்தோம்-ன்னா?
இந்த உணர்ச்சிகளை எதில் எழுத முடியும்?
* பாட்டில் எழுதினா = காவியம்!
* இசையில் எழுதினா = இளையராஜா!
தெரிந்த கதை, ஆனால் தெரியாத உணர்ச்சிகளைப் படீர்-ன்னு நம் மனத்தில் போட்டு அடிக்கும் வித்தையைப் பார்க்கலாம், வாருங்கள்!
முதல் காட்சி! எல்லாரும் ஊருக்குத் திரும்புதல்! அயோத்தியில் இதையே தீபம் ஏத்தி வச்சி தீபாவளியாகக் கொண்டாடினார்கள்-ன்னும் சிலர் சொல்லுவாய்ங்க!
ராஜா ஏற்றி வைக்கும் தீபாவளி எப்படி? = ஜகதானந்த காரகா
பாட்டு ஒலிக்க, BGM ஒலிக்க….. மீண்டும் அதே பாட்டு, BGM…..
இதுலயே அந்த இன்ப மயமான தருணங்களை மாறி மாறி நெய்து விடுகிறார், ஒரு சீலையப் போல!
ரொம்ப ஆராவாரம் இல்லை…அதே சமயம், மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! = ஏன்?
ஏன்னா…ரொம்ப துன்பப்பட்டு வரும் இன்பத்தில்…அத்தனை மகிழ்ச்சி இருக்காது!
வலியின் நிழல் தங்கி, மனசுல ஒரு பக்குவமான நிலை இருக்கும்! ராஜா நெய்வதைக் கேளுங்க!
ஜகதானந்த காரகா = தியாகராஜர் பஞ்சரத்தினக் கீர்த்தனை!
ஜய ஜானகி பிராண நாயகா = என்ன ஆனாலும், அவனே அவளோட உயிரு-ன்னு மறுபடி மறுபடி ஒலிக்க வச்சி, பின்னால் வரப் போவதைக் காட்டுகிறாரோ?
ஒரு இராம சினிமாக் காவியத்தை, தியாகராஜர் மரபிசையோடு ஆரம்பிக்கணும்-ன்னு உனக்கு எப்படிய்யா தோனுது, இளையராஜா?
இது இப்படின்னா, பட்டாபிஷேகக் காட்சி = Symphony!
தியாகராஜரில் ஆரம்பிச்சி, கேட்டுக்கிட்டு இருக்கும் போதே, Symphony-இல் ஏத்தி வுடறது! அப்பப்போ, உன் டகால்ட்டி வேலையைக் காட்டிடுற ராஜா நீயி!!:)
Western என்று நெருடாமல், பட்டாபிஷேக கம்பீரம் என்றே இந்த இசை அழகாக அணி வகுக்கிறது!
Pl Note: இந்தப் படத்தில், பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்குது!
உற்று கவனிச்சிப் பாருங்க! கண்டு புடிச்சிருவீக…வேறெந்த படத்திலும் இது ராஜா செய்யாத Technique! மெளன ராகம் உட்பட…
சீதையைக் காட்டுக்குத் துரத்தும் BGM பற்றி நான் இங்கே பேசப் போவதில்லை! எனக்கு ரொம்ப வலிக்கும் காட்சிகள் அவை!
நாடு-நாட்டு மக்கள் கருத்து தான் முக்கியம்-ன்னா, தம்பி கிட்ட நாட்டைக் குடுத்துட்டு, தானும் அவளோடு போயிருக்கலாமே??
தம்பிகள் ஒத்துக்க மாட்டாங்கன்னா….யானை யாருக்கு மாலை போடுதோ…அவங்களை மன்னன் ஆக்கிட்டு…..தம்பிகளோடு…அவளுடன் போய் இருக்கலாமே??
– அப்படிச் செஞ்சி இருந்தியானா….கோயிலில் உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டு இருப்பேன்…ஏனோ உன்னைக் கோயிலில் பார்க்க மட்டுமே தோன்றுகிறது! வணங்க அல்ல!!:(
இராம கதையைச் சொல்லும் மூன்று பாட்டு!
