'தேனிசைத் தென்றல்" தேவாவை சந்தித்த வேளை

நேற்றிரவு ‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுடனான

உணவு விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டேன். அவ்வேளை தேவா அவர்களுடன் எனது மனப் பகிர்வையும், கையோடு கொண்டு போன ‘தேனிசைத் தென்றல்’ தேவா கொடுத்ததில் பிடித்த நூறு என்ற எழுத்துப் பகிர்வையும், நினைவுப் பரிசோடு அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
தேவாவிடம் நான் பேசியதில் இருந்து சில பகிர்வு,
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போகும் இரவு பஸ் “கந்தன் இருக்குமிடம் கந்த கோட்டம்” என்ற உங்கள் கானா பாடலோடு தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் நான் இறங்கிய அந்த நாள் சைக்கிளை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்குப் போகும் போது ஒரு கலியாண வீட்டு ஒலிபெருக்கி “முத்து நகையே முழு நிலவே” என்று பாடியது. ஆகவே நீங்கள் இன்னமும் நம் கிராமங்களில் மறக்கடிக்கப்படாத இசையாக வாழ்கிறீர்கள்.
தேவா என்றால் கானா என்பதைத் தாண்டி நீங்கள் கொடுத்த மெலடி பாடல்கள் ஏராளம். ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒவ்வொரு பாடல் என்று ஆசையாகக் கோத்து வைத்த நூறு பாடல் பகிர்வு இது.
தமிழ்த்திரையிசையில் தொண்ணூறுகள் தேவாவின் மகத்தான பங்களிப்பாக அமைந்தவை.
ஹரிஹரனுக்கு நீங்கள் கொடுத்த பாடல்கள் அளவுக்கு சிறப்பான பாடல்களை அதிகளவு வேறு யாரும் கொடுக்கவில்லை என்பது என் அபிப்பிராயம் என்று சொல்லி முடித்தேன்.
“ஆகா பட்டியலைத் தாருங்களேன் நானே மறந்த பாடல்களை நினைவுக்குக் கொண்டு வர உதவியா இருக்கும்” 
என்று சொல்லி ஆசையோடு பெற்றுக் கொண்டார் தேவா.

திரையிசையில் நூறு திருமணப்பாடல்கள்

இன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வலையுலகம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக எனக்களித்த நண்பர்களில் பெருமைக்குரிய நண்பராக என்னோடு வாரத்தில் ஒரு நாளேனும் தொடர்பில் உள்ளவர்களில் தல கோபி முக்கியமானவர். அவரை நான் தல என்பேன் அவர் என்னை தல என்பார், என்னிடம் அவர் நட்புப் பாராட்ட முக்கிய காரணமே இசைஞானி இளையராஜா தான். இசைஞானி இளையராஜாவின் தீவிர பக்தர்களில் ஒருவர். இது நாள் வரை ராஜா குறித்து எந்த ஊடகங்களில் வந்தாலும் அவற்றை இவர் படிக்காது விடமாட்டார், கூடவே அவற்றை அனுப்பியும் மகிழ்வார். ஒருமுறை இவரின் சகோதரியிடம் பேசும் போது சொன்னார், “கோபி அண்ணன் ராஜாவின் பாடல்களைக் கொடுத்துக் கேட்கச் சொல்வார். கொஞ்சம் அசமந்தமாக இருந்தால் போச்சு அண்ணனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விடும்” என்றார். அவ்வளவுக்கு ராஜாவின் பாடல்களைத் தீவிரமாக நேசிக்கும் வெறியர். இது நாள் வரை நானும் கோபியும் சந்திக்கவில்லை ஆனால் பால்யகாலம் தொட்டே கூடிவரும் நட்பாகவே உணர வைக்கும் அன்பு நண்பரின் திருமண வாழ்வும் இசைஞானியின் பாடல்கள் போலே இனிதாய் அமைய ஆண்டவனை இறைஞ்சுகிறேன்.

ட்விட்டர் வழியாக அறிமுகமானோரில் சகோதர பாசத்தோடு பழகுபவர்களில் @RenugaRain என்ற அன்புச் சகோதரி நேற்றுத் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். அபிராமி அன்னையின் மீது அளவற்ற பக்தி கொண்ட இந்தச் சகோதரி, எனக்கு ஒரு தங்கை இல்லாத குறையைப் பல தடவை உணர வைத்தவர்.  எங்கள் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை ஒரு குழந்தை போலக் கேட்டுக் கேட்டு நம் சகோதரத் தமிழர்கள் மீது வெகு கரிசனையோடு இயங்குபவர் என்பதில் எனக்குப் பல தடவை பெருமைக்குரிய தங்கையாக நினைக்க வைத்தவர். என் தங்கை @RenugaRain மணவாழ்வு பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.
 
இணையம் என்பது மாயலோகம் என்றாலும் என்னைப் பொறுத்தவரை ஆர்ப்பாட்டமின்றி மூடிய திரைகளுக்குள் தமது நட்பையும் நேசத்தையும் கொடுக்கும் உறவுகளை அளித்ததில் பெருமை கொள்கிறேன். 
இந்த வேளையில் இவர்களுக்காக நான் முன்கூட்டியே அனுப்பி வைத்த திருமணப் பரிசாக நூறு பாடல்களின் பட்டியலை மட்டும் பகிர்கின்றேன். எதிர்காலத்தில் சக நண்பர்கள் பலருக்கு இவை உதவியாக இருக்கும். இந்தப் பாடல்களில் சில நேரடியாகத் திருமணத்தை மையப்படுத்திய பாடல்களாக இல்லாவிட்டாலும் திருமணச் சூழலுக்குப் பொருந்தும் வகையில் அமைந்திருக்கின்றன.
 
 முதலில் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள்.
 
 
1. மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே – டிசெம்பர் பூக்கள்
2. நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே – மாமியார் வீடு
3. என்னைத் தொடர்ந்தது கையில் விழுந்தது நந்தவனமா – மாமியார் வீடு
4. காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
5. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் (ஆண்) – பணக்காரன்
6. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் (பெண்) – பணக்காரன்
7. சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் – மீண்டும் கோகிலா
8. குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் – எங்க முதலாளி
9. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா – கலைஞன்
10. மருமகளே மருமகளே எங்க வீட்டு – எங்க முதலாளி
11. தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது
12. வந்தாள் மகாலட்சுமியே – உயர்ந்த உள்ளம்
13. உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே – நல்லவனுக்கு நல்லவன்
14. ஓ வெண்ணிலாவே வா ஓடி வா – ஆனந்தக் கும்மி
15. ஒரு நாளும் உனை மறவாத – எஜமான்
16. நன்றி சொல்லவே உனக்கு – உடன்பிறப்பு
17. கஸ்தூரி மானே கல்யாணத்தேனே – புதுமைப் பெண்
18. கல்யாணச் சேலை – அம்பிகை நேரில் வந்தாள்
19.தேவதை போலொரு பெண் இங்கு வந்தது – கோபுர வாசலிலே
20. மணமகளே – தேவர் மகன்
21. சீவிச் சினுக்கெடுத்து – வெற்றிவிழா
22. வைகாசி மாசத்துல பந்தலொன்னு போட்டு  – நினைவுச் சின்னம்
23.மாடத்துல கன்னி மாடத்துல – வீரா

24. கல்யாண தேனிலா – மெளனம் சம்மதம்

25. மணமாலையும் மஞ்சளும் சூடி – வாத்தியார் வீட்டுப் பிள்ளை
26. பாதக் கொலுசு பாட்டு பாடி வரும் – திருமதி பழனிச்சாமி
27. ராசாத்தி மனசுல இந்த ராசாவின் – செண்பகமே செண்பகமே
28. சோலை இளங்குயிலே அழகா – அண்ணனுக்கு ஜே
29. வான் மேகங்களே – புதிய வார்ப்புகள்
30. குயிலே குயிலே – ஆண்பாவம்
31. புதுமாப்பிளைக்கு – அபூர்வ சகோதர்கள்
32. கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி – வண்ண வண்ணப் பூக்கள்
33. சொக்கனுக்கு வாய்த்த சுந்தரியே – காவல் கீதம்
34. ஆகாய வெண்ணிலாவே – அரங்கேற்றவேளை
35. வீட்டுக்கு விளக்கு – பொறந்த வீடா புகுந்த வீடா
36. நீ பாதி நான் பாதி கண்ணே – கேளடி கண்மணி
37. வந்ததே குங்குமம் – கிழக்கு வாசல்
38. சின்னச் சின்ன வண்ணக்குயில் – மெளனராகம்
39. மங்கலத்துக் குங்குமப்பொட்டு – சாமிப்போட்ட முடிச்சு
40. பொன்னெடுத்து வாரேன் வாரேன் – சாமி போட்ட முடிச்சு
41. சொந்தம் வந்தது வந்தது – புதுப்பாட்டு
42. வந்தாள் வந்தாள் -ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 
43. நீ ஒரு காதல் சங்கீதம் – நாயகன்
44. முத்துமணி மாலை – சின்னக்கவுண்டர்
45. அந்த வானத்தைப் போல – சின்னகவுண்டர்
46. பூமாலையே தோள் சேரவா – பகல் நிலவு
47. தை மாதம் கல்யாணம் – தம்பிக்கு ஒரு பாட்டு
48. கொடுத்து வச்சது – பொன் விலங்கு
49. செம்மீனே செம்மீனே – செவ்வந்தி
50. நம்ம மனசு போல அமைஞ்சு போச்சு – தெம்மாங்கு பாட்டுக்காரன்
51. வானம் இடி இடிக்க – உன்ன நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்
52. சாமி கிட்ட சொல்லி வச்சு- ஆவாரம் பூ
53. தாலாட்டும் பூங்காற்று – கோபுர வாசலிலே
54. சக்கரக்கட்டிக்கு – மெல்ல திறந்தது கதவு
55. சீர் கொண்டு வா – நான் பாடும் பாடல்
56. மணியே மணிக்குயிலே – நாடோடி தென்றல்
57. வாரணம் ஆயிரம் – கேளடி கண்மணி
58. சீதா கல்யாண – சிப்பிக்குள் முத்து
59. சந்தக் கவிகள் பாடிடும் – மெட்டி
60. மெட்டி ஒலி காற்றோடு – மெட்டி

61. ஆயிரம் தாமரை மொட்டுக்களே – அலைகள் ஓய்வதில்லை

62. மாங்குயிலே பூங்குயிலே
63. இரு கண்கள் போதாது – தர்மா
64. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே – வைதேகி காத்திருந்தாள்
65. பாக்கு வெத்தல போட்டேன் பத்தல – மை டியர் மார்த்தாண்டன்

 
பிற இசையமைப்பாளர்கள் இசையில் மலர்ந்தவை
 
66. அழகிய கல்யாணப் பூமாலை தான் விழுந்த்து என் தோளில் தான் – சின்ன மணிக்குயிலே
67. திருமண மலர்கள் தருவாயா – பூவெல்லாம் கேட்டுப்பார்

68. நூறாண்டு காலம் வாழ்க – பேசும் தெய்வம்
69. மணமகளே மருமகளே வா வா – சாரதா
70. யாரோ யாரோடி உன்னோட புருஷன் – அலைபாயுதே
71. தாழம்பூ தனை முடித்து – தேவராகம்
72. சேலை கட்டும் பூவுக்கொரு வாசமுண்டு – கொடி பறக்குது
73. என்ன விலை அழகே – காதலர் தினம்
74. எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று – கேப்டன் மகள்
75. விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் – கிரீடம்
76.  சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது – வைகாசி பொறந்தாச்சு
77.  கும்மியடி பெண்ணே – செல்லமே
78.  சாதிமல்லிப்பூச்சரமே – அழகன்
79. இந்த அழகு தீபம் – திறமை
80. குத்துவிளக்காக – கூலிக்காரன்
81. பாசமலரே – நீதிபதி
82. மரகத வல்லிக்கு – அன்புள்ள அப்பா
83. இந்த மல்லிகைப்பூ – கூட்டுப்புழுக்கள்
84. ஜானகி தேவி – சம்சாரம் அது மின்சாரம்
85. அம்மன் கோயில் தேரழகு – சொந்தம் 16

86. ஒரு பாதி கனவு – தாண்டவம்
87. ரகசியமாய் – டும் டும் டும்
89 தவம் இன்றி கிடைத்த – அன்பு

90. இரு மனம் சேர்ந்து – எங்கே எனது கவிதை
91. இதுதானா – சாமி
92. ராஜயோகம் கூடி வந்து – காதலுடன்
93. கல்யாண வானில் போகும் – ஆனந்தம்
94. ரோஜாப்பூ மாலையிலே – வானத்தைப் போல
95. வைத்த கண் – போஸ்
96. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வரும் தமிழ் போலே – வேதம்
97. சூடித் தந்த சுடர்க்கொடியே – ஆனந்தம் 
98. என்னவோ என்னவோ என் வசம் நானில்லை – ப்ரியமானவளே
99. மல்லிகை முல்லைப் பூப்பந்தல் – அன்பே ஆருயிரே
100. வசந்தத்தில் ஓர் நாள் – மூன்று தெய்வங்கள்

 

போனஸ் பாடல்கள்
1. தூது செல்வதாரடி – சிங்காரவேலன்
2. வைதேகி ராமன் – பகல் நிலவு
3. வாராய் என் தோழி – பாசமலர்
4. ஆனந்தம் பொங்கிட – சிறைப்பறவை

 

திரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது

ட்விட்டர் வழியாக நண்பர் பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள் தானே எனவே ஒரு இருபது பாடல்களைத் தேற்றுவோம் என்று உட்கார்ந்தேன். மடையாக நினைவில் வந்து குவிந்தன பாடல்கள் ஐம்பது, இதையும் தாண்டிப் போனது ஆனால் ஒரு சில அளவுகோல்களை வைத்துக் கொண்டேன், அவை 
1.எண்பதுகள், தொண்ணூறுகளின் முற்பகுதிகளில் அமைந்த பாடல்கள்
2. சோகம் கலக்காத பாடல்கள்(ஒரு சில பாடல்களில் ஒரு சில வரிகள் வந்தாலும் முழுப்பாடலின் இனிமை கருதி விட்டுவைத்திருக்கிறேன்)
3.  பாடல்களில் பலவற்றை நீங்கள் மறந்திருக்கக் கூடும் என்பதால் காணொளி, கேட்கும் சுட்டிகளையும் தந்திருக்கிறேன், ஒரு பாடல் தவிர.
4. அதிக பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இசை என்பதற்குக் கம்பேனி பொறுப்பாகாது 😉
இன்றைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் எண்பதுகளில் வாழ்பவர்கள் எனவே குழந்தைகளின் பிறந்த நாள் வீடியோவில் இந்தப் பாடல்களை இட்டுப் பின்னர் காட்சியோடு பொருத்திப் பார்க்கும் போது அது கொடுக்கும் இனிமையே தனி இல்லையா?
உங்களில் யாராவது இந்தப் பட்டியலை உங்கள் வீட்டுப் பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தும் உத்தேசம் உண்டானால் என்னிடம் அதையும் சொல்லுங்கள், கேட்க ஆவலோடு இருக்கிறேன்.

இதோ பாடல் பட்டியல்
1. ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு – பூவிழி வாசலிலே 
 http://www.youtube.com/watch?v=FBMF84iEQRA

2. ஹே சித்திரச் சிட்டுக்கள் – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
http://www.youtube.com/watch?v=diEA0kbVrnM

3. நல்லோர்கள் உன்னை பாராட்டவேண்டும் – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

http://www.youtube.com/watch?v=T0pyqx0JM-8

4. குயிலே குயிலே குயிலக்கா – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

http://www.youtube.com/watch?v=WS93HTWOUrw

5. பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
http://www.youtube.com/watch?v=ERgis9fP7GI

6. கஸ்தூரிமான்குட்டியாம் – ராஜ நடை
http://www.youtube.com/watch?v=_-WYic5_jb4

7. சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும்  (ஜேசுதாஸ்) – பூவே பொன் பூவே
 http://www.raaga.com/player4/?id=265830&mode=100&rand=0.531273292806448

8. சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும்  (ஜானகி) – பூவே பொன் பூவே
http://www.raaga.com/player4/?id=265829&mode=100&rand=0.4832555182520297

9. பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா – மை டியர் குட்டிச்சாத்தான்
http://www.youtube.com/watch?v=g0GspXSvDkg

10. செல்லக் குழந்தைகளே சிந்தும் வசந்தங்களே – மை டியர் குட்டிச்சாத்தான்
http://www.raaga.com/player4/?id=265437&mode=100&rand=0.8775306588046189

11. சின்னக் குயில் பாடும் பாட்டுத்தான் – பூவே பூச்சூடவா
http://www.youtube.com/watch?v=PQu6j0tX01I

12. குயிலே குயிலே கொஞ்சும் தமிழே – புலன் விசாரணை
http://www.raaga.com/player4/?id=265881&mode=100&rand=0.07334680247999559