* தேவுள்ளே மெச்சிந்தி (Practice Song)
* ராமாயணமு (அயோத்தி தெருக்களில்)
* சீதா-ராமு சரிதம் (அரண்மனையில்…கம்பீர இசை)
தெருக்களில் பாடும் போது, அயோத்தி மக்களை இடிக்கும் இசை…டேய், ஒங்களாலத் தான் ஒரு அப்பாவி தனியாக் கிடந்து துடிக்குறா…பாட்டு வரிகளும் அப்படியே! எழுதியது யாரோ?
சீதையும் ராமனும் சந்திப்பது போலான மாயக் காட்சி! மெய்நிகர் (Virtual Reality)
இந்த இடத்தில் ராஜா போடும் BGM கேட்டாத் தெரியும், எதுக்கு எல்லாரும் ராஜா ராஜா-ன்னு அனத்துறானுங்க-ன்னு :))
* பழைய பாடலையே BGM ஆக்கி, Flashback காட்டுவாரு!
* அதே சமயம், பழைய பாடலில் எல்லாமே புதுப்புது வாத்தியங்கள்!
என்னமா இசையால் ஒரு Flashback இயக்கம்! யோவ் இளையராஜா – நீ என்ன படத்தின் இயக்குனாரா? வெறும் இசை இயக்குனர் தானே? :))
அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டானோ இல்லையோ, அவள் அவனை நல்லாப் புரிஞ்சி வச்சிருக்கா!
அவளா சந்தேகப்படுவா?…தன் புருசன் இன்னோரு கண்ணாலம் கட்டிக்கிட்டானோ?-ன்னு…
இல்லை!
ஆனா, ஊரு சொன்னா எதையும் செய்யத் துணியும் லூசு ஆச்சே தன் புருசன்!
ஏதோ நாட்டுக்காக அஸ்வமேத யாகம் செய்யறான், பொண்டாட்டி பக்கத்துல இல்லாமச் செஞ்சா, நாட்டுக்கே ஆபத்து-ன்னு ஒத்தைப் பிராமணன் கெளப்பி விட்டாப் போதுமே…
ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி ஐயா, இன்னோரு கண்ணாலம் கட்டிக்குவாரா?
இராமன் என்ன நிலையில் இருக்கான்-ன்னு பாக்கத் துடிக்குது அவளுக்கு! தன்னை ஊர் அறிய மறுதலித்தவன்…இப்போ உள்ளத்து அளவிலும் மறுதலிப்பானோ?-ன்னு படக்படக்…
வால்மீகி மூலமா, ஆவியாகி, anonymous ஆக உள்ளே வரும் சீதை…தனக்குப் போட்டியாக…இன்னொருத்தியைக் காணும் காட்சி…
சீதையின் சிலையை வடிச்சி வச்சிக்கிட்டு…நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்!!!
அவன்-அவள் = ஊர் அளவில் பிரிஞ்சாலும், உள்ளத்து அளவில் பிரிவதே இல்லை!
இந்த BGM இல் கல்லும் கரையும்! காதலிச்சி இருக்குறவன் எவனும் கட்டாயம் இந்த BGM கேட்டு கண் பனிக்கும்!!
ராமரின் பள்ளியறைக்கு சீதை ஆவியுருவில் வந்து, ராமர் தன் நினைவில் என்றும் இருக்கும் உண்மையைக் கண்டுணரும் போது
படத்தின் Grand Finale & Graphic Effort – ஒருத்தியின் தாங்கும் எல்லை தான் எவ்ளோ?
இலங்கையில் மரத்தின் கீழ் தற்கொலை முயற்சி, அப்பறம் பலர் முன்னிலையில் மறுதலிப்பு-தீக்குளித்தல்…..அப்படியே தொடர்ச்சியா ஒவ்வொன்னா….
பூமி பிளந்து, அவள் உணர்ச்சியை எல்லாம் ஒட்டு மொத்தமாய் விழுங்கும் சுனாமிக் காட்சி!
பாலகிருஷ்ணா = இராமரா? நயன்தரா = சீதையா?
அடக் கொடுமையே-ன்னு கேலி பேசுபவர்களையும்….பாலகிருஷ்ணா/நயன் முன்னேயும் பின்னேயும் இசையை ஓடவிட்டு, அவர்கள் நடிக்காததையும், உணர்ச்சியால் கொண்டு வந்து தந்த படம் இது!