13.பாப்பா பாடும் பாட்டு – துர்கா
http://www.youtube.com/watch?v=rzjB-1TMFFY

14. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (சந்தோஷம்) – நீதிக்குத் தண்டனை
http://www.4shared.com/mp3/8GnxORlP/1982__-_neethikku_thandanai_-_.html

15. முத்துமணிச் சுடரே வா – அன்புள்ள ரஜினிகாந்த்
http://www.youtube.com/watch?v=F1uxxI6wUnQ

16. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன் வண்டுகள் – குரு
http://www.youtube.com/watch?v=7OADxk_0nI8

17. அடி ஆடு பூங்கொடியே – காளி
http://www.youtube.com/watch?v=PAsRLK9uCd0

18. கண்ணா நீ எங்கே – ருசி கண்ட பூனை

http://www.youtube.com/watch?v=UJzSLNC1vd8

19. ஆயிரம் பூவும் உண்டு – பாசமழை
http://www.youtube.com/watch?v=h9UE_GRp5qY

20. மண்ணில் வந்த நிலவே – நிலவே மலரே
http://www.youtube.com/watch?v=UmCcv-4uv7k

21. பூப் போலே உன் புன்னகையைக் கண்டேனம்மா – கவரிமான்
http://www.youtube.com/watch?v=LEw6U2BhHDI

22. ராஜாமகள் ரோஜா மகள் – பிள்ளை நிலா
http://www.youtube.com/watch?v=W06C1en5NTw

23. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே (மனோ) – சின்ன தம்பி
http://www.youtube.com/watch?v=qeLN4lIotDA

24. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே (சித்ரா) – சின்ன தம்பி
http://www.youtube.com/watch?v=-Y2hDMBeuDU

25. தூளி மணித் தூளியிலே – ராசா மகன்
http://www.raaga.com/player4/?id=265961&mode=100&rand=0.15018897274939613

26. வாழ்கவே வளர்கவே – முத்துக்கள் மூன்று
http://www.youtube.com/watch?v=5fi1SOuagqw

27. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா (ஜானகி மட்டும் ) – நீங்கள் கேட்டவை
http://www.youtube.com/watch?v=T-12B2Txwmw

28. பேசும் மணி முத்து ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள் – நீல மலர்கள்
http://www.youtube.com/watch?v=WVyqsoiUAfc

29. இந்த வெண்ணிலா என்று வந்தது – டிசெம்பர் பூக்கள்
http://www.youtube.com/watch?v=WVyqsoiUAfc

30. அஞ்சலி அஞ்சலி – அஞ்சலி
http://www.youtube.com/watch?v=sXyjCgR0rAc

31. வானம் நமக்கு வீதி – அஞ்சலி
http://www.youtube.com/watch?v=BkyphEZPfic

32.மழலை என்றும் மாறாத கிளிகள்
http://www.youtube.com/watch?v=XwTv0xATnCU

33. ராஜாமகள் இந்தச் சின்ன ராணி தான் – வாசலில் ஒரு வெண்ணிலா
(இணையத்தில் தொடுப்பு இல்லை)

34. சின்னச் சின்னப் பூங்கொடி – சின்னக் கண்ணம்மா
 http://www.youtube.com/watch?v=mWof0vvM4X0

35. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல – சின்னக்கண்ணம்மா
http://www.youtube.com/watch?v=kHbuo95l-JU

36. தாலாட்டு பிள்ளை ஒன்று – அச்சாணி
http://www.youtube.com/watch?v=qG6nE7BAtCM

37. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு – பூந்தோட்டக் காவல்காரன்
http://www.youtube.com/watch?v=e_fCjI0YTX0

38. தூரி தூரி துமக்க தூரி – தென்றல் சுடும்
http://www.youtube.com/watch?v=JM9BckIO2zE

39. ஏலே இளங்குயிலே என் ஆசைப் பைங்கிளியே – நினைவுச் சின்னம்
http://www.youtube.com/watch?v=c5Uvk6ShT6k

40. வரம் தந்த சாமிக்கு பதமான லாலி – சிப்பிக்குள் முத்து
http://www.youtube.com/watch?v=w0Z-R1GDkNQ

41. தங்க நிலவுக்குள் – ரிக்க்ஷா மாமா
http://www.youtube.com/watch?v=w0Z-R1GDkNQ

42. அன்னக்கிளி நீ சிரிக்க – ரிக்க்ஷா மாமா
http://www.youtube.com/watch?v=WhQpiJe1wjE

43. அழகிய கண்ணே உறவுகள் நீயே – உதிரிப்பூக்கள்
http://www.youtube.com/watch?v=19Olcrlrds0

44. கற்பூர பொம்மை ஒன்று – கேளடி கண்மணி
 http://www.youtube.com/watch?v=J8kayxD7o4w

45. மன்னவா மன்னவா – வால்டர் வெற்றிவேல்
 http://www.youtube.com/watch?v=J8kayxD7o4w

46. பிள்ளை மனம் வெள்ளை மனம் – ஒரு மலரின் பயணம்

http://www.no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Oru%20Malarin%20Payanam/Pilai%20Manam%20Vellai%20Manam.mp3?l=8&m=1

47. பல்லாக்கு வந்திருக்கு ராணி மக ராணிக்கு – கருவேலம் பூக்கள்
http://www.raaga.com/player4/?id=265171&mode=100&rand=0.4545608371469103

48. வண்ணமொழி மானே – சேதுபதி ஐ.பி.எஸ்
 http://www.youtube.com/watch?v=bgdxpuphERA

49. பூ பூப்போல் மனசிருக்கு – ராஜா சின்ன ரோஜா
http://www.youtube.com/watch?v=ds_AQqsIDvc

50.  ராஜா வாடா சிங்கக்குட்டி – திசை மாறிய பறவைகள்
 http://www.youtube.com/watch?v=dSIWyOfJArU

போனஸ் பாடல்
51. மழலையின் மொழிகளில் அழகிய தமிழ் படித்தேன்
 http://www.hummaa.com/music/song/mazhalayin-mozhienil/97731#

52. வாழ்த்து சொல்லுங்கள் – குற்றவாளிகள்
 http://music.cooltoad.com/music/song.php?id=500490&PHPSESSID=1821e4dca3e43db8e6895fe38b2caacf

A Gun & A Ring ஈழத்துப் புலம்பெயர் சினிமா இவ்வார இறுதியில் சிட்னியில்

ஈழத்துப் படைப்பாளிகளின் பேர் சொல்லும் படைப்பாக வெளிவந்து உலக அரங்கில்
ஷங்காய் திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப்பட விழாக்களில் போட்டித்
திரையிடலிலும் அங்கீகரிக்கப்பட்ட பெருமையோடு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது A
Gun & A Ring திரைப்படம்.

போர் தின்ற ஈழத்தின் வடுக்களைக்
கதைகளாக இணைத்து, திரைக்கதையிலும் தொழில் நுட்பத்திலும் வெகு சிறப்பான
படைப்பாக வந்திருக்கும் இப்படைப்பு ஐரோப்பிய நாடுகளை முந்திக் கொண்டு
சிட்னி வாழ் தமிழர்களை நாடி விசேட காட்சிகளாக இவ்வார இறுதியில் Reading
Cinema Auburn இல் சனிக்கிழமை மாலை 6 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4
மணிக்கும் சிறப்புச் சலுகை விலை 15 டாலருக்கு காண்பிக்கப்படவிருக்கிறது.
இவ் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நம்மவரின் படைப்பை நீங்கள்
அங்கீகரிக்க வேண்டுகிறேன்.

A Gun & A Ring திரைப்படம்
குறித்து நான் பகிர்ந்திருந்த இடுகை
http://www.madathuvaasal.com/2013/11/a-gun-and-ring_17.html

A Gun & A Ring படத்தின் இயக்குனர் திரு லெனின் எம்.சிவம் அவர்களுடனான சிறப்பு வானொலிப்பேட்டி ஒன்றை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எடுத்திருந்தேன். இதில் தன்னுடைய திரை அனுபவங்களைப் பகிர்கின்றார், ஒலி வடிவில் கேட்க

இந்தப் படம் குறித்த உருவாகப் பணிகளில் இருந்து சர்வதேச அங்கீகரங்கள்
வரையான அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார் நமது அவுஸ்திரேலியத்
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக படத்தில் முக்கிய பாத்திரமேற்று
நடித்த திரு. கந்தசாமி கங்காதரன் அவர்கள். அதைக் கேட்க
http://youtu.be/pfD08BTLITs

இத் திரையிடலுக்கு சிட்னி வாழ் உறவுகளை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.


“பின்னணி இசையின் பிதாமகன் இசைஞானி இளையராஜா”

“பின்னணி இசையின் பிதாமகன் இசைஞானி இளையராஜா” – கானா பிரபா

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர் நெஞ்சகளில் தன் இசையால் வீற்றிருக்கும் இசைஞானி இளையராஜா சமீப ஆண்டுகளாக தமிழகத்திலும், அதைத்தாண்டித் தமிழர் வாழும் உலக நாடுகளிலும் இசை மேடை கட்டித் தான் இதுநாள் வரை சினிமாவில் அள்ளித்தந்த இசையின் தாற்பரியத்தைக் கண்ணெதிரே காட்டும் போதெல்லாம் நமக்கும் இந்த வாய்ப்புக் கிட்டாதா என்று ஏங்கிய நாட்கள் பல. இன்றைய காலகட்டத்தில் எல்லாமே சுருங்கிவிட்ட பிறகு, இசையையும் ஒரு கீபோர்ட்டில் அடக்கிவிட்டர்கள். ஆனால் வயலின் தொடங்கி ஒவ்வொரு வாத்தியத்துக்குமாக சாரி சாரியாகக் கலைஞர்களை மேடையில் நிரப்பி, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தன் பாடல்களை மீண்டும் இசைக்கும் போது, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு என்ற சொலவாடையையும் தாண்டி, ஒத்திசைவாக எல்லாக் கலைஞர்களும் பிசிறின்றி இசைக்கும் போது தொலைக்காட்சியில் பார்க்கும் போதே மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்.

 அன்னக்கிளியில் தொடங்கிய சாம்ராஜ்ஜியம், தமிழ் கடந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஒரே சமயத்தில் இருந்தது ஒன்றும் அவ்வளவு இலேசுப்பட்ட காரியமல்ல. இதைத்தவிர ஹிந்தி, மராட்டி மொழி சார்ந்த படைப்பாளிகள் இவரைத் தேடி வந்து தம் படைப்புக்கு இசையால் சிறப்பும், பெருமையும் சேர்க்கவேண்டும் என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. ஒருமுறை ஆனந்த விகடனின் மதன் கேள்வி பதில்களில் “இளையராஜா அமர்ந்த சிம்மாசனத்தில் அவரைத் தவிர வேறு யாரும் அமரமுடியாது” என்று சொல்லியிருந்தார். மேம்போக்காக ஒரு படத்தில் வரும் நான்கோ ஐந்தோ பாடல்களின் ஹிட்டை வைத்துப் பார்க்கும் சராசரி ரசிகனுக்கு இதில் முரண்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் ஆயிரமாயிரம் பாடல்களைக் கடந்து அந்தந்தப் படங்களிலே இசைஞானி இளையராஜா இழைத்த பின்னணி இசையை எடுத்து ஆராயப் போனால் வாழ்நாள் போதாது. அவ்வளவுக்கு தான் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் ஒரு இணை இயக்குனராக நின்று செயற்பட்டிருக்கிறார். இங்கேதான் இளையராஜாவுக்கும் மற்றைய இசையமைப்பாளர்களுக்குமான வேறுபாடு முன்வந்து நிற்கும். ஒரு படத்துக்கு இன்னென்ன ஒளிச்சேர்க்கை வேண்டும் என்றோ, உடை, அரங்க அமைப்பு, ஏன் பாடல்கள் வரை சுயமாகத் தீர்மானிக்கும் வல்லமை ஒரு தேர்ந்த இயக்குனருக்கு வாய்க்கலாம் ஆனால் அதையும் கடந்து ஒரு முழுப்படத்தின் எழுத்தோட்டத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரையான அசையும் பிம்பத்துக்கான ஓசையைப் பொருத்தி அந்த ஓசையால் உயிர்கொடுக்கும் பணி என்பதே ஒரு சராசரி இசையமைப்பாளனைத் தாண்டி இசைஞானியின் அதீத வல்லமையின் தாற்பரியத்தைக் காட்டும். எத்தனையோ இயக்குனர்களை நான் வானொலிப் பேட்டி கண்ட போது அவர்கள் பிரமித்துச் சொன்ன விஷயம் இது. நாட்கணக்காக ஸ்கிரிப்ட் எழுதி எடுத்த படத்துக்கு ஒரு சில மணி நேரத்திலேயே தேவையான இசையால் அந்தப் படத்தின் நிறத்தையே மாற்றி இன்னும் பல படி உயர்த்திக் காட்டியிருக்கிறார் இளையராஜா. இதையே ஒரு இசைமேடையில் பிரபல ஹிந்தி இயக்குனர் பால்கி தன்னுடையை “பா” படத்தின் காட்சியை, பின்னணி இசைக்கு முன்பாகவும், இசைக்குப் பின்பாகவுமாகச் செய்துகாட்டி, “இளையராஜாவின் பின்னணி இசைத் துணுக்குகளை வைத்துக் கொண்டே இன்னும் ஏராளம் பாடல்களை இசையமைக்கலாம்” என்று சிலாகித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட படத்தின் ஓரிரு பாடல்களில் இழையோடும் ஆதார சங்கீதத்தை வைத்தே வெவ்வேறு வாத்தியங்களால் வாசித்துப் பின்னணி இசை கொடுக்கும் மாமூல் இசையமைப்பாளர்களை அதிகம் காணலாம். ஆனால் படத்தின் பாடல்களை முன்னிறுத்தாத இசையை எடுத்துக் கொண்டு அந்தப் படத்துக்கான தீம் ஆகக் காட்டியிருக்கிறார் ராஜா, இதெல்லாம் முப்பது வருஷங்களுக்கு முன்பே, ஒரு படத்தின் கலைநுட்பம் பற்றி ரசிகர்களுக்கு அவ்வளவு ஈடுபாடில்லாத சூழலில் செய்து காட்டியிருக்கிறார். இன்றும் நிறம் மாறாத பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை எடுத்துப் போட்டுப் பார்த்தீர்களானால் அந்தத்தப் படங்களுக்குப் பின்னால் செய்து காட்டிய பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.ஒரு குறிப்பிட்ட இசை மெட்டை வைத்து காதல், சோகம், நகைச்சுவை, ஊடல், அழுகை என்று விதவிதமாக வித்தியாசமான வாத்தியங்களில் வேறுபடுத்திக் காட்டுவதில் ராஜா ராஜா தான்.

சமீபத்தில் கைரளி மலையாளத் தொலைக்க்காட்சியில் வரும் கந்தர்வ சங்கீதம் என்ற இசை நிகழ்ச்சியில் இந்தப் படம் குறித்து, பாடகி பின்னி கிருஷ்ணகுமார் வழங்கிய பகிர்வு. இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது “மாயா விநோதினி” என்ற ராகம். இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. பாருங்கள், எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிரிக்க வைத்தது இதைக் கேட்டபோது. ஒவ்வொரு படத்திலும் இயக்குனருக்குச் சரிசமமாக, அல்லது அதற்கும்மேலாக காட்சிகளுக்கு உயிர்கொடுத்ததில் ராஜாவின் பங்கு அளப்பரியது.

இதன்பிறகு கற்பூர முல்லை” திரைப்படத்தை எடுத்துப் போட்டுப் பார்த்தேன். ஒரு காட்சியோடு இழைந்த பின்னணி இசையில் அப்படியே கிறங்கிப் போய்விட்டேன். ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் எவ்வளவு தூரம் ஜீவ நாடியாக அமைகின்றார் என்பதற்கு, இங்கே நான் தரும் ஒரு சிறு பின்னணி இசைக்குளிகை ஒரு சான்று. முறை தவறிப் பிறந்த தன் மகளை ஏற்றுக் கொள்ள முடியாது மூடி மறைக்கும் சமூகத்தில் பிரபலமான தாயும், அதுவரை அவள் தான் தாய் என அறியாத மகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன்னை ஏற்கமறுக்கும் தாயைக் கண்டு மருகும் மகளின் மனக்குமுறலாக இங்கே இசை பிரவாகிக்கிறது, அதுவே மகள் பேச ஆரம்பிக்கும் போது தாயின் பக்கம் தாவி மிரட்சியோடு அலைபாய்கின்றது. இசைஞானி இளையராஜாவின் இத்தகு செல்வங்கள் எவ்வளவோ எண்ணற்ற படங்களில் பின்னணி இசையாக இறைந்து கிடக்கின்றன.