படத்தில், பாடல்களின் இசையைச் சொல்ல, தனிப் பதிவு தான் போடணும்! இங்கு BGM பற்றி மட்டுமே கொஞ்சமே கொஞ்சம் பேசினோம்!
இவ்வளவு பெரிய புராணப் படத்துக்கு, ராகங்கள் இல்லாத பாட்டா?
சின்னக் கண்ணன் அழைக்கிறான்-ரீதிகெளளை புகழ் இளையராஜா…இந்தப் படத்தில் போட்ட ராகங்கள் என்ன-ன்னு அறிஞ்சவங்க வந்து சொல்லட்டும்! நமக்கு இலக்கணம் அம்புட்டு போதாது:)
ஸ்ரீராம லேரா = அம்சாநந்தி-ன்னு மட்டும் தெரியுது!
கலி நிங்கி நீரு = கீரவாணியா?
சீதா சீமந்தம், அதை விட, தாண்டகம் என்னும் இசைப் பகுதி அமர்க்களம்! கேட்டுப் பாருங்க!
படம் முழுக்க தபேலா + வீணையின் ஆட்சி!
BGM-இல் வீணையை இம்புட்டு புழங்கி இருப்பது, இதுவாத் தான் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்!
SPB = கலக்கல்! ஸ்ரேயா கோஷல் = ஓக்கே, நல்லாப் பண்ணி இருக்காங்க!
சித்ரா = ஒரே ஒரு பாட்டு தானா?
இந்த ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செஞ்சாரு?
BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!
தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்…
அதே சமயம், உணர்ச்சிகள் பேச வேண்டிய இடத்தில், இசை மட்டுமே பேசி ஏங்க வைக்கும் இசை!
BGM இல்லாம, காதுல பஞ்சி வச்சிக்கிட்டு…..இன்னொருகா அரங்கத்தில், ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பாருங்க…
இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!
மனித உணர்வுகளை…….இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!
அதுவும் நாகரீக keyboard காலத்திலும்…வீணை, தபேலா, நாதசுரம், புல்லாங்குழல் போதாது-ன்னு, இன்னும் என்னென்னமோ Western Instruments…..
நூறு வாத்தியக் கருவி, ஒன்னா வந்து, உங்க முன்னாடி வாசிச்சா எப்படி இருக்கும்???
பல BGM களின் துவக்கம், ஒவ்வொரு பாட்டின் முடிவில் இருந்தே துவங்கும் புது முயற்சி!!
ஏ, மாயக் காரனே, இளைய-ராஜாவே……
* அன்று கம்பன் செய்த இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!
* இன்று நீ செய்த இராமாயணம் = இசைக் காப்பியம்!
திருவாசகத்துக்குப் பின்….இந்தப் படத்தால்…..
கம்பனைப் போல்……….”காவியப்” புகழ் உனக்கு!
இறவா இசையோடு இருப்பாய் நீ!
முகப்பு இசை
ராமர், சீதை மஞ்சத்தில் காதல் மொழி பேசும் நேரம்
ராமர் சீதையோடு மஞ்சத்தில் இருக்கும் போது ஆராய்ச்சி மணி ஒலிக்க, சீதை தடுத்தும் ராமர் நீதி கேட்கப் புறப்படும் போது
சீதை குறித்த அபாண்டத்தை பத்ரன் தயங்கித் தயங்கி ராமரிடம் கூறும் போது
சீதை குறித்த புறணியைக் கேட்டு ராமர் மதி கலங்கும் போது
ராமரின் கட்டளைப்படி இலக்குவன் சீதையைக் காட்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சி
வால்மீகி முனிவர் காட்டுக்குள் சீதை வரவேற்கப்படும் போது
சீதைக்கு முறையான வளைகாப்பு நடத்தவில்லையே என்று ஆதங்கப்படும் கோசலை தன் மனக்கண்ணில் அந்த நிகழ்வைக் காணும் போது
ராமர் இன்னும் தன் நினைவில் இருப்பாரோ அல்லது இன்னொரு துணை தேடியிருப்பாரோ என்று கலங்கும் சீதை
ராமர் செய்யும் அஸ்வமேத யாகம்
அஸ்வமேத யாகத்தில் பயணித்த குதிரையை லவ குச சகோதரர்கள் காட்டுக்குள் கட்டிப்போடும் போது இலக்குமணன் தன் படையோடு வந்து அவர்களோடு போர் புரியும் காட்சி
லவகுச சகோதரர்களைச் சந்திக்க வரும் இராமர், சீதையைக் காண்பதும் லவ குச சகோதர்கள் தன் பிள்ளைகள் என்று உணர்வதும், இறுதியில் பூமாதேவியிடம் சீதை தன்னை ஒப்புவிப்பதும். இது நீண்டதொரு இசைத்துண்டு
ஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் கடந்து இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் கொண்டு நிலைத்திருக்கின்றது.