ராமராஜன் இயக்கிய படங்களில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. எண்பதுகளிலே இந்த இரண்டு எல்லைகளையும் கவனித்துக் கொண்டது ராஜாவின் இசை.

நாயகன், ஒரு படைப்பை நேர்மையாகக் கொடுக்கும் போது கிட்டும் அதீத கெளரவம் இந்தப் படத்துக்கும் கிட்டியிருக்கிறது. வெகுஜன அபிமானம் மட்டுமல்ல, Time சஞ்சிகையின் எல்லாக்காலத்திலும் கெளரவித்துக் கொண்டாடக்கூடிய 100 படங்களில் ஒன்று என்ற தனிச்சிறப்பையும் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் இந்தப் படத்துக்கு முன்பே எத்தனையோ சோதனை முயற்சிகளின் மூலம் தன் பாத்திரப்படைப்பில் வித்தியாசத்தைக் காட்டமுனைந்திருந்தாலும், ஒரு பூரணத்துவம் என்பது இந்தப் படத்திலேயே கிட்டியிருக்கிறது. அதற்கு மணிரத்னம் என்ற சிறந்த நெறியாளரின் முக்கிய பங்கு கண்டிப்பாகப் பங்கு போட்டிருக்கிறது. கூடவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம். இவர்களோடு நம்ம இளையராஜா. பாத்திரங்க்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை முழுமையாக நிரப்பித் தன் பங்கை நிறைவாகச் செய்து, அந்த வெற்றிப்புழகாங்கிதத்திலேயே நின்றுவிடாமல் அடுத்த படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இசைஞானியின் பங்கு இந்தப் படத்தின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதிச் சொட்டு வரை இசையால் இழைத்து இழைத்துப் பண்ணப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் நுட்பமாகக் கேட்டிருந்திருக்க முடியாது. ஆனால் ராஜாவின் இசை காலம் கடந்தது என்பதற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் இசைத்துணுக்குகளாகக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கமல்-மணிரத்னம்-இளையராஜா இந்தப் படத்தில் இணைந்தது போன்ற இன்னொரு வாய்ப்பு வந்தாலும் இந்தப் படம் கொடுத்த சிறப்பிற்கு நிகராக இருக்குமா என்பது ஐயமே.

இசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் “மெளன ராகம்” இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று.

எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது. இசைஞானி இளையராஜாவோடு மணிரத்னம் இணைந்து கொண்ட அஞ்சலி, தளபதி போன்ற படங்களின் பின்னணி இசை பற்றிப் பேசப்போனால் ஒரு சில கட்டுரைகளில் முடக்கிப்போட முடியாத அளவுக்குச் சாகித்யம் நிரம்பியிருக்கும்.

“சிந்து பைரவி” இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா என்ற அலை வந்தபோதும் பல்லாண்டுகாலமாக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை அல்லது கிட்டவில்லை. ஆனால் இந்த இரு இமயங்களும் இணைந்த படங்களிலேயே “சிந்து பைரவி” உச்சமாக அமைந்து விட்டது. சங்கராபரணம் அளவுக்கு எங்களாலும் கொடுக்க முடியும் என்று தமிழ்த்திரையுலகம் சிந்து பாடிய படம் இது

கவிஞர் வைரமுத்துவின் பாடல்களோடு, மகாகவி சுப்ரமணியபாரதியார் பாடல்களும் தெலுங்குக் கீர்த்தனைகளுமாக ராஜபாட்டையோடு இருக்கும் இந்தப் படம் இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டாவது தேசிய விருதைக் கொடுத்து விருதுக்குப் பெருமை தேடிக் கொண்டது. பட்டமா, பாட்டா என்று மனதில் பட்டிமன்றம் போட்ட அந்தச் சின்னக்குயில் சித்ராவுக்கு சிறந்த பாட்டுக்குயில் என்று தேசிய விருதுப்பட்டம் கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

 இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளிவந்திருந்தது இதயம், ஒரு வரியில் எழுதிவிடக்கூடிய கதைக்குப் பெரும் பலமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை, சக பாடல்கள். கற்பகம் படத்தில் முழுமையாகப் பெண் குரலில் அமைந்த பாடல்களும் ஒருதலை ராகம் படத்தில் முழுமையாக ஆண்குரல்களில் அமைந்த பாடல்களும் இருந்தது போல இதயம் படத்திலும் முழுமையாக ஆண் குரல்களே பயன்படுத்தப்பட்டிருகின்றன (கோரஸ் விதிவிலக்கு). இதயமே இதயமே என்ற பாடலைப் பிறைசூடன் எழுத, மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பது கவிஞர் வாலி. வெள்ளிவிழாப் படமாக அமைந்த
இதயம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இல்லாவிட்டால் படம் படுதோல்வி கண்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்கு முன்னதாக இயக்குனர் கதிர் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். படத்தின் எழுத்தோட்டம் முதல் இறுதிப்புள்ளி வரை இளையராஜாவின் இசையோட்டமே அடி நாதமாய் அமைந்திருக்கின்றது.

இளையராஜாவின் இசையில் வெளிவந்த படங்களிலே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த “ஆண்பாவம்” முக்கியமானது. வழக்கமாக இப்படியான நகைச்சுவை கலந்த படத்துக்கு வயலின் போன்ற ஒற்றை வாத்தியத்தை வைத்தே பெரும்பாலும் இசையமைப்பாளர் தன் பின்னணி இசையை ஒப்பேற்றிவிடுவார். ஆனால் பாருங்கள் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி கொடுத்த தனித்துவமான இசைக்கலவை ஒவ்வொன்றும் கேட்கும் போது மனதில் புதுப்பூம்புனலை உருவாக்கும் வல்லமை கொண்டது.

ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. கொல்லங்குடி கருப்பாயியை வைத்து மூன்று பாடல்களைப் பாடவைத்தது ஒரு புதுமை.
இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.

கேரளத்தின் பெரும் எழுத்தாளர் M. T.வாசுதேவன் நாயர் எழுதிய கேரளவர்மா பழசிராஜா என்ற காவியத்தை இயக்கியவர் மலையாளத்தின் உச்ச இயக்குனர்களில் ஒருவரான ஹரிஹரன். இசையமைப்பை இசைஞானி இளையராஜா கவனித்துக் கொள்ள, ஒலிச்சேர்க்கையை ஆஸ்கார் விருதைக் கவர்ந்த ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொண்டார். 2009 ஆம் ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா, சிறந்த ஒலிச்சேர்க்கைக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த துணை நடிகைக்கான தேர்வுக்குழுவின் சிறப்பு விருதாக பத்மப்பிரியா ஆகியோருக்கு இந்தப் படம் உச்ச விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்தது.

பழசிராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பில் ராஜாவின் இசையை Hungarian National Philharmonic இன் இசைவல்லுனர்கள் இசைய வைத்தார்கள். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஏற்கனவே பட்ஜெட்டை மீறிய செலவாகிவிட்டது எனவே ஹங்கேரிய இசைக்குழுவை வைத்துப் பண்ணுவதைத் தவிர்த்து விடலாம் என்று இயக்குனர் வேண்டினாலும் ராஜா, “இந்தப் படத்தை இன்னொரு முறை எடுக்கப் போகிறீர்களா, இதிலேயே சிறப்பாகக் கொடுத்து விடுவோமே” என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். ராஜாவின் தளராத அந்த எண்ணம் தான் இப்படத்தின் பின்னணி இசையில் பெரும் உச்சத்தைக் காட்டியிருக்கிறது.

இந்தியத் திரைவரலாற்றில் பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்குக் கிட்டியதும் அவரின் உயிர் ரசிகர்கள் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தி இருந்தால் பின்னணி இசைக்கான தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 20 ஐ ஆவது அள்ளியிருப்பார் எங்கள் ராகதேவன்.