வெளியே கலகலப்பான திவ்யாவாகத் திரியும் அவளின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் கடந்து போன காதலின் இழப்பைச் சொல்லமுடியாத வேளை, சூழ்நிலைக்கைதியாகத் திருமண பந்தத்தில் இணைகின்றாள். காதலை மனதில் பூட்டி வைத்து மெளனராகம் பாடும் அவளும், கரம் பிடித்தவனும் “தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் தம் திருமண பந்தத்தைத் தொடர்ந்தார்களா என்பதே இந்தக் காவியத்தின் மையம்.
ஒரு எளிமையான கதையை எடுத்துக் கொண்டு, பொருத்தமான பாத்திரங்களையும், துறை தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களையும் இணைத்துப் படைக்கும் எந்த ஒரு படைப்பும் காலத்தைத் தாண்டிப் பேச வைக்கும் என்பதை இன்று திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்ற படைப்பாளிகளுக்கும் பாடமெடுக்கும் படங்களில் கண்டிப்பாக மெளன ராகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெளியே ஆர்ப்பாட்டம் காட்டி உள்ளே மெளன ராகம் பாடும் திவ்யா என்ற பாத்திரத்தில் ரேவதி, மனைவியின் மனம் கோணாது அவள் வழியே விட்டுத் துணையாகப் பயணிக்கும் கணவனாக என்ற சந்த்ரு மோகன், திவ்யாவின் கல்லூரிக்காலக் காதலனாக மனோ என்ற குணச்சித்திர பாத்திரத்தில் கார்த்திக் என்று இவர்களின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத வகையில் இவர்களுக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட பாத்திரப்படைப்புக்கள். அதிலும் குறைவாகவே வந்தாலும் நிறைவாகவே நிற்கும் கார்த்திக் இன் குணச்சித்திர வேடம் இன்றளவும் பேசப்படும் அளவுக்கு இன்னொரு தமிழ் சினிமா இப்படியானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருக்கின்றதா என்பதை யோசித்துத் தான் கண்டுபிடிக்க வேண்டும். மோகனின் பாத்திரத்தோடு இணைந்து கச்சிதமாகப் பொருந்திப்போகும் சுரேந்தரின் பின்னணிக்குரலையும் சொல்லி வைக்க வேண்டும்.
கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பன்முகப் பொறுப்புக்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு மணிரத்னம் இயக்கிய சொற்பமான படங்களில் இதுவுமொன்று. அந்த நாளில் சுஹாசினியைக் கைப்பிடிக்காத வேளை என்பதும் எமக்கு ஒரு பாக்கியம். பகல் நிலவு திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், நாயகன் கொடுத்த பெரும் அங்கீகாரத்துக்கு முன் “மெளன ராகம்” என்ற இந்தப் படைப்புக்குத் தயாரிப்புப் பொறுப்பை அவரின் சகோதரர் ஜி.வி என்ற வெங்கடேஷ்வரன் ஏற்க, ஒளிப்பதிவை பி.சி.ஶ்ரீராம் ஏற்றிருக்கின்றார். பாடல்கள் அனைத்தையும் வாலி எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி என்ற இரட்டைக் குரல்கள் மாத்திரமே முழுப்பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கின்றார்கள்.
இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் “மெளன ராகம்” இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று. எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது.
இந்தப் படத்தின் பின்னணி இசைப் பிரிப்பு வேலைகளைச் செய்யும் போது கவனமாக ஒவ்வொரு துளியாகச் சேமிக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டேன். எனவே இந்தப் பணியைக் கொஞ்சம் கவனமாகவும் நிதானமாகவும் செய்யத் தொடங்கினேன். கூடவே இப்படியான படைப்புக்களுக்கு ரசனை உள்ள சகபதிவரைத் துணைக்கழைத்து அவரின் பார்வையில் காட்சிப்படுத்தல்களில் இழையோடும் இசை குறித்த வர்ணனையை எதிர்பார்த்த போது கை கொடுத்துச் சிறப்பித்தவர் “மாதவிப்பந்தல்” புகழ் என் அருமைச் சகோதரன் கே.ஆர்.எஸ் என்ற கண்ணபிரான் ரவிசங்கர். இன்று ஆகஸ்ட் 9 பிறந்த நாள் காணும் கே.ஆர்.எஸ் இற்கு என்னாலான பிறந்த நாட் பரிசாக இந்த இசைத் தொகுப்பை அவரின் பங்களிப்பையும் இணைத்துக் கொடுக்கும் அதே வேளை றேடியோஸ்பதியின் பின்னணி இசைத் தொகுப்புப் பணியில் இது புதுமையான முதல் முயற்சி என்ற மகிழ்வான தருணத்தையும் பதிவாக்குகின்றேன். எங்களோடு இணைந்து, இந்தப் பணியில் கே.ஆர்.எஸ் இற்கு அவ்வப்போது காட்சித் துண்டங்களை வழங்கிப் பதிவை எழுத உதவிய நண்பர் கூமுட்டையின் பணியும் இணைந்து எம் மூன்று பேரின் உழைப்பு இந்தப் பதிவில் இணைந்து சிறப்பிக்கின்றது.
பாடல் வரிகள் தான் முக்கியம்!
பின்னணி இசை = ‘பின்’-அணி தான்!
ஆனால் அதையும் மீறி, பாடல் சாராத அழகிய BGM-களை MSV குடுத்திருக்காரு! காசே தான் கடவுளடா படத்தில், தேங்காய் சீனிவாசன் பணம் திருடப் போகும் அந்த திக்திக் காட்சிகளை மனத்தில் ஓட்டிப் பாருங்கள்! துள்ளலான அழகிய BGM!
* ‘பின்னால்’ இருந்த BGM-ஐ, ‘முன்னால்’ கொண்டு வந்து…
* தாளம் மட்டும் அல்லாமல், ராகத்தையும் கொண்டாந்து வைத்து…
* பியானோ முதல் புல்லாங்குழல் வரை…பல இசைக்கருவிகளையும் BGM-இல் நடை பயில விட்டு…
* ‘பின்’-அணியை ‘முன்’-அணி ஆக்கி…பல வர்ண ஜாலங்கள் காட்டத் துவங்கியது… = இ-ளை-ய-ரா-ஜா!
பாடல் காட்சிகளிலே வரிகளும் முன் வந்து நிற்பதால், இசை சற்று முன்னும் பின்னும் வாங்கும்!
ஆனால் படத்தின் சீன்களில்? = அது இசை-அமைப்பாளனின் ஆடுகளம்! BGM-இன் முழு வீச்சு இங்கே தான்!
அன்னக்கிளி படத்தில் தொடாத BGM-களை எல்லாம்…முள்ளும் மலரும் படத்தில் தரத் தொடங்கினார்…
அது அப்படியே சிகப்பு ரோஜாக்கள், உதிரிப் பூக்கள், ஜானி, ராஜ பார்வை, மூன்றாம் பிறை என விரிந்து…மெளன ராகம் என்னும் படத்தில் தலை விரித்து ஆடியது!
தொடர்ந்து இசைஞானி அள்ளி வழங்கிய “மெளன ராகம்” என்ற காவிய ரசத்தைப் பருகுவோம்.
மெளனராகம் முகப்பு இசை
படித்தில் வரப் போகும் சிலிர்ப்புகளை, டைட்டிலிலேயே சொல்லி விடும் இசை!
தமிழ்ப் பட டைட்டில் இசையில்…
இதை மட்டும் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கி விட்டார் ராஜா!