பழசி(இளைய)ராஜாவுக்குக் கிட்டிய விருது கொடுத்த தெம்பில் அந்தப் படத்தை இயக்கிவிட்டுக் காத்திருந்தேன். இரை மீனுக்குக் காத்திருக்கும் கொக்குப் போல அவதானமாக இருந்தாலும் அவ்வளவு சுலபமான வேலையாக அது படவில்லை. காரணம், இசைஞானியின் மற்றைய படங்களில் பின்னணி இசைவரும் காட்சிக்கு மட்டும் தனியானதொரு வசன ஆதிக்கம் குறைவான அல்லது இல்லாத காட்சியமைப்பு இருக்குமாற்போல இந்தப் படத்தில் இல்லை. படம் தொடங்கி முடியும் வரை இண்டு இடுக்கெல்லாம் இசையை நுழைத்து இலாவகமாக சங்கமிக்க வைத்திருந்தார். இந்த இசையைக் கேட்கும் போது பழசிராஜா என்ற பெருங்காவியத்துக்கு இசைஞானியின் எல்லைகடந்த இசைக்கோர்ப்பு எவ்வளவு தூரம் பெரும் பலமாக இருக்கின்றது என்பதை உணரமுடிந்தது. காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்து ஒரு காட்சியிலேயே வரும் பலவிதமான உணர்வுக் கலவைகளையும், காட்சிகளின் வீரியத்தையும் பார்வையற்றவனின் மனக்கண்ணிலே கூடப் பிரகாசமாய்க் காட்டும் உயரிய சங்கீதமாக இந்த இசைக்கலவை விளங்கி நிற்கின்றது. பின்னணி இசையிலே இசைஞானியின் உச்சத்தைத் தொடுவதற்கு இனிமேல் தான் ஆண்டவன் கருணை கூர்ந்து யாரையாவது பிறப்பெடுக்க வைக்கவேண்டும் என்பது போன்றதான உணர்வலையை உண்டுபண்ணும் இசைஜாலத்தின் சங்கமம் இந்தப் படம். சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், வீரத்தில் வெகுண்டெழுந்தும், பலவீனப்பட்டு வீழும் போது முடங்கி முனகியும், பழசிராஜாவின் பெரும்பயணத்தில் அவருக்குத் துணையாக வந்த தளபதி இடைச்சேன குங்கன் போல இசைஞானி இளையராஜாவின் இசை வியாபித்து நிற்கின்றது.

 ஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் “உதயம்” என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது.
ஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான்.

பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது கீதாஞ்சலி என்ற தெலுங்குப்படம் இது இதயத்தைத் திருடாதே என்று தமிழில் மொழிமாற்றம் கண்டது. மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.சிறீராமும் , இசைஞானி இளையராஜாவும் படம் முழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.

எண்பதுகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன? இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் “கீதாஞ்சலி”.

இந்தப் படத்தில் வரும் ஆத்தாடி அம்மாடி பாட்டின் இடையில் வரும் ஆர்மோனிய இசையைத் தன் இசைக் குழுவில் இருந்தவர் சரிவர உள்வாங்காமல் இசையமைக்க, சலித்துப் போய் அந்த ஆர்மோனிய இசையைத் தானே இசையமைத்துப் பாட்டை உருவாக்கினார் இளையராஜா என்று இந்தப்பாடலைப்பாடிய பாடகி சித்ரா சிட்னி சொல்லியிருந்தார்.

ஆவாரம் பூ, படத்தின் ஆரம்ப இசையில் மிளிரும் புல்லாங்குழலும், கிட்டாரும், வயலினும் கொடுக்கும் சங்கதிகளும் சரி, படம் முடியும் வரை அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப ஆர்ப்பரித்தும், அடங்கியும், எழுந்தும், தொடரும் இசை என்னும் அந்த இன்ப வெள்ளம் இப்படம் முடிந்ததும் கூட அசை போட வைக்கின்றது.

இளையராஜாவின் பல நல்ல இசை கொண்ட படங்களின் பாடல்களின் ஒலிப்பதிவு வெகு சுமாராய் கூட இருந்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை சீடியிலும் சரி, படத்தினைப் பார்க்கும் போது வரும் போதும் சரி மிகத் துல்லியமாக வாத்தியங்களின் வேறுபாட்டையும் அவற்றின் சிறப்பான ஒலிநயத்தையும் காட்டி நிற்கின்றன. தனிமை, மையல், காதல், சோகம் என்று விதவிதமான இசைப்படையலாக அமைந்து நிற்கின்றது “ஆவாரம்பூ” பாடல்களின் அணி

“முதல் மரியாதை” தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, தீபன், ரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தனர்.

1986 ஆம் ஆண்டில் தேசிய விருதாக வெள்ளித் தாமரை விருது சிறந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக இப்படத்தின் தயாரிப்பாளர் பாரதிராஜாவுக்கும் கிடைத்திருந்தது.

ஆரோக்கியமான கூட்டணியும், கதைக்களனும் இருந்தால் ராஜாவுக்கு தனி களையே வந்து விடும். அதுவும் தன் நண்பனின் உயிர்த்துடிப்புள்ள படைப்பு, கூடவே வைர வரிகள் என்று இருக்கும் போது ராஜா மட்டும் ஓய்ந்து விடுவாரா?

முதல் மரியாதை போன்ற உயரிய படைப்பில் சிவாஜி, ராதா, பாரதிராஜா, ஆர்.செல்வராஜ், வைரமுத்து என்று அவரவர் பங்கைச் செய்து தனித்தன்மையோடு இருந்தது போல ராஜாவின் இசையிலும் தனித்துவம் இருக்கின்றது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. பின்னணி இசையைப் பொறுத்தவரை குயிலோசை, குழலோசை படமெங்கும் ஆங்காங்கே தூவ மற்றைய கிராமிய வாத்திய இசையும் கலக்கின்றது.

ஏ கிளியிருக்கு, அந்த நிலாவத்தான் போன்ற பாடல்களுக்கு ராஜாவின் குரல் தான் பொருத்தமானது, அது போல் பூங்காத்து திரும்புமா, வெட்டி வேரு வாசம் போன்ற பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி போன்றவர்களால் தான் கிராமியத்தனத்தை பாடல்களில் கொண்டுவர முடியும். அதையே உய்த்துணர்ந்து ராஜா கொடுத்திருக்கின்றார்.
இதே ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்காக “சிந்து பைரவி” திரைக்காக தேசிய விருது பெற்ற இளையராஜா முதல்மரியாதை திரைப்படத்துக்கும் போனசாக பெற்றிருக்கவேண்டும்.

கடலோரக்கவிதை படத்தை ஓடவிட்டு இறுதிக்காட்சியை ஒரு முறை கவனித்துப் பாருங்கள், கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்றது. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.

 பிறவிப்பிணி என்னும் தளையால் கட்டுண்ட ஆன்மா இறைபதம் நாடி இறைமேல் பற்று வைத்து முத்தி நிலையை அடைதல் என்னும் உட்பொருளோடு அமைகின்றது குணா படத்தின் உட்பொருள், இப்படியான படங்களில் ராஜாவின் தேவை எவ்வளவு தூரம் பொருந்தியிருக்கிறது என்பதை “பார்த்தவிழி பார்த்தபடி பார்த்து இருக்க” பாடலில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியில் குணா, அபிராமி மலையுச்சியிலிருந்து பாய்ந்து தம்மை மாய்த்து கூடு விலகல் வரை உணர்த்தப்படும். இதே மாதிரியான கமல் – ராஜா அலைவரிசையின் ஒத்திசைவு ராஜபார்வை, விருமாண்டி, ஹேராம் என்று பட்டியல் நீளும்.

“ஒரு நல்ல வாகான, சிற்பவேலைப்பாட்டுக்கேற்ற பாறை ஒரு சிற்பிக்குக் கிடைக்கிறது. பிறகு அவர் அந்தப் பாறையைக் கொண்டு அழகிய ஒரு சிலையை வடிப்பதற்காக அந்தப் பாறையின் தேவையற்ற பகுதிகளைக் களைந்து விட்டு, தனது கற்பனையால் கைவண்ணத்தால் அந்தப் பாறையை உருமாற்றி எல்லோரும் பாராட்டும் அழகிய சிலையாக எப்படி வடிவமைக்கிறார். அப்படிதான் ஒரு நாவலைத் திரைப்படம் ஆக்கும் கலையும்” இப்படிச் சொல்கிறார் சினிமாவும் நானும் என்னும் தனது நூலில் இயக்குனர் மகேந்திரன்.

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலஷ்மி போன்றோரின் நடிப்பில் வெளிவந்தது. ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரனின் முதல் திரைப்படம்.

கமல்ஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார்.

படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணுச்செட்டியார் “அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல” என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank cheque கை எடுத்து வந்து “மகேந்திரா,என்னை மன்னிச்சுக்கோ” என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன்.

இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் “முள்ளும் மலரும்” என்கிறார் மகேந்திரன்.

தன் காலத்தைத் தாண்டிச் சிந்தித்துப் படைப்பாற்றல் பண்ணியவர்கள் காலம் கடந்துதான் இன்னும் அதிகம் பேசப்படுவார்கள். அதை இளையராஜாவின் இசையாற்றலுக்கும் பொருத்திப்பார்க்க முடியும்.