ஆரம்பத்தில் பியானோவில் மட்டுமே வலம் வரும் இசை…
உடனே சந்தோஷத் துள்ளலுக்கு மாறி…
சிறிது நேரத்தில் மீண்டும் மாறிச் சோகம் இசைக்க…
அத்தனை வயலின்களும் சேர்ந்து கொள்ள….டைட்டில் முடிந்து…வீட்டில் விடியற்காலை அலாரம் ஒலிக்கிறது! 🙂
படம் முழுதும் தூவித் தூவி வரும் இந்த மாய இசையைக் கேளாத காதுகளே இல்லை! ஒலிக்காத செல்பேசிகளே இல்லை!
ரேவதி தன் தங்கையோடு, அண்ணன் அண்ணியின் கொஞ்சலைச் சீண்டிப்பார்க்கும் குறும்புக் காட்சி
தன்னைப் பெண் பார்க்க வரும் மாலைவேளை அதைத் தவிர்க்க ரேவதி தன் நண்பிகளோடு மழையில் லூட்டி அடிக்கும் “ஓஹோ மேகம் வந்ததோ பாடலோடு”
காலம் கடந்து வீடு திரும்பும் ரேவதி மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்து போய் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் குஷியாக உள் நுழைய அங்கே அவர்களைக் காணும் அதிர்ச்சித் துளி இசையாக
ஓகோ மேகம் வந்ததோ…பாட்டு முடிஞ்சி…ஹைய்யா அம்மா-அப்பாவை ஏமாத்தியாச்சே-ன்னு வீட்டுக்கு வந்தா….மாப்பிள்ளை காத்துக் கிடக்காரு!
கையில் செருப்போடு, அவளும் நோக்கினாள்! அண்ணலும் நோக்கினான்! 🙂
அதிர்ச்சியில் சித்ரவீணை பேசுகிறது, மூன்றே நொடிகளுக்கு!
பெண் பார்க்க வரும் மோகன் – ரேவதி தனிமையில் சந்திக்கும் வேளை,2 நிமிடம் 10 செக்கன் ஓடும் காட்சியில் இடையில் வரும் உரையாடலையும் இணைத்திருக்கின்றேன் காட்சி, உரையாடலோடு வரும் இசை எவ்வளவு தூரம் இழைந்திருக்கின்றது என்று உணரக்கூடிய வகையில்
“அவரு உன் கிட்ட ஏதோ தனியாப் பேசணுமாம்” என்று சொன்னவுடன், பிடிக்கலீன்னாலும்…இன்ப அதிர்ச்சியா ஒரு வயசுப் பொண்ணுக்கு?
= ஒரே ஒரு ஒத்தை மிருதங்க ஒலி…..டங்ங்ங் ! BGM-ஐக் கேளுங்க! ‘மெளனம்’ என்பதைக் கூட இசையாக்க வல்ல ‘தெறமை’ ராஜாவுக்கே உரித்தானது!
அங்கே துவங்கிய மிருதங்க ஒலி, “உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”-ன்னு மோகன் சொல்லும் வரை, 1 beat, 2 beat, 3 beat-ன்னு வித்தை காட்டும்!
ரேவதியை மாப்பிளைக்கு பிடித்திருக்கு என்று குடும்பமே குதூகலத்தில் இருக்க, “எனக்குப் பிடிக்கல” என்றவாறே தன் எதிர்ப்பைக் காட்டும் காட்சியில்
தன் தந்தைக்கு Heart attack என்றறியும் போது வரும் காட்சியில் இழைந்தோடும் அதிர்ச்சியும், சோகமும் இசையில் தெறிக்க
ரேவதி, மோகனைக் கரம்பிடிக்கும் மணமேடை
முதல் இரவில் காதலோடு கணவன், தள்ளி நிற்கும் அவள்
கல்யாணம் முடிஞ்சி First Night Scene எனக்கு ரொம்பப் பிடிக்கும்! 🙂
முதலிரவுக்குப் பயப்படும் ரேவதி, கதவை மூடும் போது சோக வயலின்…
அதுவே மெல்லீசா இன்ப இசையா மாறி…
மோகன் லுக்கு விடும் போது, சக் சக் சக் சக்-ன்னு ஒரு கிக் இசையாகி…..தீண்டும் இன்பம்!!
டெல்லிக்கு வரும் தம்பதிகள், மோகன் ஆசையாகத் தன் வீட்டைச் சுற்றிக் காட்ட, ரேவதி காட்டும் அசட்டை
மோகன், ரேவதி மனம் விட்டுப் பேசும் காட்சி
தன் மனைவிக்கு ஆசையாக முதல் பரிசு வாங்கித் தரக் கணவன் கடைவீதியில், “இந்தக் கடையில் விவாகரத்து வாங்கிக்கொடுக்க முடியுமா” என்று கேட்கும் அவள், “நிலாவே வா செல்லாதே வா” பாடலோடு
“என் இதயத்தில உங்களைக் கணவரா ஏத்துக்க முடியல” படத்தின் மூல இசை அப்படியே அடித்துப் போட்டவன் மெல்ல எழுந்து நகர்ந்து வருவது போல மெதுவாகப் பயணிக்க
“நீங்க தொட்டா கம்பளிப்பூச்சியைத் தொட்டமாதிரி”தபேலாவின் அதிர்வோடு
இதற்கு என்ன எழுத முடியும்? நீங்களே கேளுங்கள்!
தபேலா மட்டும் துடிதுடிக்க…இறுதியில் சுரத்தே இல்லாத மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும்…மென் உணர்வுகள்!!!
கார்த்திக் அறிமுகமாகும் காட்சி ஆர்ப்பரிக்கும் இசைக்கூட்டணியோடு
ஒரு மனிதனின் குணத்துக்கு BGM போட முடியுமா? – Karthik Entry!
* கார்த்திக் = துள்ளல்
* ரேவதி = தில்லு
* மோகன் = மென்மை
படத்தில் இது வரை வராத Trumpet முதல் முறையா முழங்க…
சண்டைக் காட்சியிலும் டிஷ்யூம் டிஷ்யூம் சத்தம் மெல்லிதாகவே கேட்க…
கார்த்திக்கின் துள்ளல் இசையே, முழுசும் ஆக்ரமிப்பு!
எம்.பி மகனைத் தாக்கிய குற்றவாளி ஆள் அடையாள அணிவகுப்பில் கார்த்திக்கைக் காட்ட ரேவதி முன் வருகையில்
போலீஸ் அடி வாங்கி தள்ளாடி வரும் கார்த்திக், மூல இசை சோகராகமாகி பின்னர் குதூகலித்துப் பயணிக்கிறது
பெயிலில் எடுக்கும் போது….
நொண்டும் கார்த்திக்கின் சோக டைட்டில் இசையே,
கண்ணடிக்கும் கார்த்திக்கின் துள்ளல் டைட்டில் இசையாக மாறி…
ரேவதியை கல்லூரியில் சந்திக்கும் கார்த்திக் தன் காதலைப் பகிரும் காட்சி
பஸ்டாண்டில் மீண்டும் சந்திக்கும் ரேவதி கார்த்திக்
coffee shop இல் காதலால் சீண்டிப்பார்க்கும் கார்த்திக்
தன் தந்தையைக் குறும்பு செய்த கார்த்திக் இன் சேஷ்டையைப் பார்த்து மனம் விட்டுச் சிரிக்கும் ரேவதி, கூடவே கார்த்திக் உம் இணைந்து கொள்ள சந்தோஷ மழையில் இசையும் கூட
கல்லூரி லைப்ரரியில் கார்த்திக் ரேவதி சந்திக்கும் காட்சி, கூடவே ஒலிபெருக்கி மூலம் ஊரைக்கூட்டிச் சொல்லும் காதலோடு இணைகிறார்கள் மனதால் ஒருமித்து. இசைத்துண்டத்தின் இறுதித் துளிகளில் படத்தின் மூல இசை இன்னொரு பரிமாணத்தில்
தன் போராளிக்குணத்தைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொட்டும் மழையில் ரேவதியைச் சந்திக்கும் காட்சியில் கல்யாணத்துக்கு நேரம் குறிக்கையில்
கல்யாண நாளன்று போலீஸ் துரத்தலில் கார்த்திக், கார்த்திக் இன் இறுதி நிமிடங்கள்
கார்த்திக் ஜீப்பில் இருந்து குதிக்கும் போது, வயலினும் குதிக்கிறது! வயலினும் ரோட்டில் ஓடுகிறது!