அவர் சினிமா உலகுக்கு வந்த காலம் தொட்டு இன்று வரை கொடுத்த இசை நுணுக்கங்களை உள்வாங்கும் பக்குவம் எவ்வளவு தூரம் அந்தந்தக் காலகட்டத்து ரசிகர்களுக்கு இருந்திருக்கின்றது என்பது கேள்விக்குரியதொன்று. ஆயிரமாயிரம் பாடல்களால் வசீகரித்த இந்த இசையமைப்பாளனின் முழுமையான பக்கம், பல நூறு படங்களுக்கு இவர் கொடுத்த பின்னணி இசையை விலாவாரியாக எடுத்து ஆராயும் போதுதான் புலனாகும். ஆனால் அதெல்லாம் அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன? அவரோடு பணியாற்றிய இயக்குனர்களுக்கே இளையராஜா தம் படைப்புக்களுக்குக் கொடுத்த சங்கதிகளைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருக்க, இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி இசை ஆவணங்களாகக் கொடுக்கும் நாள் எந்நாளோ என்ற ஏக்கம் அடிமனதில் தானாக வரும். இசைஞானி இளையராஜா காலத்தில் நாம் வாழ்வது என்பது பெருமை அல்ல, தவப்பேறு.

இந்தக் கட்டுரை வரும் மே மாதம் 11 ஆம் திகதி சிட்னியிலும், மே மாதம் 12 ஆம் திகதி மெல்பனிலும் இன்னிசை விருந்து படைக்கவிருக்கும் இசைஞானி இளையராஜாவை வரவேற்கும் வண்ணம் தென்றல் ஆஸ்திரேலியா சஞ்சிகையின் சிறப்பு இதழுக்காக எழுதப்பட்டது. இணையத்தில் இந்தக் கட்டுரையை பக்கம் 11, 12, 13 இல் காணலாம். றேடியோஸ்பதி சார்பில் வழங்கிய வாழ்த்து பக்கம் 6 இல் காணலாம்.

http://thenral.com.au/wp-content/Epaper/april2013/index.html

பதிவர்கள் பார்வையில் 2011 – ஒலிப்பகிர்வு

2011 ஆம் ஆண்டு விடைபெறப்போகின்றது. 2012 ஆம் ஆண்டை வரவேற்கும் வானொலிப் பணியில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வழியாக http://tunein.com/radio/ATBC—Australias-Tamil-Radio-s111349/ தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றேன். இந்தவேளை கடந்த ஆண்டு ட்விட்டர் வழியாகவும், வலையுலகம் வழியாகவும் அறிமுகமான நண்பர்களை வைத்து 2010 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்கிய பாங்கில் இந்த ஆண்டும் 2011 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்க எண்ணியபோது நண்பர்கள் கைகொடுத்தார்கள். அந்த வகையில் நண்பர் அப்பு 2011 இல் தொழில் நுட்பம், நண்பர் கிரி ராமசுப்ரமணியன் 2011 இல் திரையிசையுலகம், நண்பர் சதீஷ் குமார் 2011 இல் இந்தியா மற்றும் தமிழகம் ஆகிய பகிர்வுகளை அளித்திருந்தார்கள். உண்மையில் ஒரு தேர்ந்த வானொலியாளர்களின் பாங்கில் இவர்கள் கொடுத்த இந்தப் பகிர்வுகளுக்கு வானொலி நேயர்கள் மத்தியில் பாராட்டும் கிட்டியதை இவ்வேளை மகிழ்வோடு சொல்லிக் கொள்கின்றேன்.

என்னோடு கூடப் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் இந்த வேளை இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்தை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து ஒலிப்பகிர்வுகளைக் கேளுங்கள்.

2011 இல் தொழில் நுட்ப உலகு – வழங்குவது அப்பு

2011 இல் திரையிசை – வழங்குவது கிரி ராமசுப்ரமணியன்

2011 இல் இந்தியா – வழங்குவது சதீஷ்குமார்

2011 இல் தமிழகம் – வழங்குவது சதீஷ்குமார்

புகைப்படம் நன்றி: http://caricaturque.blogspot.com/

“எழுத்தில் இருந்து சினிமாவிற்கு” இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு


கிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது நேயர்களோடு நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மறுமுனையில் ஒலித்தரம் குறித்த பரிசோதனையை ஹரன்பிரசன்னா முழு அர்ப்பணிப்போடு செய்து உதவினார் 😉

50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.

“எழுத்தில் இருந்து சினிமாவிற்கு” (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக் மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். உண்மையில் சினிமாவை நேசிப்போருக்கும், முனைப்பில் இருப்போருக்கும் இந்தப் பேச்சு கண்டிப்பாகப் பயனளிக்கும். எனவே இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன்.

Download பண்ணிக் கேட்க

அங்கம் 1

அங்கம் 2

நேரடியாகக் கேட்க

அங்கம் 1

அங்கம் 2

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் பேட்டி
நான் வானொலி நிகழ்ச்சி படைக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “முத்துமணி மாலை” என்னும் நிகழ்ச்சியை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகிர்வாக பல்வேறு ஆளுமைகளை வானொலி நேர்காணல் மூலம் அவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொகுப்பாகக் கொடுக்க எண்ணியிருந்தேன். அந்த வகையில் வந்த வாய்ப்புத் தான் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடனான பேட்டி. இந்தப் பேட்டியைச் சாத்தியப்படுத்த உதவியிருந்தவர் எனக்கும் டெல்லி கணேஷுக்கும் பொதுவான நண்பராக ரேகா ராகவன் அவர்கள். எனவே இந்த வேளை அவருக்கும் என் நன்றியைப் பகிர்கின்றேன். நண்பர் ரேகா ராகவன் சொன்னது போல எந்தவிதமான சிரமமும் இல்லாமல் பேட்டி செய்ய மகிழ்வோடு ஒப்புக்கொண்டார் டெல்லி கணேஷ்.

ஒரு நாள் காலை ஏழு மணி வாக்கில் வாக்கிங் போய் விட்டுத் திரும்பிய சூட்டோடு டெல்லி கணேஷின் பேட்டியும் ஆரம்பிக்கின்றது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் உடனேயே எதிர்ப்படும் கேள்விகளுக்குத் தன் ஞாபக இடுக்குகளில் இருந்து மழையாய்ப் பொழிந்தார் டெல்லி கணேஷ்.

கே.பாலசந்தரின் “பட்டினப் பிரவேசம்” திரைப்படத்தில் ஆரம்பித்து இந்த ஆண்டோடு 34 ஆண்டுகளைத் தொடும் டெல்லி கணேஷின் திரையுலக வாழ்வைக் குறிக்கும் இந்தப் பேட்டியும் 34 நிமிடங்களை நிறைக்கின்றது. நிறைவாக ரேகா ராகவன் அவர்கள் முன்னர் டெல்லி கணேஷ் ஹியூமர் கிளப்பில் பகிர்ந்த நகைச்சுவையோடு நிறைவு பெறுகின்றது.

பேட்டியைக் கேட்க

Download பண்ணிக் கேட்க

பேட்டியில் அவர் சொன்ன சுவாரஸ்யங்களில் சில

டெல்லியில் இந்திய விமானப்படையில் வேலை பார்த்தபோது தமிழ் நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தமிழகம் வந்து முழு நேர நாடக நடிகன் ஆனதும், பாலசந்தர் பட்டினப் பிரவேசம் திரைப்படத்தில் அறிமுகமானது.

பசி திரைப்படத்தில் சிறந்த நடிகராக 1980 ஆம் ஆண்டு கிட்டிய போது பரிசு நிகழ்வில் எம்.ஜி.ஆருடன் நிகழ்ந்த சந்திப்பு

சிந்துபைரவி படத்தில் குருமூர்த்தி என்ற மிருதங்க வித்துவான், அபூர்வ சகோதர்கள் படத்தில் வில்லன், அவ்வை சண்முகியில் நகைச்சுவை கலந்த வில்லத்தனப் பார்த்திரங்கள் கிட்டிய அனுபவங்கள்

டெல்லி கணேஷ் பார்வையில் பாலச்சந்தரின் ஆளுமை, தற்காலச் சினிமாவின் போக்கு என்று தொடர்கின்றது டெல்லி கணேஷின் பேட்டி. பேட்டி முடிவில் தன் 34 வருஷ அனுபவங்களைக் கொட்டித் தீர்த்த திருப்தியை அவரின் குரலில் தொனிக்கக் கண்டேன்.

காதலர் தினம் 2010

காதலர் தினம் என்பது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள். இந்தத் தினத்தைக் கேட்டாலேயே பதின்ம வயது நினைவுகள் அப்படியே மீண்டும் ஒரு சுற்று வரும். ஹலோ ஹலோ ஓடாதீங்க, இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை 😉

வானொலியில் “காதலர் கீதங்கள்” என்ற நிகழ்ச்சியை 6 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்திருக்கின்றேன். குறிப்பாக மு.மேத்தா போன்றோரின் கவிதைகளை நறுக்கிச் சிலவரிகளை மட்டும் சொல்லி அதற்குப் பொருந்துமாற்போலப் பாடல்களைப் பகிர்வேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தீம் வைத்துச் செய்திருப்பேன. எனவே காதலர் கீதங்களைப் பகிர்வது என்பது எனக்கு இன்னும் அலாதியான விருப்பு. அந்த வகையில் காதலர் தினம் 2010 சிறப்புப் படையலாக இங்கே வைரமுத்து எழுதிய காதல் கவிதைகளையும் எனக்குப் பிடித்த சில காதல் பாடல்களையும் பகிர்கின்றேன். காதலனாகவும் கவிஞனாகவும் இருந்ததால் வைரமுத்து அணு அணுவாகப் பிளந்து காதலைக் காதலித்து எழுதிய மணியான வரிகள் அவை.

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி

ஒளிவட்டம் தோன்றும்…

உலகம் அர்த்தப்படும்…

ராத்திரியின் நீளம்

விளங்கும்….

உனக்கும்

கவிதை வரும்…

கையெழுத்து

அழகாகும்…..

தபால்காரன்

தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே

கண்ணாடி உடையும்…

கண்ணிரண்டும்

ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்

மூன்று முறை

பல்துலக்குவாய்…

காத்திருந்தால்

நிமிஷங்கள் வருஷமென்பாய்…

வந்துவிட்டால்

வருஷங்கள் நிமிஷமென்பாய்…

காக்கைகூட உன்னை

கவனிக்காது

ஆனால்…

இந்த உலகமே

உன்னை கவனிப்பதாய்

உணர்வாய்…

வயிற்றுக்கும்

தொண்டைக்கமாய்

உருவமில்லா

உருண்டையொன்று

உருளக் காண்பாய்…

இந்த வானம்

இந்த அந்தி

இந்த பூமி

இந்த பூக்கள்

எல்லாம்

காதலை கவுரவிக்கும்

ஏற்பாடுகள்

என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி

இடம் மாறித் துடிக்கும்…

நிசப்த அலைவரிசைகளில்

உனது குரல் மட்டும்

ஒலிபரப்பாகும்…

உன் நரம்பே நாணேற்றி

உனக்குள்ளே

அம்புவிடும்…

காதலின்

திரைச்சீலையைக்

காமம் கிழிக்கும்…

ஹார்மோன்கள்

நைல் நதியாய்ப்

பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும்

சகாராவாகும்…

தாகங்கள் சமுத்திரமாகும்…

பிறகு

கண்ணீர்த் துளிக்குள்

சமுத்திரம் அடங்கும்…

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்

சிலிர்க்க முடியுமே…

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்

புதுப்பிக்க முடியுமே…

அதற்காகவேனும்…

ஆண் என்ற சொல்லுக்கும்

பெண் என்ற சொல்லுக்கும்

அகராதியில் ஏறாத

அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்…

வாழ்ந்துகொண்டே

சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே

வாழவும் முடியுமே…

அதற்காக வேணும்…

காதலித்துப் பார்!

டூயட் திரைப்படத்தில் இருந்து “கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?”

கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?

என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?

பேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா?

என்னைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?

சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?

என்னைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?

பருவத்தின் தோட்டத்தின் முதற் பூவும் நீயா?

என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணுகின்ற ஒளிவட்டம் நீதான்!

என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!

வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்!

என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சு நீதான்!

தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்!

என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்!

காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்!

நான் காதலித்ததால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்

அடுத்து இருவர் படத்திற்காக வைரமுத்து குழைத்த காதல் வரிகள்

உன்னோடு நானிருந்த

ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும்

மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள்

தொட்டணைத்த காலம் தான்

எண்ணூறு ஆண்டுகளாய்

இதயத்தில் கணக்குதடி

பார்வையிலே சில நிமிடம்

பயத்தோடு சில நிமிடம்

கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல்

எல்லாயிடங்களில் முத்தங்கள்

விதைத்த மோகத்தில் சில நிமிடம் (உன்னோடு)

எது ஞாயம் எது பாவம்

இருவருக்கும் தோன்றவில்லை

அது இரவா அது பகலா

அதை பற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க

ஒரு வழியும் தோன்றவில்லை

இருவருமே தொடங்கிவிட்டோம்

இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைந்தேன்

ஆசையினை நீ அணைத்தாய்

ஆடை கலைந்தேன்

வெட்கத்தை நீ அணைத்தாய்

கண்டதிரு கோலம்

கனவாக மறைந்தாலும்

கடைசியிலே அழுத கண்ணீர்

கையிலின்னும் ஒட்டுதடி

உன்னோடு நானிருந்த

ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும்

மறக்காது கண்மணியே

அடுத்து என்னை ஆட்கொண்ட சில காதல் பாடல்களைப் பகிர்கின்றேன்.

முதலில் வருவது “படித்தால் மட்டும் போதுமா” திரைப்படத்தில் இருந்து “பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை” (குரல்கள்: பி.பி சிறீனிவாஸ், டி.எம்.செளந்தரராஜன்)

அடுத்து வருவது “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தில் இருந்து “காதல் ஓவியம் பாடும் காவியம்” (குரல்கள்: இளையராஜா, ஜென்சி)

“நலம் நலமறிய ஆவல்” ஒலிப்பது “காதல் கோட்டை” திரையில் இருந்து (குரல்கள்: கிருஷ்ணராஜ், அனுராதா சிறீராம்)

நிறைவாக “என்ன விலை அழகே” கேட்கும் “காதலர் தினம்” (குரல்: உன்னி மேனன்)

ஏ.ஆர் ரஹ்மான் வழங்கும் உலகின் முதல் இலவச இசைவிருந்து

Sydney Festival 2010 என்ற வருடாந்திர நிகழ்வின் அதிதிக் கலைஞராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் நாற்பது கலைஞர்களை அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் Parramatta என்ற பிராந்தியத்தில் நடாத்த இருக்கும் மாபெரும் இசை நிகழ்வு வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது.

“அமைதிக்கான என் இசை விருந்து” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இந்த இசை நிகழ்வு குறித்துப் பேட்டி அளித்ததோடு, அவுஸ்திரேலியாவில் வாழும் பல்லின மக்களின் சகோதரத்துவத்திற்கான அடையாளமாக இந்த இசை நிகழ்ச்சியை அமைக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்.

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் முதல் பெரும் நகராக சிட்னியும் அதற்கு அடுத்த பெரு நகராக பரமற்றா பகுதியும் விளங்கி வருகின்றது. இந்த பரமற்றா நகரின் மையமாக அமைந்திருக்கும் பெரும் பூங்காத் திடலின் வெட்ட வெளி அரங்கிலேயே நகர சபை ஏற்பாட்டில் முழுமையான இலவச நிகழ்ச்சியாக இந்த இசை விருந்து இடம்பெற இருக்கின்றது.

இந்திய சூப்பர் ஸ்டார் என்ற அறிமுகத்துடன் உள்ளூர் ஊடகங்களின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் வருகைக்கான வரவேற்புக்களும், நிகழ்வு குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கூடவே இந்தப் பிராந்தியத்தின் ஐந்து நட்சத்திர விடுதிகள் ரஹ்மானின் வருகையை முன்னுறுத்தி தமது விளம்பரங்களைச் செய்து வருகின்றன. நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் போக்குவரத்து அதிகார சபை முன் கூட்டியே இந்த விழாவுக்கு வருவோர் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து ஒழுங்குகளை அறிவித்து வருகின்றது.குறித்த நிகழ்வுக்காக நியூசவுத்வேல்ஸ் ரயில்வே இலாகா மேலதிக ரயில்சேவையை ஒழுங்கு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய வரலாற்றில் முன்னெப்போதும் ஒரு ஆசிய நாட்டவருக்கு இவ்வாறான பெரும் எடுப்பிலான முன்னேற்பாடுகளோடு கெளரவமளிப்பது பெருமைக்குரிய விஷயம.
இந்த நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை அவ்வப்போது இந்தப் பதிவில் சேர்த்துக் கொள்கின்றேன்.

மேலதிக இணைப்புக்கள்
Sydney Festival 2010

Parramatta Park