அதுவே டைட்டில் BGM-ஆக மாறி…திவ்யா…ஆவி அடங்குகிறது! காதல் அடங்குகிறதா?
மோகன் ரேவதிக்கு ஆசையாகக் கொடுக்கும் பரிசு
விவாக ரத்துப் பத்திரமும், கொலுசும் = ஷெனாயில் துவங்கி, மாங்கல்யம் தந்துனானே!
பூஜா கா குங்கும் ஹை! சிந்தூர் லகாதோ – என்று அலுவலகப் பெண் வாழ்த்த, எல்லாரும் வாழ்த்த…..
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல! நாடகம் ஆனதும் விலகிச் செல்ல…
ரேவதி மோகனுக்காக ஆசையாகச் சமைத்துவிட்டுக் காத்திருக்க, வேலையில் இருந்து தாமதமாக வரும் மோகன் அதற்காக வருந்தும் காட்சியின் பின்னணி இசை
டெல்லி சுற்றிப்பார்க்க ரெடி
விவாகரத்து தம்பதிகள் தாஜ் மகாலைக் காணும் திடீர்க் காட்சி…..பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
ஒரு பெண்ணின் அலை பாயும் குரல்…..ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(
முதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்……அது இசையில் வரவில்லையோ???
விபத்தில் சிக்கிய மோகனை, மருத்துவமனையில்…”என் புருசன்” என்று தாலி தூக்கிக் காட்டும் காட்சி…ஷெனாய் ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள்!
ஷெனாய் ஒலிக்க, தம்பூராவைச் சுண்டும் ஒரே ஒலி ஊடாடும் அழகு!
முப்பது நாள் கடந்து முதன்முதலில் காதலோடு தன் கணவனைப் பார்க்கையில் “சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா”
மோகன் வீட்டில் மேற்கத்திய இசை கேக்கறாரோ? = Violin Ensemble Orchestra!
Wow! ரேவதி கொலுசு சத்தம் போடாமல் குதிகாலில் காதல் சொல்லி வர…
ஆனால்…..மோகனோ எரிஞ்சு விழ…ரேவதியின் காதல் கண்ணீரில் துளிர்க்கிறது!
மோகன் பொட்டு வைத்து விட, காலிங் பெல் அடிக்க, சென்னைக்கு டிக்கெட் வர…அதே டைட்டில் இசை…ஆனால் வேறு சாயலில்!
தில்லியை விட்டுப் போகும் போது, தில்லிக்கு வந்த அதே இசை!
ரேவதியின் பேச்சே ஒரு இசை தானோ? = “உங்களுக்கு பிடிச்சிருக்கு! ஒத்துக்கத் தான் மனசில்ல! ஆனா நான் ஒத்துக்கறேன்! வெட்கத்தை விட்டு ஒத்துக்கறேன்!”
வயலின்கள் அரசாங்கம் – புகைவண்டியின் கூக்குரல் – தபேலாவின் தவிப்பு – மோகன் ஓட்டம் – ரேவதி ஓட்டம் – அதே டைட்டில் BGM!
= அது தான் மெளனத்தின் ராகம் = ராஜாவின் ராகம் = மெளன ராகம்!
BGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை!
தன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்…
அதே சமயம், தம்பதிகள் பேச வேண்டிய இடத்தில் எல்லாம், இசை மட்டுமே பேச, இந்தத் தம்பதிகள் பேசிக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்க வைக்கும் இசை!
Mute-ல்ல போட்டு, BGM இல்லாம, மெளன ராகம் கடைசிச் சீனை, சும்மா ஒருக்கா பாருங்க…
இளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!
மனித உணர்வுகளை இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்!
அதுவும் ஒரே டைட்டில் இசையை, பல அவதாரங்களில் ஓட விடும் மாயம்!
ஏ, மாயக் காரனே, வித்தைக் காரனே,
ஒலிக்கு அடிமையாக்கும் மகா பாவியே….
இசை லோகத்தில் இருக்கும் இளைய-ராஜாவே……உனக்கு ஸ்தோத்திரம்! மெளன ராக ஸ்தோத்திரம்!!